Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, May 30, 2009

விமான நிலையத்தில் 12 மணிநேரம் தவித்த மீனாட்சி!

படப்பிடிப்பு முடிந்து மும்பை புறப்பட விமான நிலையம் சென்ற நடிகை மீனாட்சிக்கு டிக்கெட் எடுத்துத் தராமல் தயாரிப்பாளர் இழுத்தடித்ததால் 12 மணி நேரம் விமான நிலையத்திலேயே தவிப்புடன் காத்திருந்தார்.

'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், மீனாட்சி. மும்பையைச் சேர்ந்த இவர் முதல் படத்தில் பாவாடை தாவணியில் வந்தார். இப்போது முழுமையான கவர்ச்சிக்கு மாறி கலக்க ஆரம்பித்துள்ளார்.

'த நா அல 4777,' 'ராஜாதிராஜா' ஆகிய படங்களில் கவர்ச்சி [^] வேடமேற்று நடித்துள்ளார்.

இப்போது, திருமலை இயக்கத்தில் 'அகம் புறம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு [^]க்கா சென்னை வந்த மீனாட்சி, படப்பிடிப்பு முடிந்து மீண்டும் மும்பை கிளம்பினார்.

அவருக்காக, காலை 9.30 மணி விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார் தயாரிப்பாளர். ஆனால் 30 நிமிடங்கள் தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்தார். அதற்குள் விமானம் [^] புறப்பட்டுச் சென்று விட்டது.

அடுத்த விமானத்தில் டிக்கெட் போடும்படி எடுத்துத் தரும்படி இயக்குநர் [^] திருமலைக்கு போன் செய்து கேட்டார். அவரும் உடனே ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால், மீனாட்சி மும்பை செல்வதற்கு டிக்கெட் எடுக்கவே இல்லையாம். ஒவ்வொரு முறை விசாரிக்கும்போதும், தயாரிப்பாளர் தரப்பில் இழுத்தடிக்கப்பட்டதாம்.

மும்பை மீனாட்சியை சென்னையிலேயே இருக்க வைத்துவிட நினைத்தார் போலிருக்கிறது தயாரிப்பாளர்!.

காலை 10 மணிக்கு விமான நிலையம் [^] சென்ற மீனாட்சி, இரவு 10 மணி வரை விமான நிலையத்திலேயே காத்திருந்தாராம்.

ஒரு வழியாக 12 மணி நேரம் விமான டிக்கெட்டுக்காக காத்திருந்து தவித்த அவர் இரவு 11 மணி விமானத்தில் மும்பை போய் சேர்ந்தார்.

விமான நிலையத்தில் இருந்தவர்கள் மீனாட்சியை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

விண்டோஸ் ஸ்கை டிரைவ் - ஆன்லைன் ஸ்டோர் ரூம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ் என்ற வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. பாஸ்வேர்ட் மூலம் பைல்களைப் பாதுகாத்து அவற்றை ஆன்லைனில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தும் நம் பைல்களை இறக்கிப் பயன்படுத்தலாம்.

அப்படி என்றால் நம் பைல்களை அடுத்தவர்கள் எடுத்துப் பார்த்துவிடுவார்களே என்ற அச்சம் ஏற்படுகிறதா? அல்லது இவ்வாறு வைத்திடும் சில பைல்களை நான் மட்டுமே பார்க்க வேண்டும்; சில பைல்களை என் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பார்க்க வேண்டும்; மற்றவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்காகவே மைக்ரோசாப்ட் இந்த மூன்று வகைகளிலும் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கும் வசதியைத் தருகிறது.Personal Folder என்ற பிரிவில் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட பைல்களை தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டும் என ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தலாம். Shared பிரிவில் பைல்களை அடுக்கி வைப்பவர்கள் தாங்கள் விரும்பும் நபர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கலாம். Public என்ற பிரிவில் அனைவரும் பார்த்துப் பயன்படுத்தக் கூடிய ஷேர்வேர் பைல்களை வைக்கலாம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் 5 ஜிபி அளவிலான இடத்தை அளிக்கிறது. இந்த இடத்தில் 1000 பாடல்கள், 30 ஆயிரம் டாகுமெண்ட்கள், 30 ஆயிரம் டிஜிட்டல் படங்களை வைக்கலாம். ஒரு பைலின் அளவு 50 எம்பிக்கும் மேல் இருக்கக் கூடாது.அவர்கள் விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த பைல்களை பயன்படுத்தலாம். அளவில்லாமல் பைல்களை கடிதங்களுடன் வைத்துக் கொள்ள இமெயில் தளங்கள் இருக்கும் போது இத்தகைய வசதி மக்களிடையே எடுபடுமா? என்று கேட்டால் ,

"இந்த வசதியின் மூலம் ஒருவர் தன் நண்பர்களுடனும் நெட்டில் உலாவரும் எவருடனும் தன் பைல்களைத் தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொள்ளலாம். இது இமெயில் அக்கவுண்ட் மூலம் முடியாது. உலக அளவில் 40 கோடி பேர் விண்டோஸ் லைவ் சர்வீஸைப் பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் இன்டர்நெட் மையங்களில் என்ன மாதிரியான பைல் டவுண் லோட் களில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வு செய்த பின்னரே இந்த வசதியை வகைப்படுத்தி' வழங்க முன்வந்தோம்' என்று கூறுகின்றனர் .

உங்களிடம் விண்டோஸ் லைவ், ஹாட் மெயில், மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட் இருந்தால் அதன் மூலம் இந்த விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவை அதில் பதிந்திடாமலேயே பயன்படுத்தலாம். இது போன்ற வசதிகள் சில புராஜக்ட் தயாரிப்பில் ஈடுபடும் மாணவர்கள் குழுவினருக்கு பயன்படும். அவர்களுக்குள் குழுவாக பைல்களைப் பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வசதி. மற்றவர்களும் தங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை அடுத்தவர் அறியாமல் அதே நேரத்தில் தாங்கள் எண்ணிய போதெல்லாம் பயன்படுத்த பைல்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் தள வசதியாக இது பயன்படும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள் Free Domain

ஐஸுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா!

கிட்டத்தட்ட முழு நேர டப்பிங் கலைஞராகவே மாறிவிடுவார் போலிருக்கிறது ரஜினியின் மூத்த மகளும் நடிகர் [^] தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா.

செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு குரல் கொடுத்த ஐஸ்வர்யா தனுஷ், இப்போது எந்திரன் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் குரல் கொடுக்கிறார்.

அவரது குரல் ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால் அவரே பேசட்டும் என்று இயக்குநர் [^] ஷங்கர் கூறியுள்ளாராம். ஐஸ்வர்யா தனுஷுடன் சிறிது நேரம் பேசிய பிறகு, தனக்கு அவரே இனி வரும் தமிழ்ப் படங்களிலும் குரல் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் ஐஸ்வர்யா ராய்.

அதன்படி அவர் நடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு மெகா படமான மணிரத்னத்தின் ராவண் படத்திலும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் தருகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

ஆனால் டப்பிங் குரல் கொடுப்பதை முழு நேரமாகத் தொடர முடியாது என்றும், ஐஸ்வர்யா ராய் விரும்பிக் கேட்டதாலேயே இந்த இரு படங்களுக்கும் குரல் தருவதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்து படம் இயக்கும் முயற்சியிலும் உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ் [^].

"ஜெயம்ரவி" கல்யாணம் பண்ணப்போற பொண்ணு இவர்தான்?

தமிழ் சினிமாவுல இருக்குற எல்லா இளசான ஹீரோக்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிகிட்டே வருது,அந்த கூட்டத்துல இப்போ ஜெயம் ரவியும் சேர்ந்துட்டாரு..,அடுத்தமாசம் 6 ஆம் தேதி அவரோட கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கபோகுது, வழக்கமா பணக்கார வீட்டு பசங்களுக்கும்,சினிமாக்காரங்களுக்கும் நடக்கும் மேயர் இராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்துல தான் இவரோட கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கபோகுது.


அது விசயமா இன்னிக்கி எல்லா பத்திரிகைகாரங்களையும் அவர் சந்திச்சி விஷயத்தை சொன்னாரு,ஆளு கல்யாணம் சந்தோஷம் போல ரொம்ப அழகா,பளிச்சின்னு இருந்தாரு. அவரோட உட்பி (அப்படித்தான் சொன்னாரு) பேரு ஆர்த்தி, சென்னையில லயோலா காலேஜுல தான் பிசினஸ் மேனஜ்மென்ட் படிச்சாங்களாம், இப்போ ஒரு பெரிய கம்பெனியில வேலை பாக்குறாங்களாம்,அதுமட்டுமில்லாம இவங்களும் ஒரு தயாரிப்பாளரோட பொண்ணுதான்,இவங்க அம்மா சுஜாதாவிஜயகுமார் பிரபலமான தெலுங்கு டிவி சீரியல் தயாரிப்பாளர். தமிழ்ல சுந்தர்.சி யை ஹீரோவா வச்சி"வீராப்புன்னு"ஒரு படத்த தயாரிச்சாங்க."கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிட்டேன், அவங்க தான் என்னோட சரியான ஜோடின்னு எனக்கு நான் முடிவு பண்ணிட்டேன், எல்லா விசயத்திலேயும்எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு ஒத்துமை இருக்கு, அவங்க ரொம்ப இனிப்பானவங்க,என்ன நல்லா பாத்துப்பாங்க,ரொம்ப அன்பானவங்க எப்படியெல்லாம் தன்னோட வருங்கால மனைவிய பத்தி வெட்கப்பட்டுகிட்டே சொன்னார் ஜெயம்ரவி, நீங்களும் அவர வாழ்த்துங்க.

பேசுறப்போ அப்பா எடிட்டர் மோகனும்,அண்ணன் இயக்குனர் "ஜெயம்"ராஜாவும் கூட இருந்தாங்க.

Thursday, May 28, 2009

மணிரத்னத்தின் ராவண்...தொடரும் சோதனைகள்!

மணிரத்னம் இயக்கும் மெகா படமான ராவண் படத்துக்கு (தமிழில் அசோகவனம்) சோதனைகள் தொடர்கின்றன. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பாதியில் விலகிக் கொண்டதால், இப்போது புதிய ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார்.

