Please Visite here - www.cenimagallary.blogspot.com

Tuesday, March 31, 2009

ஏப்ரல் 1 -முட்டாள்களான அறிவாளிகள் தினம்!

ர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது.
அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் 'தான் ஒரு முட்டாள்' என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு 'அறிஞனாக' வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது."The first of April is the day we remember what we are the other 364 days of the year " - Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்."முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், " பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார்.இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள். எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் 'பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஸ்காட்லாந்தில் April Fool's Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்", இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர். பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர். 1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.. ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.(ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்மை நம் அரசியல்வாதிகள் முட்டாள்களாக்கி வருவதால் பேசாமல் தேர்தல் நாளையே ஏப்ரல்-1ம் தேதிக்கு மாற்றிவிட்டால் என்ன?!)

மோட்டரோலா விளம்பரம்: நடிக்க ரகுமானுக்கு ரூ. 28 கோடி!

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு தனது சம்பளத்தை ரஹ்மான் ஏற்றாவிட்டாலும், சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் தானாகவே அவர் சம்பளத்தை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டன.உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இதுவரை தோன்றி வந்த மோட்டரோலா செல்போன் விளம்பரத்தில் விளம்பர மாடலாக நடிக்க மட்டும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.28 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.உலகின் 2வது மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டரோலா. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் சர்வதேச விளம்பர மாடலாக முன்னணி கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இருந்து வந்தார். அவரது ஒப்பந்த காலம் இப்போது முடிவடைந்துவிட்டது. இந் நிலையில், புதிய விளம்பர மாடலாக ஏ.ஆர். ரகுமானை மோட்டரோலா நியமித்துள்ளது.
அந்நிறுவன விளம்பரங்களில் தோன்ற டேவிட் பெக்காம் பெற்ற தொகை ரூ.22 கோட பெற்றுவந்தார். இப்போது அவரது இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம் ஏ.ஆர். ரகுமானுக்கு மோட்டரோலா நிறுவனம் ரூ.28 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளது. இது பெக்காம் பெற்றதைவிட 20 சதவிகிதம் அதிகம். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 2 ஆஸ்கர் விருதுகளை ரகுமான் பெற்ற பிறகு, அவரது விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. அவரை ஒப்பந்தம் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

Monday, March 30, 2009

கூகிள் இன் புதிய லோகோ தொடர்பான பதிவினை பார்க்கவேண்டுமா இங்கேசொடுக்கவும் .Google இன் வித விதமான Logo கள்...

விஜய்.. அனுஷ்கா சந்தோஷம்!

விஜய்யுடன் நடிப்பது சந்தோஷமாகவும், அனுபவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறியுள்ளார் அனுஷ்கா.

ரெண்டு படத்தோடு தெலுங்குக்குப் போய் விட்டார் அனுஷ்கா. இப்போது அங்குள்ள ஹீரோயின்களை உண்டு, இல்லை என பண்ணி வருகிறார் தனது அருந்ததி மூலம்.

தமிழிலும் அருந்ததீ என்ற பெயரில் அப்படம் ரிலீஸாகி அனுஷ்காவின் பக்கம் கோலிவுட் பார்வையைத் திருப்பியுள்ளது.

அவரைத் தேடி தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்ப் பட வாய்ப்புகளும் நிறைய வருகின்றன.

தற்போது தெலுங்கில் மகேஷ்பாபுவுடனும், தமிழில் விஜய் மற்றும் கார்த்தியுடனும் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா.

விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. வேட்டைக்காரன் அனுபவம் வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறதாம் அனுஷ்காவுக்கு.

விஜய்யுடன் நடிப்பது சுலபமல்ல. அவர் சிறந்த நடிக்ர. அவரது பன்ச் ரொம்பப் பிரபலமானது. அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை என்கிறார் அனுஷ்கா.

மகேஷ்பாபுவுடன் நடிக்கும் தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது. மகேஷ்பாபுவுடன் நான் நடிப்பது இதுவே முதல் முறை. ஜல்சா, அத்தடு ஆகிய பிரபல படங்களை இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்தான் இதை இயக்குகிறார். இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறார் அனுஷ்கா.

பிரபாஸுடன் நடித்த படம் ரிலீஸுக்குத் தயாராகி விட்டதாம். அடுத்து கோபிசந்த்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.

மொத்தத்தில் கல்லாப் பெட்டி புல்லாயிட்டிருக்குன்னு சொல்லுங்கோ..

மறுபடியும் எனக்கு ஆஸ்கர் கிடைக்க 10 ஆண்டுகள் ஆகும்:ஏ.ஆர்.ரகுமான்


மும்பை குடிசை பகுதியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட `ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்தவர், ஏ.ஆர்.ரகுமான். அந்த படத்தில் இடம்பெற்ற `ஜெய் ஹோ' பாடலுக்கு உள்பட 2 ஆஸ்கார் விருதுகள் அவருக்கு கிடைத்தன.


பிரபலமான அந்த பாடலை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதற்கான உரிமையை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.

நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஜெய்ஹோ பாடலை காங்கிரஸ் கட்சி பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறதே?

(அந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த ரகுமான்)ஜெய் ஹோ பாடல் அனைவருக்கும் சொந்தமானது என்று

தெரிவித்தார்.


ஆஸ்கர் விருது வாங்கித்தந்த ஸ்லம்டக் பற்றி?


"எனக்கு கிடைத்த ஆஸ்கார் விருதுகள், இந்திய இசைக்கு அதிக மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளித்து
உள்ளது. இங்குள்ள இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றது உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது.

இந்திய குடிசை பகுதி பற்றி அந்த படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளது போல், ஒவ்வொரு நாட்டிலும் `இருட்டுப்பகுதி'கள் உள்ளன. அவற்றை வெளிப்படுத்தும்போதுதான் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆஸ்கர் விருதுக்கே பரிந்துரைக்கப்பட்டு விருதுகளையும் குவித்துவிட்டது. எத்தனை காலம் இப்படத்திற்காக உழைத்தீர்கள்?

பொதுவாக படங்களுக்கு இசையமைப்பதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால், உலகின் உயரிய சினிமா விருதை பெற்றுத்தந்த இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக நான் 3 வாரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டேன்.


இந்த படத்தின் ஒலிக்கலவைக்காக மற்றொரு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து, ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்படும் `புளூ' என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறேன். வாய்ப்பு, நேரம் கிடைப்பதை பொறுத்து மலையாளப்படங்களுக்கு இசையமைப்பது பற்றி முடிவு செய்வேன். வருங்காலத்தில் அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.


ஆஸ்கர் விருதுக்கு பிறகு சம்பளத்தை அதிகப்படுத்திவிட்டார்களா?

ஆஸ்கார் விருதுக்குப்பிறகு எனது சம்பளத்தை நான் கூட்டிக்கொள்ளவில்லை. மாறாக, பொருளாதார மந்த நிலை காரணமாக, சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்துக்கொள்ளும்படி என்னை கேட்டுக்கொண்டு உள்ளனர். மீண்டும் எனக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவேண்டும் என்றால் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்.''

முடிவுக்கு வந்தது அசின் விவகாரம்: உதவியாளர் வாக்குமூலம்

நடிகை அசின் உதவியாளர் நல்லமுத்துக்குமார் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது.

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் உள்ள அவரிடம் பொன்னேரி டி.எஸ்.பி. தொலைபேசியில் பேசினார்.


அப்போது அவர், நான் அசினிடம் பணம் கேட்டது உண்மைதான். அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.


மேலும் தமிழ்நாடு வந்து நேரில் போலீசில் சரணடைவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.


நடிகை அசின் உதவியாளர் நல்லமுத்துக்குமார் காணாமல் போய்விட்டதாக அவரது தாயார் சுடலைவடிவு சென்னை செங்குன்றம் போலீஸில் புகார் செய்தார்.


இதையடுத்து போலீசார் அசினை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நல்லமுத்துக்குமார் வேலையை விட்டுச்சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.


இப்போது எங்கேயோ தலைமறைவாக இருந்துகொண்டு என்னிடம் 15லட்சம் பணம் பறிக்க நாடகமாடுகிறார் என்று தெரிவித்தார்.


இந்நிலையில் சுடலை வடிவு என் மகனுக்கு அசின் குடும்பத்து ரகசியங்கள் தெரியும். அதனால்தான் அவனை எங்கேயோ கடத்தி வைத்திருக்கிறார்கள்.


அவனை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் என்று செங்குன்றம் சோழவரம் போலீஸில் மீண்டும் புகார் செய்தார்.இதையடுத்து சோழவரம் போலீஸ், இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை ஒன்று அமைத்தது.


இந்த தனிப்படை மும்பை சென்று நல்லமுத்துக்குமார் எங்கே என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அங்கு நடந்த விசாரணையிலும், லண்டனில் இருந்த அசினிடம் தொலைபேசியில் விசாரணை செய்த போதும் நல்லமுத்துக்குமார் ஆந்திராவில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீஸ் ஆந்திரா விரைந்தது.

போலீசார் செல்போன் டவர் வைத்து சோதனை செய்தபோது சென்னையில் இருந்து நல்லமுத்துக்குமார் போனில் பேசி இருப்பது தெரிய வந்தது. மேலும் சென்னையில் இருந்து நேராக நல்லமுத்துக்குமார் திருப்பதி சென்று உள்ளதும் மும்பையில் இருந்து அவரது நண்பர்கள் நேரடியாக திருப்பதிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.


தீவிரத்தேடுதலில் அவர் ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

நடிகை அசின் மீது எந்த குற்றமும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

Software களை Install பண்ணும் default Path ஐ மாற்றுதல்...பொதுவாக நமது கணணியின் Windows ஆனது C drive இல் install பண்ணப்பட்டிருக்கும். நாம் வேறு மென்பொருட்களை install பண்ணும் போது அது default ஆக C:\Program Files யையே தெரிவு செய்யும். இதனால் C drive இல் Free Space குறையும் இதனால் கணணியின் வேகம் குறைவடையும் . அடிக்கடி Low disk Space எனும் Message தோன்றும். இதில் இருந்து விடுபட நம்மில் சிலர் install பண்ணும் போது C தவிர்ந்த வேறு drive இல் install பண்ணுவார்கள் இதற்காக ஒவ்வொரு முறை install பண்ணும் போதும் மற்றைய drive ஐ தெரிவுசெய்து install பண்ணுவார்கள்


இந்த தொல்லையில் இருந்து விடுபட registry இக்குள் சென்று ஒருதரம் சிறிய மாற்றம் செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் program install பண்ணும் போதும் அது நாங்கள் மாற்றிய drive யையே default ஆக எடுக்கும்.
இதற்கு முதலில் Start சென்று regedit என type செய்து enter பண்ணவும்.

பிறகு பின்வரும் ஒழுங்கு முறையில் செல்லவும்
HKEY_LOCAL_MACHINE----> SOFTWARE---> Microsoft---> Windows---> CurrentVersion

CurrentVersion என்ற Folder க்குள் இருக்கும் Value களில் ProgramFilesDir என்ற value இருக்கும் இது C:\Program Files என set செய்யப்படிருக்கும் அதில் Mouse வைத்து right click செய்து modify என்பதை click செய்து Value data என்பதில் உங்களுக்கு விருப்பமான drive இல் உள்ள Folder இன் path ஐ Select பண்ணிய பின் OK செய்து வெளியேறவும்.

Saturday, March 28, 2009

இணையத்தில் புதிது - ரியா நுட்பம்

இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.

முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.

RIA - Rich Internet Applications

RIA - Rich Internet Applications

இப்போது இணைய தளத்திலேயே நேரடியாக தட்டி அதனால் விளைந்த கோப்பு ஒன்றை மட்டும் கணினியில் தரவிறக்கிக் கொள்கிறோம்.

http://www.zoho.com/

http://docs.google.com/

சில காலம் முன்பு வரை புகைப்படங்களில் மாற்றங்கள் தேவையெனில் அதற்காக போட்டோஷாப் போன்ற மென்பொருளைக் கணினியில் நிறுவி அதைப் பயன்படுத்தினோம்.

http://www.picnik.com/

http://www.picjuice.com/

இப்போது அதற்கு மாற்றாக இணையத்திலே புகைப்படங்களை ஏற்றி எடிடிங் வேலைகளை முடித்து இறுதியாகக் கிடைக்கும் புகைப்படத்தை நமது கணினிக்கு மாற்றிக்கொள்கிறோம்.

இப்போது ஒரு படி மேலே சென்று வீடியோக்களையும் இணையத்தளத்தில் ஏற்றி அங்கேயே எடிடிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது.

http://jaycut.com/

http://www.jumpcut.com/

இதற்குப் பெயர்தான் ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ். செல்லமாக ரியா.

எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கி நிறுவ வேண்டிய அவசியமின்றி அனைத்துச் செயல்களையும் இணைய தளத்திலேயே செய்ய வழிவகை வகுத்த புதிய தொழில்நுட்பமே RIA.

கலைச்சொற்கள்:
மைக்ரோசாப்ட் வேர்ட் - Microsoft Word
போட்டோஷாப் - Adobe Photoshop
புகைப்படத்தில் மாற்றம் செய்தல் - Photo Editing
எடிடிங் - Editing
ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் - Rich Internet Applications


THANK TO - tamilnenjam

அண்மையில் நடந்த

Sidney Slayden’s Fashion Show. (சிட்னி ஸ்லேடன் பேஷன் ஷோ)


பார்வையிட இங்கே சொடுக்கவும் .

'வைகை'யை சூடாக்கிய நமீதா!

வைகை பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை பேரையும் படு சூடாக்கி விட்டார் நமீதா - தனது கவர்ச்சிகரமான ஆடையால்.

பிபிஜி என்டர்பிரைசஸ் தயாரித்துள்ள படம் வைகை. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு நடந்தது.

ஏகப்பட் நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர். நமீதாவும் பங்கேற்றார். நமீதா வரும் வரை எல்லாம் நல்லாதான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் உடலை இறுக்க ஒட்டிய டைட்டான டாப்ஸ் மற்றும் துப்பட்டாவில் நமீதா அரங்குக்குள் என்டர் ஆனவுடன், அந்த ஏரியாவே சூடாகிப் போனது.

கவர்ச்சிகரமாக வந்த நமீதா, ரத்தினச் சுருக்கமாக நிகழ்ச்சியில் பேசினார். ஆடியோவையும் வெளியிட்டார்.Namithaராமநாராயணன், சிவசக்தி பாண்டியன், அழகன் தமிழ்மணி, விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் நாயகன் பாலா. இவர் கலைஞர் டிவியில் இடம் பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியின் 2வது சீசனின் வெற்றியாளர் ஆவர். அவருக்கு ஜோடி போட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த விசாகா.

Namitha

சுந்தரபாண்டி இயக்கியுள்ளார் - இவருக்கு இது முதல் படம். சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர்.

மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாம் வைகை படத்தின் கதை. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு இப்படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்

Thursday, March 26, 2009

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடுஇந்தியாவில் நடப்பதாக இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. அங்கு அடுத்த மாதம் 18 ந் தேதி தொடங்கி மே மாதம் 24 ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. 8 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 59 போட்டிகள் நடைபெறுகின்றன. மே 22 மற்றும் 23 ந் தேதிகளில் அரை இறுதி போட்டிகளும் 24 ந்தேதி ஜோகன்ஸ் பர்க் நகரில் இறுதி போட்டியும் நடைபெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 தடவை மோத வேண்டும். 14 போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஆடும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு வரும்.

கேப்டவுன், ஜோகன்ஸ்பர்க், டர்பன், பிரிடோரியா, கிழக்கு லண்டன், கிம்பெர்லி, பிளோம்பான்டின், போர்ட் எலிசபெத் ஆகிய 8 நகரங்களில் போட்டி நடக்கும்.

இதில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் டர்பன் நகரில் 16 போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரிட்டோரியாவில் 12 போட்டிகளும், ஜோகன்ஸ்பர்க், கேப்டவுன் ஆகிய இடங்களில் தலா 8 போட்டிகளும் போர்ட் எலிசபெத், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் 4 போட்டிகளும், பிளோம்பான்டின், கிம்பெர்லி ஆகிய இடங்களில் தலா 2 போட்டிகளும் நடக்கின்றன.

பெரும்பாலான நாட்களில் தினமும் 2 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு முதல் போட்டியும், இரவு 8 மணிக்கு 2 வது போட்டியும் நடக்கிறது.

18 ந்தேதி கேப்டவுன் நகரில் முதல் நாள் போட்டிகள் நடக்கிறது. இதில் 4 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்து 8 மணிக்கு நடக்கும் போடடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணிகள் மோதுகின்றன.

வெப் ஈ-மெயில் சாதகங்களும் பாதகங்களும்உங்கள் கம்ப்யூட்டரிலிருந்தே இயக்கப்படும் இமெயில் வசதியை ஒரு சிலர் டெஸ்க் டாப் இமெயில் வசதி என்றும் இணைய தளம் சென்று இயக்கும் வசதியை வெப் அடிப்படையிலான இமெயில் வசதி என்றும் அழைக்கின்றனர். டெஸ்க்டாப் இமெயில் புரோகிராம்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் வாங்கும்போதே பதிந்து தரப்படுகின்றன.

இவற்றில் உங்கள் அக்கவுண்ட் தகவல்களைக் கொடுத்து இயக்க வேண்டியது உங்கள் வேலை. அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மொஸில்லாவின் தண்டர்பேர்ட் மற்றும் இடோரா போன்றவை டெஸ்க் டாப் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களாகும். இதற்கு நேர் மாறாக உள்ள இணையம் சார்ந்த இமெயில் சேவைகள் என எடுத்துக் கொண்டால் யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவற்றை எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். இந்த வசதியைப் பெற நீங்கள் இந்த இணைய தளங்களுக்குச் சென்று அதில் புதிய அக்கவுண்ட் திறந்திட தகவல்களைத் தர வேண்டியதுதான்.

