தனது பிறந்த நாளில் விஜய் புதிய கட்சி துவங்குவார் என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் 'டாக்'!
வருகிற ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அன்றைக்கு புதுக்கட்சி மற்றும் நற்பணி அறக்கட்டளை துவங்குதல் போன்றவை குறித்த அறிவிப்புகளை வெளியிடப்போவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தன்னிடம் விசாரித்த நிருபர்களிடம், "என்னுடைய பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங்க. நல்ல செய்தி சொல்றேன்" என்று கூறியுள்ளார் விஜய்.
ஏற்கெனவே மாவட்டந்தோறும் தனது மன்றத்துக்காக அலுவலகம் அமைத்து வருகிறார் விஜய். ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு கல்யாண மண்டபம் அமைக்கப்படும் என்றும் அதன் ஒரு பகுதியை ரசிகன் மன்ற தலைமை அலுவலகமாகப் பயன்படுத்துவது என்றும் முன்பே விஜய் தெரிவித்திருந்தது நினைவிருக்கும்.
இந்தப் புதிய கட்சி அல்லது அரசியல் அமைப்புக்கு நிறுவன தலைவராக மட்டுமே இருப்பாராம் விஜய். நேரடியாக தலையிட மாட்டாராம். பொதுச் செயலாளர், தலைவர் என்ற முக்கிய பொறுப்புகளை அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் வசமே விட்டுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. கட்சி யின் லெட்டர்பேட் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தவறாமல் எம்ஜிஆர் படம் இடம்பெறுமாம்.
தற்போது அவர் நடிப்பில் உருவாகும் வேட்டைக்காரன் படம் முழுக்க முழுக்க எம்ஜிஆர் படப் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
பாடலாசிரியர் கபிலன் விஜய் க்காக இந்தப் படத்தில் ஸ்பெஷலாக எழுதியிருக்கும் கீழ்வரும் பாடல்தான் இனி விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தரப் போகும் பாடல் என்கிறார்கள்.
அந்தப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது:
“உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கிடைக்கணும்.
அவன் அனுபவிச்ச மிச்சம்தான்
ஆண்டவனுக்கே படைக்கணும்…”
எப்படி!?
No comments:
Post a Comment