இதுவரை எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்த மணி ரத்னம் மற்றும் சந்தோஷ் சிவன் இருவருக்குமே திருப்தி இல்லாததால், மீண்டும் அவற்றை ரீஷூட் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் ஏற்கெனவே பல காரணங்களால் தாமதமாகிவிட்ட ராவண் படம் எப்போது முடியும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தினச் சம்பளம் அடிப்படையில் பணியாற்றுபவர். விளம்பரப் படங்களில் அவருக்கு நல்ல வருமானம். இந்தியில் பிஸியான கேமரானமேன் இவர்தான்.

இவரை ராவண் படத்துக்கு விரும்பி அமர்த்தினார் மணிரத்னம். ராவண் படத்துக்கு 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் மணிகண்டன். ஆனால் 100 நாட்கள் தாண்டியும் படத்தில் பாதிகூட முடியவில்லையாம். கேரள வனத்துறையினரால் பிரச்சினை, மணிரத்னம் திடீர் உடல் நலக் குறைவால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது போன்ற காரணங்களால் படம் பெருமளவு தாமதமானது.

படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் கொடுத்த கால்ஷீட் முடிந்துவிட்டாலும் மணிரத்னத்துக்காக மேலும் இருமாதங்கள் கால்ஷீட்டை நீட்டிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். விக்ரம் போன்ற மற்ற கலைஞர்களும் சூழல் புரிந்து ஒத்துழைக்கத் தயாராக இருந்தனர். ஆனால் மணிகண்டன் மட்டும் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

இந்த இக்கட்டான சூழலில், மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் கைகொடுத்துள்ளார்.

இப்போது காட்சிகளை மறுபடியும் போட்டுப் பார்த்த மணிரத்னம் மற்றும் சந்தோஷ் சிவனுக்கு, இன்னும் பெட்டராக எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் மேலோங்கிவிட, பல காட்சிகளை மறுபடியும் சுடப் போகிறார்களாம்.

How to check your username is available or not?Check your user name availability in 100+ social networking sites.

How to check your user name is available or not?

We are surfing many new web sites day by day. We are registering our name as member name / user name in many sites. But if any one already registered our name in that site, what will we do? We are trying with new name as our user name.

There are many different Web sites to check our user name availability around 100+ social networking sites. It will check all 100+ sites and display the results of user name availability in Red and Green colors.

Here is the web site list :

http://www.knowem.com/

http://www.usernamez.com/

http://www.checkusernames.com/

http://www.usernamecheck.com/

http://www.namechk.com/

திருவிளையாடல் டயலாக் ரீமிக்ஸ்...

ஹி ஹி ஹி மொபைல் மற்றும் நெட்வொர்க் கம்பெனி களை வைத்து ஒரு திருவிளையாடல் ரீமிக்ஸ்....சேர்ந்தே இருப்பது ?
ஏர்செல் உம் நெட்வொர்க் பிஸி உம் ....
சேராமல் இருப்பது?
ரிலையன்ஸ் இல் இருந்து BSNL க்கு msg...
செய்ய கூடாதது ?
செல் to land லைன் கால்...
செய்ய வேண்டியது?
customer கால்...
செல்லுக்கு?
நோக்கியா...
பில்லுக்கு?
BSNL...
டவர் க்கு ?
ரிலையன்ஸ்...
சைஸ் க்கு?
மோடோரோலா...
கலருக்கு?
LG..
கேமராக்கு ?
சோனி Ericsson...
சவுண்ட் க்கு?
சாம்சுங்...
SMS க்கு?
ஏர்செல்...
offerkku?
ஏர்டெல்...
Recharge க்கு?
Vodafone...
ரேட் க்கு?
டாட்டா இண்டிகாம்...
மொக்கைக்கு?
நான்...
பொலம்பல் க்கு ?
நீங்க....

என்ன வரட்டா.....

Be Cool...
Stay Cool...

ரஜினியுடன் முதல்முறை இணையும் கலாபவன் மணி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்- தி ரோபோ படத்தில் நடிக்கிறார் நடிகர் கலாபவன் மணி.

ரஜினி படத்தில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.

வில்லன் நடிப்பில் தனி முத்திரை பதித்தவரான கலாபவன் மணி, இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை... நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடம் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கலாபவன் மணி கூறியதாவது:

நமக்கு மொழி பேதம் கிடையாது. தென் மாநில மொழிப் படங்கள் அனைத்திலும் நடிக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. மலையாளத்தில் மீண்டும் கதாநாயகனாகிவிட்டேன்.

தெலுங்கில் 6 படங்கள் பண்ணுகிறேன். விரைவில் கன்னடம் படமும் நடிக்கப் போகிறேன்.

தமிழ்ப் படங்கள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். காரணம் எனக்கு பெரிய அங்கீகாரம், அதைவிட பெரிய அளவு சம்பளம் கொடுத்து கவுரவித்தது தமிழ்ப்பட உலகம்தான்.

இப்போதும் சரித்திரம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன்.

இதுவரை ரஜினி சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் அவருடைய எந்திரன் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் எனக்கு நகைச்சுவை கலந்த குணசித்ர கதாபாத்திரம். இந்த வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் முறை ரஜினி சார் படத்தில் நடிப்பது உண்மையிலே மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது என்றார் மணி.

உடலைப் பேண பத்து கட்டளைகள்

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
2. தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.


3. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.


4. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.


5. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.


6. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.


7. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.


8. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !
9. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.


10. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம்

'அழகர் மலையில்' சோனாவின் பிகினி ஆட்டம்!

