சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ஒரு வெற்றிப் படம் கொடுத்த சந்தோஷத்தில் இன்று
(01/06/2009)மாதவன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
பெரும்பாலும் தன் பிறந்த நாளை பெரிய விழாவாகக் கொண்டாடும் பழக்கம் அவருக்கு இல்லை. தனிப்பட்ட முறையில் ஏதாவது கோயிலுக்கு அல்லது பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவாராம்.
இந்த முறை தனது பிறந்த நாளை தன் மனைவி மகனுடன் அவர் பாங்காக்கில் கொண்டாடுகிறார். காரணம், தன் அடுத்த இந்திப் படத்துக்கு கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்க இப்போது அவர் பாங்காக் சென்றுள்ளார்.
தமிழில் இந்த ஆண்டு தொடர்ந்து இரு படங்கள் கொடுத்தார் மாதவன். முதல்படம் யாவரும் நலம். அடுத்து குரு என் ஆளு. ஆனாலும் அடுத்த தமிழ்ப்படம் என்று சொல்லிக் கொள்ள கைவசம் எதுவும் இல்லை என்கிறார்.
'இப்போதைக்கு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், சொன்ன கதைகளையே சொல்லி போரடிப்பதால், நல்ல ஸ்க்ரிப்டுக்காக காத்திருக்கிறேன். இரண்டு இந்திப் படங்கள் பண்ணுகிறேன்...", என்றார்.
அப்பப்போ தமிழுக்கும் வாங்க!
No comments:
Post a Comment