அந்த
தளங்கள் கேட்கும் சில கேள்விகளுக்குப் பதில் தர வேண்டியதிருக்கும். அதன்பின் உங்களுக்கான மெயில் பாக்ஸும் இமெயில் வசதியும் தரப்படும். உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட்டில் இணைத்து இந்த தளம் சென்று உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து உங்களுக்கான மெயில் பாக்ஸைத் திறந்து உங்களுக்கான கடிதங்களைப் படிக்கலாம்; பதில் அளிக்கலாம்; அழிக்கலாம்; வேறு ஒரு போல்டருக்கு மாற்றலாம். ஆனால் இந்த செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். ஆனால் டெஸ்க் டாப் இமெயில் மற்றும் இணைய இமெயில் ஆகிய இரண்டிலும்

பல விஷயங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். இன் பாக்ஸ், அவுட் மற்றும் ட்ராஷ் பாக்ஸ், எழுத்து செட் செய்வது, பிழை திருத்தி, கடிதம் எழுதி சேவ் செய்து அனுப்புவது என அனைத்து வசதிகளும் ஒன்றாகத்தான் இருக்கின்றன; கிடைக்கின்றன; செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும் வெப் சார்ந்த இமெயில் சேவை முழுமையானதுதானா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. அவற்றை இங்கு ஆய்வு செய்திடலாம்.


சாதகங்கள்


1. வெப்மெயில் சார்ந்து பயன்படுத்த எந்த சாப்ட்வேர் புரோகிராமினையும் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. எத்தனை ஆண்டுகள் அந்த இமெயில் சேவையைப் பயன்படுத்தினாலும் எதனையும் டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் பதிய வேண்டியதில்லை. எல்லாமே நம் வெப் பிரவுசர் தொகுப்பு வழியாக நடைபெறுகிறது. இதனால் சில நாச வேலை செய்திடும் ஸ்பைவேர்களிலிருந்து தள்ளி நிற்க முடிகிறது.


2. வெப் மெயில் பயன்படுத்துவதால் நம் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சப்படுகிறது. அனைத்து இமெயில்களும் உங்கள் பிரவுசர் வழியாக ஆன் லைனில் இணைய வெளியில் இயங்கும் சர்வர்களில் சேர்த்து வைக்கப்படுகிறது. இத்தனை இமெயிலா! இவை நம் ஹார்ட் டிஸ்க்கில் இடம் எடுத்துக் கொள்ளுமே என்ற கவலை இல்லாமல் இயங்கலாம்.


3. உங்கள் இமெயில் கடிதங்களை எல்லாம் பேக் அப் எடுத்து வைக்க வேண்டுமே என்ற கவலை இன்றி இருக்கலாம். எல்லாம் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் தொலை தூர இணைய சர்வர்களில் இருக்கும். விரும்பும்போது அவற் றை எடுத்துப் பயன்படுத்தலாம்.


4. கட்டணம் வாங்கிக் கொண்டு இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் ஒன்றில் இந்த சேவையைப் பயன்படுத்தும்போது தரும் இமெயில் முகவரிகளை மற்ற நிறுவனங்களுக்கு மாறுகையில் பயன்படுத்த முடியாது. ஆனால் வெப் தளங்களில் இயங்கும் இமெயில் சர்வர்கள் உங்கள் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரைக் கட்டுப்படுத்த முடியாது. இணைய இமெயில் சர்வீஸ் தரும் தளங்கள் தரும் இமெயில் முகவரிகள் என்றும் மாறாமல் வைத்துக் கொள்ளலாம்.


5. உங்கள் வெப் சார்ந்த இமெயில்களை எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் அணுகிப் பெற்று கையாளலாம். உங்கள் வீட்டு கம்ப்யூட்டரிலிருந்துதான் அவற்றைப் பார்க்க முடியும் என்பதில்லை. அடுத்தவர் வீட்டில், அலுவலகத்தில், காபி ஷாப்பில், நூலகத்தில், ஏன் உலகில் எந்த மூலையில் இணைய இணைப்பு உள்ள கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் இமெயில்களைப் பார்வையிடலாம்; கையாளலாம்.


பாதகங்கள்


1. உங்கள் இணையம் சார்ந்த இமெயில்களைப் பார்வையிட்டு அவற்றைப் பயன்படுத்த நீங்கள் இன்டர்நெட் இணைப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் டெஸ்க்டாப் இமெயில் சேவையினைப் பெற்றிருந்தால் இணைய இணைப்பு இல்லாமலேயே கம்ப்யூட்டரில் இமெயில் கடிதங்களைத் தயார் செய்திடலாம். வந்த மெயில்களை கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து, இன்டர்நெட் இணைப்பினைத் துண்டித்த பின்னர் படிக்கலாம்; பதில் கடிதங்களைத் தயார் செய்திடலாம். பொறுமையாகப் பழைய கடிதங்களைப் படித்து மகிழலாம்.


2. இன்டர்நெட் சார்ந்த இமெயில் சேவையினைப் பயன்படுத்துகையில் இன்டர்நெட் இணைப்பு அல்லது அந்த சர்வரில் கோளாறு இருப்பின் அதனால் இமெயில்கள் கிடைப்பது பாதிக்கப்படலாம்.


3. இமெயில் வசதி தரும் நிறுவனம் தன் சர்வரை முடக்கி நிறுவனத்தை மூடிவிட்டால் உங்கள் இமெயில்களெல்லாம் அவ்வளவுதான். இந்த ஆபத்து என்றும் உண்டு. ஆனால் இன்றைய நிலையில் கட்டணம் செலுத்தி இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரிடம் இணைப்பு பெற்றவர்களும் வெப் சார்ந்த இமெயில் வசதியையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஜிமெயில், யாஹூ மற்றும் ஹாட்மெயில் போன்றவை தரும் இலவச வசதிகள்,


குறிப்பாக அளவு கடந்த ஸ்டோரேஜ் இடம் காரணமாக இவ்வகை இமெயில் பயன்பாட்டினையே விரும்புகின்றனர்.

THANK-THEENTAMIL

GNU/Linux இன் சுவாரசிய வரலாறு..


மற்றைய Operating System போலல்லாது Linux Operating System சற்று வித்தியாசமான வரலாற்றைக் கொண்டது. Linux Operating System ஆனது முற்றுமுழுதாக C கணினி மொழியில் எழுதப்பட்டதொன்றாகும். 1990 ஆம் ஆண்டில் பின்லாந்தைச் சேர்ந்த Linus Trovald என்பவர் Helsinki பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். தனது பட்டப்படிப்பின் 2வது வருடத்தின் Project வேலைக்காக Intel கணினிக்கான Memory manager இனை C Programming language இல் எழுதத்தொடங்கினார்.

.

ஒரு கட்டத்தில் இதனை விரிவாக்கி UNIX Operating System இனது Kernel க்கு ஈடாகச் செய்ய முடியும் என்று கருதினார். Kernel என்பது ஒரு Operating system இனது பிரதான (Core) பகுதியாகும். ஓவ்வொ

ரு Operating System உம் தனது பிரதான (Core

) பகுதியை கொண்டிருக்கும்..

1991 காலப்பகுதியில் Linus Trovald E- Mail ஒன்றினை Unix மற்றும் Minix Operating System பயனாளர்களிற்கு (Users) அனுப்பினார். அது பின்வரும் விடயங்களை கொண்டிருந்தது. ‘நான் பொழுதுபோக்காக ஒரு Operating System இனை உருவாக்குகிறேன். அதனை ஒரு Professional Operating System ஆக மாற்றுவதற்கு விருப்பமாக உள்ளது. இதற்கு உதவ விரும்புபவர்களும், இதனை பற்றிய கருத்துக்களைச் சொல்ல விரும்புபவர்களும் சொல்லலாம்.’ எனக் கேட்டிருந்தார். இதன் பின்னர் உலகெங்கிலுமுள்ள UNIX Users மிக ஆர்வமாக தங்கள் உதவியை Linux இற்கு வழங்கத் தொடங்கினார்கள்.

இந் நிலையில் Stallman என்பவரின் தலைமையில் GNU (GNU is Not UNIX) என்னும் Project Team ஆனது ஒரு Operating System இற்குத் தேவையான Application Softwares இனை உருவாக்கிவிட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் Operating System இன் முக்கிய பகுதியான Kernal இனை உருவாக்கவில்லை. இச் சந்தர்ப்பத்தில் GNU குழுவானது மிகவும் ஆர்வத்துடன் Linus Trovald உடன் இணைந்து Linux 1.0 இனை GPL (General Public License) எனும் பொதுமக்கள் உரிமத்தின் கீழ் வெளியிட்டார்கள். (GPL பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விபரிக்கப்படும்). இந் நிலையில் தான் Linux ஆனது GNU/Linux எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வெளிவந்த Linux ஆனது UNIX இனைச் சார்ந்து CLI (Command Line Interface) இல் வெளிவந்தது. GUI (Graphical User Interface) இனைக் கொண்டிருக்கவில்லை.

சிறிது காலப்பகுதியின் பின்னர்Linux Operating System ஆனது GUI இனைச் சார்ந்து வெளிவருகின்றது. Linux Operating System ஆனது Source Code உடன் GPL இன் கீழ் வெளிவருவதால் யாரும் அதனை மாற்றியமைத்து பாவிக்கமுடியும். இதனால் இன்றைய நிலையில் Linux Operating System ஆனது 70 இற்கும் மேற்பட்ட பெயர்களில் (Flavors/ Distributions) பல்வேறு நிறுவனங்களிலிருந்து வெளிவருகின்றது. RedHat Linux, Debian Linux, Suse Linux, Mandrake Linux, Obuntu Linux, Fedora Core Linux, Yellow Dog Linux, Corel Linux என்பவை அவற்றுள் முக்கியமாகப் பாவிக்கப்படும் சில Linux Distributions ஆகும்.

Linux இன் Kernel உரிமை இன்னும் Linus Trovald இடம் உண்டு. Linux இன் Logo வான Penquin உருவாகிய விதம் சுவாரசியமானது.ஆரம்பத்தில் வெளிவந்த Linux ஆனது Logo எதனையும் நீண்டகாலம் கொண்டிருக்கவில்லை. ஒரு முறை Linus Trovald தனது குடும்பத்தினருடன் Southern Hemisphere என்னும் இடத்திற்கு விடுமுறையில் சென்ற போது பல Penquin களை காண நேர்ந்தது. ஆசையில் ஒரு Penquin இனைத் தூக்கிய போது அது Linus இன் கையில் கடித்துவிட்டது. இச் சம்பவத்தின் பின்னர் Linus தனது Operating System இற்கான Logo ஆக Penquin இனை அறிவித்தார். இது செல்லமாக Tux என அழைக்கப்படுகின்றது.ஆக…. GNU Tools + Linux Kernel = GNU/Linux என்றால் மிகையாகாது.

Tuesday, March 24, 2009

பிஎல் - இந்திய பிரைம்டைம் லீக்!!


கடந்த சில வாரங்களாக, இந்திய உள்துறை அமைச்சகமும் ஐபிஎல் நிர்வாகமும் நடத்திய நீயா? நானா? ஆட்டத்தின் முடிவு, இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்பது தான்!! இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதா? அது எப்படி?


ஐபிஎல் போட்டியானது ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்களும் ஒருசேர இனைந்து விளையாடும் வாய்ப்பு மற்றும் உள் நாட்டு வீரர்களும் வெவ்வேறு அணிகளில் பங்கேற்று மோதுவதால் மிகவும் சுவாரசியமானதாக அமைகிறது. அது மட்டுமில்லாமல், இதில் கொடுக்கப்படும் பணம் அனைவரையும் ஈர்க்கும் விஷயமாக உள்ளது!!

ஐபிஎல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால் யார் பார்ப்பார்கள்? தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியினர் (PIO )மற்றும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் (NRI) மொத்தமாக 15 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கட் ரசிகர்கள் மைதானத்தில் 40 சதவிதம் பேர் பார்த்தாலே இந்தியாவில் மைதான அரங்கம் நிரம்பியதிற்கு ஈடாகிவிடும். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அங்கு மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கட் வாரியத்திற்கும் வருமானத்தில் எவ்வளவு பங்கு (Revenue sharing) என்பது நமக்கு தெரியாத விஷயம்!! அது எவ்வளவாக இருந்தாலும், தொலைகாட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடும் போது மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்!! 10 வருடத்திற்கு இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமம் பெற சோனி நிறுவனம் செலுத்தியது 4000 கோடி!! மற்ற நாடுகளில் ஒளிபரப்பு உரிம விற்பனை வேறு உள்ளது!! இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடுகையில், இந்திய பொது தேர்தல் பட்ஜட் ஒதுக்கீடான 1100 கோடியே சிறியதாகத்தான் தெரிகிறது!!

இதனால் தான், இந்திய பொதுத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட, ஐபிஎல் கிரிக்கட் போட்டியை நடத்த அதிக ஆர்வம் காட்டுகிறது இந்திய கிரிக்கட் வாரியம்!! இதற்குக் கூறப்படும் காரணம், இந்திய கிரிக்கட் ரசிகர்களின் நலத்திற்காக என்பது தான்!! இந்திய ரசிகளுக்காக ப்ரைம்டைம் எனப்படும் 8மணியில் இருந்து 10 மணி வரை நடைபெறும் என்பது முக்கியமான விஷயம்!! அதிகமான மக்கள் தொலைக்காட்சி பார்ப்பது இந்த நேரத்தில் தான்!! இந்த ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களூக்குத் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்!! "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்" என்பது தான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது!!

இப்படி நடக்கவிருக்கும் இந்திய பிரைம்டைம் லீக்கால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!!

இந்திய கிரிக்கட் வாரியம், கிரிக்கட் உலகில் மிகப்பெரிய சக்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்படும். இந்திய இளம் கிரிக்கட் வீரர்களூக்கு சீனியர் கிரிக்கட் வீரர்களுடன் விளையாட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பொருளாதார மந்த நிலையை சரி செய்து, தங்களது சேவை மற்றும் பொருட்களின் விற்பனையை பெருக்க அனைத்து பன்னாட்டு மற்றும் உள் நாட்டு நிறுவனங்களும் முயலும். விளம்பர தயாரிப்பு நிறுவனங்களூக்கு இது ஒரு பணம் கொட்டூம் காலமாக இருக்கும். அழுகை சீரியல்களில் இருந்து ஒரு மாத காலம் விடுபடலாம் என்பது பெரும்பாலானோர் நினைப்பாக இருக்கலாம்!!

இந்த அறிவிப்பால் அதிக பாதிப்பு, போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாந்த ரசிகர்களூக்குத்தான்!! சச்சினும் ஜெயசூர்யாவும் ஒன்றாக களமிறங்கும் காட்சியை நேரில் காண முடியாமல் போனது ஒரு ஏமாற்றமே!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்த சிவமணி ட்ரம்ஸை அடித்த அடியை மறக்க முடியுமா? "சூப்பர் கிங்ஸ் வீரரும் லட்சுமிகரமான நடிகையும் கிழக்குக்கடற்கரை சாலையில் பைக்கில் சென்றனர்", என்பது போன்ற கிசுகிசுக்கள் கிடைக்காமல் போனது பத்திரிக்கைகளூக்கு ஒரு இழப்பு. லோக்கல் தொலைக்காட்சிகளூக்கு விளம்பர வருமானம் கொஞ்சம் குறையலாம். இதற்கிடையே, கிரிக்கட் மைதானத்தில் பணிபுரியும் கடை நிலை ஊளியர்களின் பாதிப்பை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை!!

வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஆடித் தள்ளுபடி போன்ற ஒரு விழாக்கோலத்திற்கு தயாராகலாம். செட் டாப் பாக்ஸ் போன்றவையின் விற்பனை பல மடங்கு பெருகலாம். செல்லுலார் நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியின் தகவல்களையும் ஸ்கோர்களையும் தெரிவத்தல், செல்போனிலேயே ஐபிஎல் போட்டி கண்டு கழித்தல் போன்ற புதிது புதிதாக திட்டங்களை வகுக்கலாம். ஐபிஎல் டி-ஷர்ட் போன்றவையின் விற்பனை அதிகரிக்கலாம். அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளூம் காக்டெயில் பார்ட்டிகளூம் நடைபெறலாம். இந்த ஐபிஎல் போட்டிக்கு ஒவ்வொரு 10 நொடிகளூக்கு பல ஆயிரங்களை கொடுத்து அனுசரனை (sponsorship) வழங்கும் அனைத்து நிறுவனங்களூம், லாபம் ஈட்ட அனைத்து சலுகைகளையும், பிரச்சாரங்களையும் செய்யும் என்பது தெரிந்ததே. .

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? இவ்வளவு செலவுகளையும் மக்களுக்காகவா இந்த வணிக நிறுவனங்கள் செய்கின்றன? நாம் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருள்களின் விலையிலும் 1 ருபாய் அல்லது 2 ருபாய் அதிகரித்தால் நமக்குத் தெரியவா போகிறது? நாட்டில் தேர்தல் நடந்தாலென்ன அல்லது வேறேதாவது நடந்தால் என்ன? நமக்குத்தான் தினமும் கிரிக்கட் வீரகளையும் நடிக நடிகைகளையும் தொலைக்காட்சியில் பார்த்தாலே பசி தீர்ந்து விடுமே!! அதுவும் பிரைம்டைமில்!! வரவேற்போம் இந்திய பிரைம்டைம் லீக்கை!!

Monday, March 23, 2009

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து

ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூஸீலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலக சாம்பியன் ஆனது. நியூஸீலாந்து முதலில் பேட் செய்து 166 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து மகளிர் அணி இலக்கை துரத்தி 46. 1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து கோப்பையை தட்டி சென்றது.

மூன்றாவது முறையாக இங்கிலாந்து மகளிர் அணி உலகக் கோப்பை வென்றுள்ளது. ஆட்ட நாயகியாக இங்கிலாது வீராங்கனை என்.ஜே.ஷாவும், தொடரின் சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தின் எஸ்.சி. டெய்லரும் தேர்வு செய்யப்பட்டனர்.

பூவாதலையா வென்ற நியூஸீலாந்து மகளிர் அணி முதலில் பேட் செய்தனர். விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்த நியூஸீ. வீராங்கனைகள் 29-வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் என்று சரிந்தனர்.

அதன் பிறகு தூலன் என்ற வீராங்கனையும் பிரவுன் என்பவரும் இணைந்து 63 ரன்களை ஆமை வேகத்தில் சேர்த்தனர். கடைசியில் தூலன் 48 ரன்களி
ல் ஆட்டமிழக்க நியூஸீலாந்து மகளிர் அணி 47. 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியில் ஆட்ட நாயகி என்.ஜே.ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து களமிறங்கி துவக்க வீராங்கனைகள் எஸ்.ஜே.டெய்லர் (39), அட்கின்ஸ் (40) ஆகியோர் மூலம் 74 ரன்கள் என்ற அபார துவக்கத்தை பெற்றது. அதன் பிறகு இறுதியில் 3 விக்கெட்டுகள் மளமள்வென சரிந்தாலும் என்.ஜே.ஷாவின் (17) நிதான ஆட்டத்தினால் வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து மகளிர் அணி.

இன்று முதல் நானோ புக்கிங்!

இந்திய மக்களின் கனவுக் கார் நானோவுக்கு இன்று முதல் முன்பதிவு ஆரம்பமாகிறது.

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் ரூ.70 ஆயிரம் செலுத்தி இந்த முன்பதிவை செய்து கொள்ள வேண்டும். டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலும் செய்து கொள்ளலாம்.

உலகிலேயே மிகவும் குறைந்த விலை கொண்ட பிராண்டட் கார் டாடாவின் நானோதான்.

ஒரு மோட்டார் சைக்கிளின் விலையை விட (புல்லட் விலை ரூ.1லட்சத்துக்கும் மேல்) குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்தக் காரை முன்பதிவு கூட்டம் பெருமளவு அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எத்தனை லட்சம் பேர் முன்பதிவு செய்தாலும், இந்த ஆண்டு இறுதிவரை சுமார் 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் கார்கள வரைதான் சப்ளை செய்ய முடியும் என டாடா தனது உற்பத்தித் திறனை அறிவித்திருப்பது மக்களை யோசிக்க வைத்தாலும், ரூ.70 ஆயிரத்தைக் கட்ட ரொம்ப யோசிக்கமாட்டார்கள் என்றே நம்புகிறது டாடா.

அடுத்த மாதம் முதல்வாரம் மட்டுமே இந்தக் கார்கள் அனைத்து டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

எப்படியிருந்தாலும், இன்று நானோ முன்பதிவு துவங்கும்போது, பங்குச் சந்தை சூடுபிடிக்கும் என நம்புகிறார்கள்.15 நாளில் 10 லட்சம் நானோ முன்பதிவு - டாடா நம்பிக்கை


அகமதாபாத்: மார்ச் 23-ம் தேதியிலிகுந்து அடுத்த 15 தினங்களில் 10 லட்சம் நானோ கார்கள் முன்பதிவு செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு பியட் யுனோ ரக கார்களுக்குத்தான் அதிக முன்பதிவு நடந்தது. 1995-96 ம் ஆண்டு இந்தக் கார் அறிமுகமானபோது, 15 நாட்களில் 2.90 லட்சம் பியட் கார்கள் விற்பனையானதுதான் அதிகபட்ச முன்பதிவு சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை நானோ இப்போது முறியடிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் ஒரு நானோ முன்பதிவுக்கு ரூ.70 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் 15 நாட்களில் ரூ.7000 கோடியை டாடா மோட்டார்ஸ் எளிதில் திரட்டிவிடும் என நம்பப்படுகிறது.

இவ்வளவு கார்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், மாதத்துக்கு 3000 நானோ கார்கள் மட்டுமே சப்ளை செய்யப்படும் என டாடா அறிவித்துள்ளது. அதாவது குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் தேர்நெதெடுக்கப்பட்டு கார்களைத் தருவார்களாம்.

அகமதாபாத்துக்கு அருகே அமைந்துள்ள நானோ ஆலை முழுமையாக செயல்படத் துவங்கினால்தான் நிலைமை சீரடையுமாம். இந்த ஆலை ஆண்டுக்கு 250000 கார்களை உற்பத்தி செய்யும். வரும் ஜூன் மாதம் இந்த ஆலை செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆக, இப்போ 'புக்' பண்ணாலும், நானோ கிடைக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் எனத் தெரிகிறது.

கார் நானோவாக இருந்தாலும் காத்திருப்பு மெகாவாக இருக்கும் போலிருக்கே..

Saturday, March 21, 2009

அருந்ததீ -திரைவிமர்சனம்


arunthathee
லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததீ”

ராஜ குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய அரண்மனைக்கு வருகிறாள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு போக இருக்கும் போது, அங்கே அவளைபோலவே உருவம் கொண்ட அவளது பாட்டியின் உருவ படத்தை பார்த்து அவளை பற்றி கேட்கிறாள். அதே சமயத்தில் அந்த கோட்டையின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் உள்ள ஒரு கெட்ட சக்தி அவளை அடைய நினைக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஜெக்கம்மா என்கிற அருந்ததியினால் கொல்லப்பட்ட அவளது மாமன் பசுபதியின் ஆவீ, தற்போது இருக்கும் அருந்த்தி பழைய அருந்ததியின் மறுபிறவி என்பதால் பூர்வ ஜென்மத்தில் அடைய முடியாதவளை, பசுபதி அரூப ரூபத்தில் அடைய துடிக்கிறான். இதையெல்லாம் படிக்கும் போது, ஏதோ அம்புலிமாமா கதை போல் இருந்தாலும், படம் ஆரம்பித்ததும் நம்மை கட்டி போட்டு விடுகிறார்கள், அந்த அளவுக்கும் இறுக்கமான திரைக்கதை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என்று போட்டி போட்டு பின்னி எடுக்கிறார்கள்.

arunthathi-09

அருந்ததியாய் அனுஷ்கா இரட்டை வேடங்களில், மழையிலும், வெளிநாட்டு கடலோரங்களீலும், ஹீரோக்களுடன் உருண்டு புரண்டவரா..? சும்மா அசத்தியிருக்கிறார். அதிலும் அவரது உயரமே பழைய அருந்ததிக்கு “ஜெக்கம்மா” என்று மக்களால் கடவுளை போல வழிபடும் அந்த கேரக்டருக்கு ஒரு கெத்தை கொடுத்திருக்கிறது. சோனு சூட்.. மாமன் பசுபதியாய்.. அவருடய நடிப்பு படத்திக்கு மிகப்பெரிய பலம்.. சரியான வில்லன். அதே போல் முஸ்லிம் மந்திரவாதியாய் வரும் ஷாயாஜி ஷிண்டே.. சரியான தேர்வு.. அவரும் அவருடய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இம்மாதிரியான படங்களில் எல்லாம் என்னத்தை நடிக்க இருக்கிறது என்பதை, மோசமான நடிப்பு, மற்றும் திரைக்கதை, டெக்னிகல் அம்சங்கள் உள்ள படஙக்ளை பார்த்தால் புரியும். முதல் பாதியில் திரைக்கதை பேய் வேகம்.. பழைய அருந்ததியின் கதையை ஒரேயடியாய் சொல்லாமல், பிரித்து, பிரித்து, படம் முழுவதும் வருவது போல் சொல்லி, படத்தின் வேகத்தை கூட்டியிருப்பது நல்ல உத்தி. என்ன க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் பிரமாதபடுத்தியிருக்கலாம். கோட்டியின் இசையில் ஆங்காங்கே பழைய இளையராஜாவின் பாடல்கள் தெரிகிறது. அதிலும் ஒரு பாடலில் பெண் குரலில் “ராஜதீபமே” பாடல். அனுஷ்கா ஆடும் ஒரு டிரம் டான்ஸ் எங்கயோ ஒரு ஜாப்பானோ, சைனீஸ் படத்திலோ பார்த்த மாதிரியிருக்கிறது.. இருந்தாலும் ரொம்ப புவர்.

arunthathi-06

ஒளிப்பதிவு செந்தில்குமார்.. இம்மாதிரியான படங்களுக்கு ஏற்ற ஒளிப்பதிவு. அதே போல் எடிட்டிங்கும் அருமையாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, அம்மன் படத்தை தந்த கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற படம். ஆந்திராவில் சுக்கை போடு போட்ட படம். சுமார் 200 கோடி வசூலாம். சமீப காலத்தில் நேரடி தமிழ் படத்துக்கு கூட இவ்வளவு செலவு செய்து விளம்பர படுத்தியிருக்க மாட்டார்கள். படம் கிரிகெட் மேட்சையும் மீறி நல்ல ஓபனிங்காம்.