இசைஞானி இளையராஜாவின் இசை, முதல்முறையாக அவர் ஒரு பாடலில் இசைஞானியாகவே தோன்றுவது, நாயகன் ஆர்கேவின் இயல்பான நடிப்பு, சின்ன இடைவெளிக்குப் பிறகு அவருடன் இணைந்திருக்கும் பானு, காமெடியில் பின்னியெடுத்திருக்கும் வடிவேலு... இப்படி பல சிறப்புகள் கொண்ட அழகர் மலை படத்தில் இன்னொரு 'சிறப்பு'ம் இருக்கிறது.

அதுதான் சோனியாவின் ஜில் தோற்றம். குசேலனுக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் ஜோடி போட்டிருக்கும் சோனா, இதில் கேமராவுக்கே வெட்கம் வருகிற அளவுக்கு இந்தப் படத்துக்காக 6 நாட்கள் நீச்சலுடையிலேயே வலம் வந்தாராம்.

'அழகை அம்சமாகக் காட்டினால் சென்சாரும் ரசிப்பார்கள்' என்ற நம்பிக்கையோடு காட்சிகளை 'செம ஹாட் மச்சி' என சொல்லும் விதத்தில் சுட்டுத் தள்ளிவிட்டாராம் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார்.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து இப்படிச் சொல்கிறார் சோனா:

"ஆர்கே சார் படத்துல எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு... ரொம்ப சந்தோஷமா உணர்கிறேன். வடிவேலு சார் கூட திரும்பவும் ஜோடியா நடிக்கிறேன். காட்சிகள் அருமையா வந்திருக்கு. கிளாமரா நான் வந்தாலும், ரசிக்கிற மாதிரி அழகா மாத்திட்டாரு அந்த காட்சிகளை இயக்குநர்.

இந்தப் படத்துல நடிச்சது நிஜமாகவே ஒரு இனிய அனுபவம். மறக்க முடியாதது. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும்", என்கிறார் சோனா.

Tuesday, May 26, 2009

பீட்டா (Beta) பதிப்புக்களை பயன்படுத்த முன்னர் கவனிக்க வேண்டியவை

ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிரவுசர் மற்றும் பல அப்ளிகேசன் சாப்ட்வேர் தொகுப்புகளின் சோதனைத் தொகுப்புகள் முதலில் வெளியிடப்படுகின்றன. சோதனைத் தொகுப்புகளைப் பதிந்து ஆய்வு செய்வதற்கென சில வல்லுநர்கள் இந்த நிறுவனங்களுக்காக செயல்படுகின்றனர். அதே நேரத்தில் கம்ப்யூட்டர் ஆர்வலர்கள் பலர் இந்த பீட்டா பதிப்பை டவுண்லோட் செய்து சோதனை செய்கின்றனர்.இவர்களில் பலர் ஆர்வத்தின் காரணமாகவே இதனைச் செய்கின்றனர். எது புதியதாக வந்தாலும் முதலில் பயன்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பே காரணம். அதில் தவறில்லை. ஆனால் இத்தகைய சோதனை பதிப்புகளைப் பதிந்து இயக்குவதில் உள்ள பிரச்சினைகளையும் இவர்கள் அறிந்திருக்க வேண்டும். சோதனைத் தொகுப்பினைப் பதிந்து பின் சிரமப்படுவதனைக் காட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள வேண்டும். அவை குறித்து இங்கு காணலாம்.

1. சில சாதனங்கள் இயங்காது

உங்களிடம் பழைய ஆனால் நன்றாக இயங்கும் ஸ்கேனர், டிஜிட்டல் வீடியோ கேமரா அல்லது வேறு ஏதேனும் டிஜிட்டல் மீடியா வைத்து அதனை உங்கள் கம்ப்யூட்டருடன் இணைத்து தினந்தோறும் பயன்படுத்துகிறீர்களா! இந்த சாதனங்களைத் தயாரித்த நிறுவனங்கள் இவற்றுக்கான உதவி தருவதனைக் கைவிட்டு விட்டனவா? அப்படியானால் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பீட்டா பதிப்பைப் பதிய வேண்டாம். ஏனென்றால் இந்த சாதனங்கள் பழையவை என்பதால் அந்த நிறுவனங்கள் புதியதாய் வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கேற்ப இந்த சாதனங்களுக்கான டிரைவர்களை அப்டேட் செய்திருக்கப்போவதில்லை. எனவே புதிய சிஸ்டங்களுடன் இவை இணைந்து செயல்படாது. சோதனைப் பதிப்பை பயன்படுத்தி பார்க்கும் முயற்சியைக் கை விடுவதே நல்லது.

2. சாப்ட்வேர் சப்போர்ட்

ஹார்ட்வேர் சாதனங்கள் எப்படி புதிய சோதனைத் தொகுப்புகளுக்கேற்ப அப்டேட் செய்யப்படுவது இல்லையோ அதே போல சாப்ட்வேர் அப்ளிகேசன்களும் மாற்றப்படுவதில்லை. எப்படியும் சில மாறுதல்களை இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் கொண்டு வரப்போகின்றன. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சாப்ட்வேர் நிறுவனங்கள் காத்திருக்கும். நீங்கள் சோதனைத் தொகுப்பினை நிறுவி பயன்படுத்தினால் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்கும். ஆனால் பாதுகாப்பில்லாமல் இயங்கும். எனவே இத்கைய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தினந்தோறும் பயன்படுத்துவதாக இருந்தால் பீட்டா தொகுப்பினைத் தொடாமல் இருப்பது நல்லது.

3. பிழைகள் நிச்சயம் இருக்கலாம்

சரியான பதிப்பிற்கு முந்தைய சோதனை பதிப்பாக இருந்தாலும் நிறைய கோடிங் பிழைகள் ஒரு சோதனைப் பதிப்பில் இருக்கும். இந்த பிழைகளால் உங்கள் நெட்வொர்க் இணைப்பு கிடைக்கப் பெறாமல் போகலாம்; போல்டர்கள் திறக்கப்படாமல் இருக்கலாம்; இதுவரை பெறாத புதிய பிழைச் செய்திகள் கிடைக்கலாம். சில பிழைகள் உங்கள் மல்ட்டி மீடியா பைல்களைச் சிதைக்கலாம்; வேர்ட் டாகுமெண்ட்களில் பதியப்பட்டுள்ள படங்களை நீக்கலாம். எனவே இது போன்ற எதிர்பாராத விபத்துக்களைச் சந்திக்கும் நிலை இருப்பதால் சோதனைத் தொகுப்பினைப் பதிவதை நன்கு யோசித்து செய்திடவும்.

அப்படியானால் சோதனைத் தொகுப்பினை சோதித்துப் பார்க்கவே கூடாதா? என நீங்கள் கேட்கலாம். உங்கள் ஆர்வத்திற்கு தடை போட வேண்டியதே இல்லை. நீங்கள் பயன்படுத்திப் பார்த்து அது குறித்த கருத்துக்களை அதனை வெளியிட்ட நிறுவனத்திற்கு அனுப்பலாம். அதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. பேக் அப்

உங்களுடைய அனைத்து டேட்டா பைல்களுக்கும் பேக் அப் எடுங்கள். உங்களுடைய தனிப்பட்ட மற்றும் வர்த்தகம் சம்பந் தப்பட்ட பைல்கள் அனைத்தையும் எடுத்துவிடுங்கள். ஏனென்றால் சோதனைத் தொகுப்புகள் டிஸ்க் முழுவதையும் கரப்ட் செய்யாது. ஆனால் சில வகை பைல்களை முழுமையாகச் சேதப்படுத்தும். இந்த சேதம் கூட முழுமையாக உங்கள் கவனத்திற்கு வராது. தொடர்ந்து பயன்படுத்தும் போதுதான் தெரிய வரும். அப்போது மீண்டும் அவற்றை அமைப்பது பெரிய சிக்கலான விஷயமாகிவிடும்.

5. கம்ப்யூட்டர் பேக் அப்

உங்களுடைய கம்ப்யூட்டர் ஏற்கனவே நல்லதொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். அத்தகைய நிலையில் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கினை அப்படியே முழுமையாக பேக் அப் செய்திடவும். இதற்கு டிஸ்க் குளோனிங் டூல் என சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் சிறந்தவையாக Norton Ghost Clonezilla கருதப்படுகின்றன. இதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஓர் இலவச புரோகிராம். அதனையே பயன்படுத்தலாம். இந்த புரோகிராம்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் காப்பி ஒன்றை அப்படியே எடுத்து வைத்துவிடும். சோதனைப் பதிப்பினால் பிரச்சினை ஏற்பட்டு அதனை நீக்கிவிட்டு பின் மீண்டும் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அமைக்க வேண்டுமானால் நேரமும் உங்கள் உழைப்பும் அதிகம் தேவைப்படும். அந்த நேரத்தில் இது போன்ற குளோனிங் செய்யப்பட்ட டிஸ்க்கினை எளிதாக சில நிமிடங்களில் பதித்துவிடலாம். உடனே பழையபடி இயங்கவும் தொடங்கிவிடலாம். இந்த குளோன் டிஸ்க் இமேஜ் கூட இரண்டு நகல் எடுத்து வைப்பது நல்லது.

6. அவர்கள் வரமாட்டார்கள்

ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சோதனை பதிப்புகளினால் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்சினை ஏற்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு பாதிக்கப்பட்டால் அந்த சோதனை பதிப்பினை வழங்கிய நிறுவனம் நிச்சயமாய் உதவாது. நீங்கள் இந்த சோதனை பதிப்பை இன்ஸ்டால் செய்திடும் முன், இது போல இழப்பு அல்லது பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பு ஏற்க மாட்டோம் என்ற கண்டிஷன் போட்டு அதற்கு நீங்கள் ஒத்துக் கொண்ட பின்னர் தான் உங்களால் அதனைப் பதிய முடியும். எனவே எந்த விளைவினையும் நீங்களே சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந் தால் மட்டுமே இந்த முயற்சியில் ஈடுபடுங்கள்.

7. எந்த கம்ப்யூட்டரில் சோதனை?

