கூகிள் தனது புதிய மொழிபெயர்ப்பு இயந்திர கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் (Google Translator toolkit) இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை இதில் சேர்த்துள்ளனர். கூகிள் மொழிபெயர்த்தல் (Google Translate) சேவையில் தமிழ் மொழியியை சேர்க்கவில்லை.
இது போல பல மொழிகளை கூகிள் தனது மொழிபெயர்த்தல் சேவையில் சேர்க்கவில்லை. இப்பொழுது கூகிள் மொழிபெயர்ப்பு வேலையை கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் (Google Translator toolkit) மூலமாக பயனாளர்களிடமே அளித்துவிட்டது, இதற்க்கு முக்கிய காரணம் ஒரு ஆங்கில சொல்லுக்கு நிறைய தமிழ் வார்த்தைகள் உள்ளன, இதனால் ஒரு ஆங்கில வார்த்தைக்கு எது சிறந்த எளிதான தமிழ் சொல் என்பதை(Translation Search Resultல்) நாமே வாக்களிக்கலாம்.
இந்த கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் மூலமாக உங்கள் ஆங்கில பதிவேடுகளை (MS WORD .doc, Open Document Text .odt, HTML .html, Plain text .txt, Rich text .rtf) மேலற்றம் செய்து கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் மூலமாக மொழி்பெயர்த்துக் கொள்ளலாம்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் உங்களுக்கு பிடித்த இணையதளம் அல்லது விக்கீபீடியாவில் உள்ள கட்டுரைகள் அல்லது knol என்று சொல்லப்படும் அறிவுத் தளத்தை மொழிபெயர்க்கலாம்.
குறிப்பு : கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவி கூகிள் மொழிபெயர்த்தல் (Google Translate) சேவையில் உள்ள மொழிகளுக்கு மட்டுமே முழுமையாக மொழிபெயர்த்துக் கொடுக்கும்.
நீங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தால் குறிப்பிட்ட சொற்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்படும்.
உங்கள் ஆவணங்கள் அல்லது கோப்புகளை மேலற்றம் செய்வதற்க்கு முன்னால் கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் உள்ள sharing மற்றும் glossaries பற்றி பார்ப்போம்.
Sharing : மேலே காண்பிக்கப்பட்டுள்ள படத்தில் sharing என்ற தேர்வை பார்க்கலாம் இதில் global shared TM என்ற தெரிவை தேர்ந்தெடுத்தால் நீங்கள் கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் மூலமாக நீங்கள் உபயோகப்படுத்தும் தமிழ் வார்த்தைகளை பொதுவான இடத்தில் வைத்துவிடுவர். நீங்கள் உபயோகப்படுத்தும் தமிழ் வார்த்தைகளை தனிமையாக வைத்துக்கொள்ள நீங்கள் புதிய Translation Memoryயை உருவாக்க வேண்டும்.
குறிப்பு : Global shared TM என்ற தெரிவை தேர்வு செயவ்தே நல்லது இதனால் பலர் தங்களுக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளை மொழிபெயர்க்கும் போது பகிர்ந்து கொள்ளலாம்.
Glossary: இதன் மெய்பொருள் சேகரிக்கப்பட்ட வரைமுறை என்று அர்த்தம். நீங்கள் ஆங்கில வார்த்தைகளுக்கு இனையான தமிழ் வார்த்தைகள் கொண்ட CSV கோப்பு உங்களிடம் இருந்தால் இதை மேலற்றம் செய்து நீங்கள் மொழிபெயர்க்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். CSV கோப்பை (Custom Glossaries) எப்படி உருவாக்கி பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் பணியிடம் – (Google Translator toolkit Workbench)
குறிப்பு :மேலே உள்ள படத்தை பெரிதாக காண படத்தின் மீது சொடுக்கவும்.
எங்களது ஆங்கில வலைத்தளத்தை (www.tothetech.com) நாங்கள் கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் மேலேற்றி ஆங்கிலத்தில் இருந்த்து தமிழில் மொழிபெயர்க்கும் போது நாங்கள் சில அற்புதமான அம்சங்களை கண்டோம் அதை இங்கு விவரிக்கவுள்ளோம்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் பணியிடத்தில் இரண்டு சாளரங்கள் உள்ளன இவற்றில் முதல் சாளரம்(இடது) அசல் ஆங்கில எழுத்துக்களை கொண்டது(Original English Text) இரண்டாவது சாளரத்தில்(வலது)ஆங்கிலத்தில் இருந்த்து தமிழுக்கு(English to Tamil) மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துக்கள் இருந்த்தன. இரண்டாவது சாளரத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு எழுத்து பெட்டி உள்ளது இதில் முதல் சாளரத்தில் உள்ள ஆங்கில வார்த்தைக்கு இனையான தமிழ் வார்த்தைகள் இருந்தால் காண்பிக்கும். அது மட்டும் இல்லாமல் ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிறைய தமிழ் சொற்கள் இருந்த்தால் அவற்றையும் காண்பிக்கும்.
குறிப்பு : இந்த அம்சத்தை அனுபவிக்க showtoolkit என்ற பொத்தானை செயல்பட வைக்க வேண்டும்.
(எடு.கா) எங்களது ஆங்கில வலைதளத்தில் Internet என்ற சொல்லுக்கு நிறைய தமிழ் வார்த்தைகளை மேலே காண்பிக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள Translation Search Resultல் காணலாம். அத்துடன் சிறந்த தமிழ் எழுத்துக்களை வாக்களிக்கலாம்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியின் பணியிடத்தில் இரண்டாவது சாளரத்தில் உள்ள வெள்ளை நிற எழுத்து பெட்டியில் Previous மற்றும் Next சொடுக்குகள் இருக்கும் இதை சொடுக்கினால் அடுத்த சொல் அல்லது அதற்க்கு முன் உள்ள சொல்லுக்கு உங்களை அழைத்து செல்லும்.
குறிப்பு :மேலே உள்ள படத்தை பெரிதாக காண படத்தின் மீது சொடுக்கவும்.
ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்கள் உங்களுக்கு மொழிபெயர்க்கப்படாமல் இருந்தால் அதை நீங்களே மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
மேலே உள்ள படத்தில் Edit என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு Find and Replace என்ற தெரிவு கிடைக்கும்
இதில் Find என்ற களத்தில் உங்களின் ஆங்கில எழுத்துக்களை இட்டு பிறகு Replace என்ற களத்தில் அதற்க்கு இனையான தமிழ் வார்த்தையை இட்டு Translated Text மற்றும் Match case ஆகிய தெரிவை தேர்தெடுத்த பின்னர் Replace அல்லது Replace All பொத்தானை அழுத்தினால் அந்த இரண்டாவது சாளரத்தில் உள்ள குறிப்பிட்ட ஆங்கில வார்தைகளை தமிழ் வார்தகைகளாக மாற்றிவிடலாம்.
இப்படி செயவதன் மூலம் கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் நீங்கள் புகுத்திய ஆங்கில வார்த்தைகளுக்கு இனையான தமிழ் வார்த்தைகள் அனைத்து பயனாளர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
இதனால் விரைவில் கூகிள் மொழிபெயர்த்தல் (Google Translate) சேவையில் நம் தாய் மொழியை கொண்டு வந்து விடலாம்
குறிப்பு : தொழில்நுட்ப பதிவுகளை எழுதுவோர் இந்த கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர கருவியில் ஆங்கில வார்த்தைகளுக்கு இனையான தமிழ் சொற்களை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
No comments:
Post a Comment