டிஸ்கி: இது டப்பிங் விமர்சனம்.

"Open with" என்று வருகிறதா?


My Computer -ல் ஏதாவது டிரைவை திறக்க முயற்சிக்கும் பொழுது " Open with" என்று வருகிறதா?

நோட்பேடிற்கு (Note Pad) சென்று அதில் ஒன்றும் டைப் செய்யாமல் "autorun.inf" எனப் பெயரிட்டு சேமித்துக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் கணிணியில் எந்த டிரைவை திறக்கும்பொழுது "Open with" செய்தி வருகிறதோ அந்த டிரைவில் இந்த கோப்பை காப்பி செய்துவிட்டால் போதுமானது.

இனி அந்த பிழை வராது.


இந்த முறையிலும் சரியாகவில்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

பயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன?
உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.


இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைத் திருட முயற்சிக்கிறார்கள். அல்லது வைரஸ் புரோகிராம்களை அனுப்பி நம் கம்ப்யூட்டரில் நாசம் விளைவிக்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் எப்போதும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து செயல்படுகின்றனர்.


இவர்களிடமிருந்து நம் கம்ப்யூட்டரை மூன்று வழிகளில் பாதுகாக்கிறோம்.

1. வைரஸை அண்டவிடாமலும் அப்படி வந்துவிட்டால் அவற்றை நீக்கும் செயலையும் மேற்கொள்ளும் ஆண்டி வைரஸ் எனப்படும் புரோகிராம்கள்.

2. உள்ளே இது போன்ற எந்த நாசம் விளைவிக்கும் புரோகிராமினையும் புகவிடாமல் தடுக்கும் பயர்வால் புரோகிராம்கள்.

3.ஸ்பைவேர் அழித்தல்.

இந்த மூன்று வகை புரோகிராம்களும் இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டருக்குத் தேவை. இதன் முக்கியத்துவம் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். இங்கு பயர்வால்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்

உங்களுக்கும் இன்டர் நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.

பயர்வால் தொகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு:ஹார்ட்வேர் பயர்வால் மற்றும் சாப்ட்வேர் பயர்வால்.


அதிகம் புழங்கப்படும் ஹார்ட்வேர் பயர்வால் ரௌட்டராகும் (router).ஒரு சிறிய நெட்வொர்க்கில் இது கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்கும் இடையே இணைக்கப்படும். உங்களுக்கு இன்டர்நெட் தொடர்பினைத் தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டருக்கென ஒரு ஐ.பி. முகவரியினைத் தரும். இது தெரிந்தால் யாரும் இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் புகுந்து தகவல்களைத் திருட முடியும். இந்த ரௌட்டர் அதனை மற்றவர்களிடமிருந்து மறைத்து வேறு ஒரு முகவரியை இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்குத் தருகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் எளிதாக நுழையக் கூடிய போர்ட்களை ரௌட்டர் மூடிவிடுகிறது.

சாப்ட்வேர் பயர்வால் சிறிது மாறாகச் செயல்படுகிறது. இதில் சில நன்மைகளும் உள்ளன; பிரச்னைகளும் உள்ளன. ஹார்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டருக்கு வெளியே அமைக்கப்படும் சாதனம். சாப்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம். எது எப்படி இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது ஒரு பயர்வால் கட்டாயம் தேவை.

சாப்ட்வேர் பயர்வால் உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக இயங்குகிறது. இதனால் நீங்கள் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் புராசசர் வேகம் சற்று குறையலாம். சாப்ட்வேர் பயர்வால் ரௌட்டர் செய்வது போல ஐ.பி.முகவரி மாற்றம் எதனையும் மேற்கொள்ளாது. சாப்ட்வேர் பயர்வால் செயல்படுவது ஒரு நண்பரை வாட்ச்மேனாக வைத்திருப்பது போல.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் எந்த புரோகிராமினை நாம் இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டாலும் உடனே சிறிய பாக்ஸ் ஒன்றை உருவாக்கி இந்த ஐ.பி. முகவரியிலிருந்து இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்திட முயற்சிக்கிறது. இதனை அனுப்பவா? என்று கேட்கும். நீங்கள் அனுமதித்தால் தான் அதனை அனுமதிக்கும்.

இது கெடுதலான புரோகிராமிற்கு மட்டுமல்ல. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் அனைத்து புரோகிராம்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும். ஒரு முறை ஒரு புரோகிராமினை அறிந்து கொண்டு அதனை நீங்கள் அனுமதிப்பதையும் பதிந்து கொண்டு அடுத்த முறை அதே வெப் சைட்டை நீங்கள் தொடர்பு கொள்கையில் உங்களைக் கேட்காமலேயே அனுமதிக்கும்படியும் இதனை செட் செய்திடலாம்.

வேறு எவராவது அவர்களின் புரோகிராம் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத் தனமாக நுழைய முயற்சிக்கையில் இந்த ஐ.பி. முகவரியிலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் முயற்சிக்கிறார் என்று எச்சரிக்கைச் செய்தியினை பயர்வால் வழங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அதனைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த முகவரியிலிருந்து ஒருவர் என்னுடைய கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கிறார் என நீங்கள் தெரிவிக்கலாம்.

பயர்வால் என்பது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் தேவயான ஒன்று. எனவே இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பயர்வால் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. அல்லது நிறுவனங்கள் விற்பனை செய்திடும் பயர்வால் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் தான் இயங்குகிறது.

Friday, March 20, 2009

நடிகர் விஜய்யின் கோபம்:மிரண்டு போன ரசிகர்கள்!

பேசவே மாட்டாரா விஜய். வாயை திறந்து பேசினால் முத்தா உதிர்ந்துவிடும்- இப்படித்தான் பப்ளிக் பங்சனில் கலந்து கொள்ளும் நடிகர் விஜய்யை பற்றி இத்தனை நாளும் பேசிக்கொண்டிருந்தார்கள்.


இனி அப்படி பேசமாட்டார்கள்.எல்லா பங்சனிலும் அசடு வழிய நிற்கும் விஜய்யை பார்த்தே பழகிப்போனவங்க ரசிகர்கள் மீது ஆவேசப்படும் அந்த வீடியோவை பார்த்து ’நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்’னு சொல்கிறார்கள்.பொது இடங்களில் தான் நடிகர் விஜய் பரமசாதுபோல் நடந்துகொண்டார் இத்தனை நாளும். ஆனால் உண்மையில் கடும் கோபக்காரர்.அவ்வப்போது உடைபடும் அவர் வீட்டு கண்ணாடிகளுக்குத்தான் அது தெரியும்.அந்த கோபத்தை இப்போது ரசிகர்களும் பார்த்துவிட்டார்கள்.தற்போது, இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை கலக்கும் சமாச்சாரம் இந்த விஜய் வீடியோதான்.பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்தை ஓட வைப்பதற்காக தமிழகம் முழுவதிலும் உள்ள லோக்கல் சேனல் நிருபர்களை சென்னைக்கு வரவழைத்து பேட்டி கொடுத்தார்கள் விஜய்யும், பிரபுதேவாவும்.

அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு, படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது.

விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.

நம்ம தலைவரா இப்படி என்று மிரண்டுபோன ரசிகர்களின் நிலை வீடியோவில் பதிவாகவில்லை.பிரஸ் மீட் முடித்தபிறகு இந்த குறிப்பிட்ட காட்சிகளை வெளியிட வேண்டாம் என அன்பாகக் கேட்டுக் கொண்டாராம் விஜய்.ஆனால் யாரோ ஒரு குறும்புக்கார கேமராமேன், இத்தனை நாட்கள் கழித்து அதை உலாவர வைத்துவிட்டார். விரைவில் முழு வீடியோவையும் வெளியிடப் போகிறாராம்.

காதல் கல்யாணம்: நடிகர் ஜெயம் ரவி பேட்டி

அமுல் பேபின்னு பெண்கள் கொண்டாடும் ஹீரோ ஜெயம் ரவிக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டோம். பேராண்மை படத்தின் ஷூட்டிங்கில் இருந்த அவரை சந்தித்தோம்.


