Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, June 28, 2009

தனுஷின் ஆடுகளம்: த்ரிஷா விலகல்?

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இன்னொரு தரப்போ, ஆடுகளம் படம், முழுக்க முழுக்க மதுரையில் 6 மாதம் தங்கியிருந்து நடிக்க வேண்டிய படம்.

மதுரையின் புழுதியில் புரண்டும், வெயிலில் காய்ந்தும் 'ரியலிஸ்டிக்காக' நடிக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த ரிஸ்க் எடுக்க விரும்பாததாலேயே அவர் விலகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

மேலும் த்ரிஷாவுக்கு கைவசம் பெரிய படங்கள் பல உள்ளதாம். குறிப்பாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்கும் இந்திப்படம் வேறு இந்த லிஸ்டில் புதிதாக இடம்பெற்று விட்டதால் தனுஷ் படத்தை தொங்கலில் விட்டுவிட்டார் த்ரிஷா என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment