Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, June 26, 2009

இந்திர விழா... நமீதாவின் நூதன பிரச்சாரம்!

தனது இந்திர விழா படத்தை திரண்டு வந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்து 22 ஆயிரம் இமெயில்களை ரசிகர்களுக்கு அனுப்பியுள்ளாராம் நடிகை நமீதா.

நமீதா என்ன செய்தாலும் பெரிய செய்தியாகி விடுகிறது. குறிப்பிட்ட படத்துக்கு அல்லது அவர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதுவே பெரிய விளம்பரமாகவும் அமைந்துவிடுகிறது.

நமீதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இந்திர விழா படத் தயாரிப்பாளர் அவருக்கு ஒரு யோசனை கூறியுள்ளார்.

அவரது ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதி அதை இமெயில் மூலம் அனுப்பி வைப்பதே அந்த யோசனை.

அந்த இமயிலில், தானும் ஸ்ரீகாந்தும் நடித்துள்ள புதிய படமான இந்திர விழைவைக் காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். மேலும் அதிலேயே படத்தின் சிறப்புகள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும் அவர் அனுப்பியுள்ளார்.

நமீதாவின் மெயில் கிடைத்த சந்தோஷத்தில் உடனே அனைத்து ரசிகர்களும் பதிலும் அனுப்பி உள்ளார்களாம்.

இதுபற்றி நமீதா கூறுகையில், இந்த இ-மெயில் விளம்பர யோசனையை தயாரிப்பாளர் சஞ்சீவ்சர்மாதான் சொன்னார். அது வித்தியாசமாகவும் இருந்தது. உடனடியாக தமிழ், ஆங்கிலத்தில் ரசிகர்களுக்கு இ-மெயில் அனுப்பினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. நிறைய ரசிகர்கள் வாழ்த்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கு உடனுக்குடன் பதிலும் அனுப்பி வருகிறேன், என்கிறார்.

No comments:

Post a Comment