உங்க வளர்ச்சியை எப்படி திட்டமிடுகிறீர்கள்?ஜெயம்,எம். குமரன் சன் ஆப் மாகலட்சுமி, தாஸ், மழை, இதய திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம்தூம்னு நடிச்சுட்டேன்.
சினிமா எனக்கு கனவல்ல. வீட்டில் தினம் தினம் அதோடு வாழ்ந்ததால ரொம்ப நெருக்கமா நுழைஞ்சிட்டேன் . அப்பாவும் , அண்ணனும் எனக்கு எந்த பளுவும் வைக்காமல் அவர்களே பாதி பாரத்தை எடுத்துக்கிடங்க.
மிதியை என்னால் ஈசியா சுமக்க முடிந்தது. நான் எப்போழுது ரொம்ப மெனக்கிடறது கிடையாது. எப்பவும் போல அண்ணனும் ,அப்பாவும் இருக்கிறதால நான் ஜாலியா நடிச்சிகிட்டு இருக்குறேன் . பாதை அவர்களுடையது , பயணம் என்னுடையது.நிறைய ஹிட் கொடுத்தும் உங்ககிட்ட ஆர்பாட்டம் இல்லையே?


சினிமாவுல அன்னன்னிக்கு ஜெய்க்கிறது ரொம்ப முக்கியம். வெற்றிக்கு முடிவு கிடையாது. இங்க நேத்து ஜெயிச்சன்னு சொல்ல முடியாது .இன்னைக்கு ஜெயிக்கனும் ,நாளைக்கு ஜெயிக்கனும் அப்பதான் மரியாதை.
ஒரு படம் ஹிட் கொடுத்துட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா அடுத்த படம் பெரிய ஹிட் கொடுக்காட்டி முந்தன வெற்றிக்கு மரியாதை இல்லாமல் போய் விடும். அதனால வெற்றிக்காண உழைப்பைத் தவிர வெறெதையும் நான் செய்றதில்ல....பேராண்மை என்ன பண்ணியிருக்கீங்க?


வனத்துறை அதிகாரி. உண்மையான வனத்துறை அதிகாரியாக முயற்சி செய்து இருக்கிறேன். அந்த கேரெட்டருக்கு எந்த ரெஃபெரென்சும் கிடையாது. முழுக்க முழுக்க என்னையும் ஜனா சாரையும் நம்பி எடுத்தப்படம்.
நிறைய புது விஷயத்தை ட்ரை பண்ணி இருக்கிறோம். எல்லாம் படத்திலயும் காடு ஒரு லொக்கேஷனலாக இருக்கும்.ஆனால் இந்த படத்தில் காடு ஒரு கேரக்டாவே வரும். உடம்பு , அறிவு மற்றும் சூழ்நிலை எல்லா நிலையிலும் கஷ்டபட்டு நடிச்ச படம் பேராண்மை.

95 சதவிதம் அவுட்டோர் . ஆனால் எங்கையாவது ஏர்போர்ட்டில் நின்னால் கூட என்னை யார் என்று கேட்கும் ஆளவுக்கு மாத்தின படம். ஏறக்குறைய ஒரு வருசம் காட்டுக்குள்ளையே வாழ்ந்து இருக்கேன்.
13 கிலோ எடை குறைச்சு காட்டுக்குள்ளையே டெண்டு அடிச்சி ஜிம் போட்டு உடற்பயிற்ச்சி பண்ணிட்டே இருப்பேன். உழைப்புக்கு ஏத்த பலன் என்னைக்கு உண்டு .ரொம்ப நல்ல வந்து இருக்கு. அதற்கு காரனம் நான் மட்டும் இல்ல மொத்த யூனிட்டு தான். வெறித்தனமா உழைச்சி இருக்காங்க. ஜனா சார் சொல்லவே வேண்டாம்!கண்டிப்பா வெற்றி படமா அமையும். அமையனும். ஏன்னா இது நிறைய பேருடைய வெறித்தனமான உழைப்பு.


உங்க கூட நடிச்ச எல்லா ஹுரோயினும் உச்சத்துக்கு போயிட்டாங்க. ரவியோட ராசியா?


நல்லா கவனிச்சா என்னோட படம் எல்லாம் ,குடும்பத்தோடுப் பார்க்குற மாதிரிதான் இருக்கும்.குடும்பத்தோடுப் பார்க்குற எல்லா படமும் ஹுரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படமா இருக்கும்.
ஒரு படம் முழுமையடைய ஹுரோ, ஹுரோயின் இருவருக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்படித்தான் என்னோட நடிச்ச அசின் , ஸ்ரேயா, பாவனா, ஜெனிலியா டாப்புக்கு போயிட்டாங்க. ஒரு வேளை என்னோட நடிச்ச ராசின்னு சொன்னா சந்தோஷம் தான்.சரி, ரீல் ஹுரோயின்களை விடுங்க.ரியல் ஹுரோயினுக்கு வாங்க?


ஒரு சிலரை நாம் அடிக்கடி சந்திச்சியிருப்போம்.ஆனா இவங்க தான் வாழ்க்கையில வரபோறங்கனு தெரியாது.அது மாதிரி தான் ஆர்த்தியும்.இவங்க குடும்பமும் எங்க குடும்பமும் அடிக்கடி சந்திக்கிற சந்தர்பங்கள் உண்டு. அப்போ இவங்களை பார்த்து இருக்கிறேன்.ஆனா கல்யாணத்தைப் பற்றி எந்த ஜடியாவும் இல்லாத சமயத்தில் . இரண்டு குடும்பமும் எடுத்த முடிவின்படி ஆர்த்தி எங்க வீட்டு மருமகளா வரப்போறாங்க.எந்த விஷயமும் அப்பா , அண்ணனை மீறி செய்ததில்லை.இந்த முக்கிய விஷயமும் அவர்கள் விருப்பபடி அமைவது எனக்கு மகிழ்ச்சி. கல்யாண தேதி மற்றும் மற்ற விஷயத்தை அப்பா கூறுவார் என்று எடிட்டர் மோகனை கை காட்டினார். எடிட்டர் மோகன்


’’இது இரண்டு குடும்பமும் எடுத்த முடிவு. நாங்களாக அறிவிக்கும் முன்பு சில விஷ்யம் பரபரபாக பத்திரிக்கையில் வெளிவந்துவிட்டது. எல்லாம் நல்லதுக்குதான். காதல் திருமணம் என்றால் ஆம் என்று சொல்வதில் எங்களுக்கு ஆட்சபனை இல்லை. ஆனால் இது இரண்டு குடும்பமும் எடுத்த முடிவு.


ஜுன் 7ந் தேதி ரவிக்கு திருமண தேதியாக கூறித்து இருக்கிறோம்.மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருக்கிறது. மணப்பெண் பெயர் ஆர்த்தி விஜய்குமார். சின்னத்திரை மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் திரு.விஜய்குமார், திருமதி சுஜாதா விஜய்குமார் அவர்களின் புதல்வி ஆர்த்தி பி சி ஏ முடித்த பின்பு மாச்டெர் ஒஃப் இண்டெர்எஷ்னல் முடித்திருக்கிறார்.ஜுன் 7ந் தேதி நடக்கும் திருமணத்திற்கு எல்லா அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா குடும்பத்தை சோர்ந்த எல்லோரையும் அழைக்க உள்ளோம் என்று எடிட்டர் மோகன்’’ தெரிவித்தார்.

Wednesday, March 18, 2009

நமீதா குளோஸ் அப் ஷாட...்!
மும்பையில் பிறந்து வளர்ந்த கவர்ச்சி சுனாமி மீதாவின் பிறந்தநாள் மே 10 (வயது 26?). நமீதாவின் தந்தை பிரபல தொழிலதிபர். மீதாவின் பூர்விகம் மலையாளம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. ஸ்பெஷல் சேச்சி ட்ரேட்மார்க் அவரிடம் இருப்பதை கூர்ந்து பார்க்காமலேயே உணரலாம். குஜராத்தில் வளர்ந்தவர் அவர். தமிழில் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சித்திக்கால் தென்னிந்தியாவில் பிரபலமானார். தமிழிலும் எங்கள் அண்ணா திரைப்படம் மூலமாக சித்திக்கே அவரை அறிமுகப்படுத்தினார்.


2001 மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டபோது மீதாவின் உயரம் 5' 8", வயது 18, பலான பலான அளவு 32,24,35, எடை -55 கிலோ. அந்தப் போட்டியில் அதிகபுள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருந்தபோதிலும், இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.

மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்றதன் விளைவாக தெலுங்கு திரையுலகில் அதிரடியாக நுழைந்தார். அவர் நடித்த சொந்தம், ஜெமினி திரைப்படங்கள் வணிகரீதியிலாக பெரிய வெற்றி பெறாதபோதிலும் வசீகரிக்கவைக்கும் அவரது தோற்றத்தால் தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார். "ஏய்" படத்தின் "அர்ஜூனா, அர்ஜூனா" பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்தார். கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மீதாவுக்கு பிடித்த வண்ணங்கள் கறுப்பு வெள்ளை. மீதாவை காதலிக்க விரும்புபவர்கள் ஒரு வெள்ளை ரோஜாவுடன் Propose செய்யலாம். வெள்ளை ரோஜா என்றால் அவருக்கு உயிர். ஓய்வு நேரங்களில் நீந்துவதும், பேட்மிண்டன் ஆடுவதும் அவரது பொழுதுபோக்கு. குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர் மீதா. சிட்னி ஷெல்டன் நாவல்களை வாசிப்பதில் அலாதி பிரியம் கொண்ட நமீதாவுக்கு ரொம்ப பிடித்தது படங்களோடு வரும் காமிக்ஸ் புத்தகங்கள். நந்திதா தாஸ், தபு போன்றவர்களின் நடிப்பை ரொம்பவும் ரசிப்பார். விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அன்பு செலுத்துவதில் அவர் இன்னொரு மேனகா காந்தி.

Tuesday, March 17, 2009

இளைஞர்களும் தவறுகள்!!-10 ம்!


இளைஞர்களான பின்னும் நம் குழ்ந்தைகள்தானே என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருப்பது தவறு! குழந்தைகளை வளர்க்கும்போது நாம் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்றே விரும்புகிறோம். நாம் செய்யும் தவறுகளைப்பார்ப்போம்!

1.குழந்தைகளிடம் கத்துவது,சத்தம் போடுதல்:

இது நமது இயலாமயால் நமது கோபத்தினை வெளிப்படுத்தும் செயல்.

விளைவு:பிள்ளைகள் பெற்றோரை எதிரியாக நினைப்பர்.

செய்யவேண்டியது: கோபம் தணியும் வரை அமைதியாக இருப்பது! பின்பு அமைதியாக வேண்டுதல் அல்லது அழுத்தமாக வலியுறுத்தல்!

2.உடனே செய்!:

பெரும்பான்மை பிள்ளைகள் உடனே செய் என்று கட்டளையை அவமானமாகக் கருதுவர்!

விளைவு: வேலையை செய்யாமல் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அமைதியா இருந்து கழுத்தைஅறுத்து விடுவார்கள்.

செய்யவேண்டியது:அன்பாகவும் பாராட்டும் விதமாகவும் சொல்லி வேலை வாங்குவது!!

3.தவறு காணுதல்

,திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டே இருப்பது:

விளைவு:இது பிள்ளைகளுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

செய்யவேண்டியது; அடுத்த அறையிலிருந்து கத்துவதைவிட பக்கத்தில் வந்து உடனே சாப்பிட்டால்தான் டி.வி.பார்க்கவிடுவேன் என்று அன்பாக வலியுறுத்தல்.

4.விளக்கங்களும்,புத்திமதி சொல்லுதலும்: ஒருவர் மட்டுமே பேசுவதை யாரும் விரும்புவது இல்லை!

விளைவு: வேலை நடக்காது.

செய்யவேண்டியது:குழந்தைகளிடமே கேப்பது! ஏன் மார்க் குறைந்தது! இந்த கணக்கு புரியலியா? வா நான் சொல்லிதருகிறேன். சரியாக பிரச்சினை எந்த இடத்தில் என்று கண்டுபிடித்துவிடலாம்.

5.கடுமையான கோபம்!: வந்தால் காட்ட வேண்டாம்.குழந்தைகள் மனம் உடைந்து போகலாம்.(எடு): நீ ஏண்டா உயிரோட திரியுறே!!

செய்யவேண்டியது:கோபம் அதிகமானால் ஒரு வாக்கிங் கிளம்பலாம்,ஜிம் போகலாம்.

6.எதிர்மறையாக குற்றம் சொல்லுதல்: உருப்படமாட்டே நீ, இந்தச் சின்ன விசயம் கூட உனக்கு தெரியலிய்ர்?

விளைவு: தான் திறமையில்லாதவன் என்ற தாழ்வு மனப்பான்மை!

செய்யவேண்டியது:நேர்மறையாக ஊக்கப்படுத்துதல்!

7.கையும் களவுமாகப் பிடித்தல்: குழந்தைகள் தவறை மறைக்கவும்,பொய் சொல்லவும் ஏதுவாகும்..

செய்யவேண்டியது:நேரடியாக பேசுதல்,நம்பிக்கயூட்டும் விததில் நடந்துகொள்ளுதல்.

8.அதிகமாக குற்றம் சுமத்துதல்:ஏதும் இயலாத நமது செய்கைகளுக்கு பிள்ளைகளைக் குறைகூறுதல்!! “இவன் மட்டும் சரியான நேரத்தில் வந்து இருந்தால் எனக்கு இவ்வளவு பிரச்சினை நஷ்டம் ஏற்பட்டு இருக்காது. “

செய்யவேண்டியது:ஆதரவாக பேசுவது! ”அவனுக்கு என் மேல் அன்பு அதிகந்தான். ஏதோ சூழ்நிலை இப்படியாகிவிட்டது!”

9. அடித்தல்: சுய கட்டுப்பாடு,சுயஒழுக்கம் கற்பித்தலே சிறந்தது! அடிப்பது குழந்தைகளிடம் நமக்குள்ள மரியாதை ஆகியவற்றைக் கெடுக்கும்.

விளைவு:எதிரி மனப்பான்மை, பெற்றோர் பிள்ளை உறவில் விரிசல்.

செய்யவேண்டியது:தொடர்ந்து குழந்தைகளை அடிப்பவரா நீங்கள்? அதிகம் குழந்தைகளிடம் வயசுக்கு மீறி எதிர்பார்க்காதீர்கள். நிறைய புத்தகங்கள், நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளின் மனநிலையைப்புரிந்து கொள்ளங்கள்!

10.வலுக்கட்டாயப் படுத்துதல்: குழந்தைக்கு டாக்டரிடம் பயம் என்றால் இழுத்துக்கொண்டு உள்ளே சேர்ப்பது தவறு.

விளைவு:குழந்தை அழுது கதறி ஊரைக்கூட்டுவான்.

செய்யவேண்டியது: ”பயப்படாதே! என் கையை பிடித்துக்கொள்! நானும் உன்னைப் பிடித்துக்கொள்கிறேன். அப்பா கூட இருக்கிறேன்” சரியா போன்ற ஆறுதல்!

சொல்லவேண்டியது இவ்வளவுதான்! நாம்தான் கடைப்பிடிக்கணும்!

இணையக் குறள் (iKural) - யுனிகோட் தமிழ் சொற்செயலி


அன்பர்களே, இன்று குறள்சாஃப்ட் நிறுவனத்திலிருந்து ஓர் அறிப்பு மின்னஞ்சல். அவர்களின் புதிய பதிப்பான இணையக் குறள் என்ற யுனிகோட் தமிழ் சொற்செயலி பற்றிய அறிவிப்பு.

நான் வெகுகாலமாக அவர்களின் தயாரிப்பான "குறள் தமிழ்ச் செயலியை" உபயோகிக்கின்றேன். மிக அழகான உயரிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது. எனவே அவர்களின் புதிய முயற்சியை சோதனை செய்தேன். அதுவும் மிக அற்புதமாக வேலை செய்கின்றது. எனவே அனைவரும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்.

இதோ அந்த அறிவிப்பின் தமிழாக்கமும் சாரமும்:

இணையக் குறள் (iKural) என்றால் என்ன?

இணையக் குறள் என்பது இணையம் சார்ந்த் ஒர் இந்தியச் சொற்செயலி, தற்சமயம் தமிழ் மொழி மட்டுமே உபயோகிக்கலாம்.

அதன் சிறப்பம்சங்கள்:
  • உயரிய தொழில் நுட்பத்துடன் வடிவமக்கப்பட்டி இணையம் சார்ந்த இந்திய சொற்செயலி.
  • ஒலியயல் (Phonetic), தமிழ்99, புதிய மற்றும் பழைய தட்டச்சு சார்ந்த விசைபலகை அமைப்பு.
  • HTML அலலது TEXT வகையான கோப்புகளை உருவாக்களாம்.
  • கோப்புகளை சேமிக்கவும், திறந்து மறுபதிப்பு செயயவும் முடியும்.
  • கோப்புகளை அச்சு (Print) எடுக்கவும் முடியும்.
  • Draft Mode-ல் வேகமாக உள்ளீடு செய்து, பின்பு Edit Mode-ல் அழகுபடுத்தலாம்.
  • புதியவர்களுக்காக திரைவிசைப்பலகை.
  • Internet Explorer, FireFox, Safari and Google Chrome போன்ற இணைய உலவிகளை உபயோகிக்கலாம்.
  • அத்துடன் இது முற்றிலும் இலவசம்!

இணையக் குறளை உபயோகிக்க கீழ் காணும் இணைய தளம் சென்று, தமிழில் உள்ளீடு செய்யத் தொடங்கவும், அவ்வளவு சுலபமாக வேலைசெய்கின்றது.
http://www.kuralsoft.com/ikural.htm

முயற்சி செய்யுங்களேன்....

அத்துடன் இது Yahoo! Gallery -ல் காட்சிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. அதை இங்கே காணலாம்:
http://gallery.yahoo.com/apps/29065