இப்போதெல்லாம் வீடுகளில் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை வைத்து இயக்குகிறோம். ஆனால் ஒரு கம்ப்யூட்டரில் தான் முக்கிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம். இது போன்ற சோதனைகளை எல்லாம் இந்த முக்கிய கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்போதுதான் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நம்முடைய அன்றாட கம்ப்யூட்டர் பணி பாதிக்காது. பீட்டா பதிப்புகளைப் பதிந்து இயக்கிப் பார்த்து அந்த புதிய அனுபவத்தில் மகிழ்ச்சி கொள்வது நமக்கு உற்சாகம் தரும் செயல்தான். இருப்பினும் மேலே சொன்னபடி ஒரு பாதுகாப்பு வலையை ஏற்படுத்திக் கொண்டால் இன்னும் உற்சாகமாக இருக்கலாம் அல்லவா!

'ஹோட்டல் ஹோட்டலா அலையறது கஷ்டமா இருக்கு!-த்ரிஷா

"வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஹோட்டல் வாசம்... முன்பே ஒரு ஹோட்டல்தான் பெயரைக் கெடுத்தது. மீண்டும் அந்த மாதிரி ஆகிவிடக்கூடாது என மிகுந்த எச்சரிக்கையாகவே இருந்தேன்.

பயந்து பயந்து ஹோட்டல் மாறிக் கொண்டிருப்பதை விட இனி சொந்தமாக வீடு வாங்கிக் கொள்வது மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...", என்கிறார் த்ரிஷா.

தமிழில் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா, தனுஷுடன் ஆடுகளம், கவுதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலம் போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் த்ரிஷா தெலுங்கிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் இவருக்கு ஆந்திராவில் சொந்த வீடு இல்லாததால் ஹோட்டலிலேயே தங்கி வந்தாராம். ஏற்கெனவே இவரைத் தொடர்புபடுத்தி ஒரு நிர்வாண வீடியோ மற்றும் படங்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

ஹோட்டலில் தங்குவதால்தான் இத்தனைப் பிரச்சினை என்பதால் இப்போது சொந்தமாகவே ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்கும் திட்டத்தில் உள்ளாராம் அவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இன்னும் எத்தனை நாளைக்கு சூட்கேஸும் கையுமாக ஹோட்டல் ஹோட்டலாக அலைவது... அதனால் ஹைதராபாத்தில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளேன்", என்றார்.

அக்டோபரில் சாம்பியன்ஸ் லீக்: 12 அணிகள் பங்கேற்பு

இந்தியாவில் வரும் அக்டோபரில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20" தொடர் நடக்க உள்ளது. இதில் ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்ற டெக்கான், பெங்களூரு அணிகள் மற்றும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டில்லி அணி என 3 இந்திய அணிகள் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.

ஐ.பி.எல்., சார்பில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20" தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மும்பை பயங்கரவாத தாக்குதலால் தொடர் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு சாம்பியன் லீக் தொடர் வரும் அக். 8 முதல் 23ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதில் ஐ.பி.எல்.,-2ல் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ், 2 வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் நேரடியாக தேர்வு பெற்றன.

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டில்லி டேர் டெவில்ஸ் என இந்தியாவில் இருந்து மொத்தம் 3 அணிகளும், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் "டாப்-2" "டுவென்டி-20" அணிகள் மற்றும் நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் டுவென்டி-20' சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் என மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன.

பாக்., இல்லை: பாகிஸ்தான் அரசு அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா சென்று விளையாட அனுமதி கொடுக்காது. இதற்கான அணிகளை அனுப்ப வரும் 30ம் தேதி கடைசி நாள். இதுவரை பாகிஸ்தானில் இருந்து அணியை அனுப்புவதில் எந்த தகவலும் இல்லை என்பதால் அந்த அணி, இம்முறை தொடரில் பங்கேற்காது.

மோடி உறுதி: சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறியது: கிரிக்கெட்டை உலக அளவில் கொண்டு செல்ல சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20" போட்டிகள் உதவும். முதல் கட்ட சாம்பியன்ஸ் லீக் தொடரை எதிர்பாராத காரணங்களால் நடத்த முடியவில்லை.

ஆனால் இம்முறை இந்தியாவில் தொடரை வெற்றிகரமாக நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு லலித் மோடி தெரிவித்தார்.

ஏரியா மாறிய ரம்யா

தமிழில் வாய்ப்புகள் வராமல் போனதால் வெறுத்துப் போன ரம்யா நம்பீசன் இப்போது தெலுங்குக்கு தனது இடத்தை மாற்றி விட்டார்.

மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ரம்யாவை ராமன் தேடிய சீதைக்காக தமிழுக்குக் கூட்டி வந்தார்கள்.

படம் நன்றாக ஓடியது. ரம்யாவுக்கும் நல்லஅறிமுகம் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள்தான் வரவில்லை. இதனால் தொடர்ந்து மலையாளத்திலேயே நடித்து வந்தார்.

ஆனால் இப்போது ரம்யாவைத் தேடி தெலுங்குப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதாம்.

துட்டும் ஜாஸ்தி, அதிக வாய்ப்புகளும் வரும் வாய்ப்பு இருப்பதால் தெலுங்குக்கு முக்கியத்துவம் தரத் திட்டமிட்டுள்ளாராம் ரம்யா. முதல் கட்டமாக சாரை வீரராஜு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா.

விருமாண்டி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கண்ணன் இப்படத்தை இயக்குகிறாராம்.

