Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, June 1, 2009

சிரு மகனுடன் ஜெனீலியா

தமிழ், தெலுங்கு, இந்தி என ஷன்டிங் அடித்து வரும் ஜெனீலியா, இந்தியில் பிசியாக உள்ள நிலையிலும் இப்போது சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

மும்பையிலிருந்து தமிழுக்கு வந்தவர் ஜெனீலியா டிசவுசா. முதலில் ஹரிணி என்ற பெயரில் நடித்தார். பின்னர் ஒரிஜினல் பெயருக்கே மாறி விட்டார்.



தமிழில் ராசியில்லாத நடிகையாக அறியப்பட்டதால் தெலுங்குக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் இந்திக்குத் தாவி விட்டார். அங்கு முதல் படமே ஹிட் ஆகவே தமிழ், தெலுங்கிலும் ஜெனீலியாவுக்கு புது அந்தஸ்து கிடைத்தது.

இதையடுத்து இப்போது தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்து வருகிறார். தமிழிலும் சில வாய்ப்புகள் பேச்சுவார்த்தையில் உள்ளதாம்.

தெலுங்கில் ஹிட்டான பொம்மரிலு தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற பெயரில் வெளியாகி அதுவும் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது பொம்மரிலுவை இயக்கிய பாஸ்கர், அடுத்து இயக்கப் போகும் புதிய தெலுங்குப் படத்திலும் ஜெனீலியா நடிக்கிறார். இதில் அவருடன் ஜோடி போடுவது சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா. நம்ம ஊர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர்.

தொடர்ந்து இளம் நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதால் படு சந்தோஷமாக இருக்கிறாராம் ஜெனீலியா.

No comments:

Post a Comment