தமிழில் தற்போது ரம்யா வசம் ஒரே ஒரு படமாக ஆட்டநாயகன் மட்டுமே உள்ளது. இதில் ஷக்தியுடன் ஜோடி போட்டுள்ளார் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் இழுபறியாகிக் கொண்டிருப்பதால்தான் ரூட்டை மாற்றி விட்டாராம் ரம்யா.

டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றிக்கு காரணம் கில்கிறிஸ்ட்: அஃப்ரிடி

தென்ஆப்ரிக்காவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு, அணித்தலைவர் கில்கிறிஸ்டின் சிறப்பான செயல்பாடுகளே காரணம் என பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷாஹித் அஃப்ரிடி கூறியுள்ளார்.

இந்தியாவில் நடந்த முதலாவது ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய அஃப்ரிடி, அப்போதைய அணித்தலைவர் லக்ஷ்மனுக்கு பதிலாக கில்கிறிஸ்டை தலைவராக நியமிக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்தார். இதன் காரணமாக அவர் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக தென்ஆப்ரிக்காவில் நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில், கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது.

இதுபற்றி தற்போது பேசியுள்ள அஃப்ரிடி, அணித்தலைவராக இருந்த லக்ஷ்மனுக்கு பதிலாக கில்கிறிஸ்டை நியமிக்க வேண்டும் எனக் கூறிய போது என்னை எல்லோரும் தவறாகக் கருதினர்.

ஆனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத இருபது-20 போட்டிகளுக்கு லக்ஷ்மனின் தலைமை சரியாக வராது என்ற நோக்கத்தில்தான் அப்படிக் கூறினேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், லக்ஷ்மனுக்கும் எந்தவித மனஸ்தாபமும் கிடையாது. லக்ஷ்மன் சிறந்த டெஸ்ட் வீரர் என்பதில் சந்தேகமில்லை.

முக்கியமான கட்டங்களில் அதிரடியான அதேசமயம் மதிநுட்பமான முடிவுகளை எடுப்பதில் கில்கிறிஸ்ட் சிறப்பாக செயல்படுகிறார்.

கடந்தாண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள், தென்ஆப்ரிக்காவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றனர். கடந்தாண்டு சோபிக்கத் தவறிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி, தென்ஆப்ரிக்காவில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு முழுமுதற் காரணம் கில்கிறிஸ்டின் தலைமைப் பண்புகள்தான் என அஃப்ரிடி கூறியுள்ளார்.

Sunday, May 24, 2009

கன்னடத்தில் மோனிகா

'அழகி' மோனிகா கன்னடத்தில் புதுப் படத்தில் புக் ஆகியுள்ளார். இப்படத்தில் மீரா ஜாஸ்மினும் இருக்கிறார்.

சின்னப் பெண்ணாக இருந்தது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார் மோனிகா. ஹீரோயினாக அவர் விஸ்வரூபம் காட்டியது சிலந்தி படத்தில்தான். ஆனால் அத்தனை கவர்ச்சி[^] காட்டியும் கூட தமிழில் அவருக்கு கை நிறையப் படங்கள் வரவில்லை.

ஆனால் கன்னடத்தில் இவரை ஹீரோயினாகப் போட்டு ஒரு படம்[^] தயாரிக்கிறார்கள். கன்னடத்து சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்தான் இப்படத்தின் நாயகன்.

தேவரு கொட்ட தங்கி (கடவுள் கொடுத்த தங்கச்சி) என்பதுதான் படத்தின் பெயர். ஓம் சாய் பிரகாஷ் இயக்குகிறார். சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் மோனிகா.

சிவராஜ் குமாரின் தங்கை வேடத்தில் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். படத்தில் மோனிகாதான் நாயகி என்றாலும் கூட கதைப்படி மீராவுக்கும் வெயிட்டான பாத்திரமாம். இதனால்தான் தான் நாயகி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டாராம் மீரா.

ஏற்கனவே சண்டக் கோழி படத்தில் மீராவும், மோனிகாவும் இணைந்து நடித்துள்ளனர். அப்படத்தில் மோனிகாவுக்கு தம்மாத்தூண்டு பாத்திரம். இப்போது கன்னடத்தில் மோனிகா நாயகியாக நடிக்கும் படத்தில் 2வது ரோலில் நடிக்கிறார் மீரா.
Tags: cinema, tamil, kannadam, mo

விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக்

கம்ப்யூட்டரில் பைல்களைத் தொடர்ந்து எழுதுவதும் அழிப்பதுவுமாக இருக்கையில் அவை தொடர்ச்சியாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படுவதில்லை. ஏனென்றால் அவ்வப்போது பைல்களை அழிக்கையில் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்ச்சியாக அடுத்த பைலுக்குக் கிடைப்பதில்லை. இதனைச் சரி செய்திடத்தான் விண்டோஸ் நமக்கு டிபிராக் (‘Defrag’) என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது.

இதன் மூலம் துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படும் புரோகிராம்கள் மீண்டும் ஓரளவிற்குத் தொடர்ச்சியாக எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட பின் இந்த பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து படிப்பது விரைவாக நடக்கிறது. எனவே இந்த டிபிராக் செயல்பாட்டினை நாம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் வெற்றிடங்கள் சிதறலாக இல்லாமல் தொடர்ச்சியாக நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒரு முறை டிபிராக் செய்திட கம்ப்யூட்டர் பிராசசரின் வேகம் மற்றும் ஏற்கனவே பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது சில வேளைகளில் நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் இருக்கும். அந்நேரத்தில் நம்மால் வேறு எந்த வேலையையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியாது.

இவ்வாறு இல்லாமல், எப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படாமல், பைல்கள் எதுவும் எழுதப்படாமல் இருக்கும் நேரத்தில், பின்னணியில் இந்த டிபிராக் செயல்பாடு தானாகவே மேற்கொள்ளப்பட்டால் எப்படி இருக்கும். முதலில் நமக்கு நேரம் மிச்சமாகும். இரண்டாவதாக டிபிராக் உடனுடக்குடன் செய்யப்படுவதால் புரோகிராம்களையும் பைல்களையும் இயக்குவது வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப்படும்.

இந்த வேலையைத்தான் Smart Defrag செய்கிறது. இது ஒரு இலவசமாக டவுண்லோட் செய்யப்படக் கூடிய புரோகிராம். இதனைப் பதிந்துவிட்டால் எப்போதெல்லாம் உங்கள் கம்ப்யூட்டர் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறதோ அப்போதெல்லாம் ஸ்மார்ட் டிபிராக் செயல்பட்டு ஹார்ட் டிஸ்க்கை ஒழுங்கு செய்கிறது. மீண்டும் நீங்கள் கம்ப்யூட்டரில் பணியாற்றத் தொடங்கியவுடன் தற்காலிகமாகத் தன் செயல்பாட்டினை நிறுத்தி வைக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை நிறுத்தும் வரை காத்திருக்கிறது.

பின் மீண்டும் நீங்கள் வேலையை நிறுத்தியவுடன் தன் பணியை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது. இதனால் நாம் கம்ப்யூட்டரை டிபிராக் செய்வது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த புரோகிராமை பின்னணியில் இயங்கச் செய்துவிட்டு நம் இஷ்டப்படி கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருக்கலாம். நம் சிஸ்டமும் ட்யூன் செய்யப்பட்டு எப்போதும் விரைவாகவும் எளிதாகவும் இயங்கும்.

இந்த மென்பொருளை இலவசமாக டவுண்லோட் செய்ய இங்கே கிளிக்செய்யுங்கள்

தம் அடிக்கச் சொல்லி மும்தாஜிடம் ரசிகர்கள் கலாட்டா

ராஜாதி ராஜா படத்தில் சிகரெட் பிடித்தது போல பிடியுங்கள் என்று கூறி நடிகை மும்தாஜிடம் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷக்தி சிதம்பரம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ராஜாதிராஜாவி்ல் ராகவ லாரன்ஸ் நடித்துள்ளார். இப்படத்தில் மும்தாஜ் உள்பட நான்கு பேர் நாயகிகள்.

மும்தாஜ் இப்படத்தில் வில்லத்தனமாக நடித்துள்ளார். படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியிலும் நடித்துள்ளார்.

கஞ்சா அழகியாக இருந்து, விபச்சார அழகியாக மாறி பின்னர் படிப்படியாக 'உயர்ந்து' அரசியல்வாதி ஆகி விடும் கேரக்டரில் நடித்துள்ளார் மும்தாஜ்.

படம் ஹிட் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சென்னையில் உள்ள மினி உதயம் தியேட்டரில் ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்க விரும்பினார் மும்தாஜ். இதற்காக அவரும், இயக்குநர் ஷக்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சென்றனர்.

யாருக்கும் தெரியாத வகையில் அமர்ந்து படம் பார்த்தார் மும்தாஜ். ஆனால் ரசிகர்கள் மும்தாஜ் வந்ததை மோப்பம் பிடித்து விட்டார்கள்.

இதையடுத்து மும்தாஜை சீண்டும் வகையில், படத்தில் மும்தாஜ் வசனம் பேசும்போதெல்லாம் பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்செட் ஆனார் மும்தாஜ்.

இடைவேளையின்போது நிலைமை மோசமானது. மும்தாஜை ரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்தனர். அவர்களை விலக்கி விட ஷக்தி சிதம்பரம் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

அப்போது குறும்புக்கார ரசிகர் ஒருவர் சிகரெட்டை எடுத்து மும்தாஜிடம் கொடுத்து படத்தில் வருவது போல தம் அடிங்க மேடம் என்று கேட்க கடுப்பான மும்தாஜ், நிஜத்தில் நான் புகை பிடிப்பதில்லை, படத்துக்காகத்தான் அவ்வாறு நடித்தேன் என்றார்.

ரசிகர்களிடம் இருந்து தப்பினால் போதும் என்று நினைத்த மும்தாஜ், அவர்கள் கோரிக்கையின்போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார்.

தெ.ஆப்பிரிக்காவின் ட்யூன் கோஸட்ஸ் மிஸ் ஐபிஎல் அழகியாக தேர்வு


ஜோஹன்னஸ்பர்க்: கிழக்கு லண்டனைச் சேர்ந்த 35 வயது மாடல் அழகியான ட்யூன் கோஸட்ஸ், மிஸ் பாலிவுட் ஐபிஎல் தென் ஆப்பிரிக்கா பட்டத்தை வென்றுள்ளார்.

ஜோஹன்னஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை காலை, மான்டி காசினோ என்டர்டெய்ன்மென்ட் வளாகத்தில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் அவருக்கு இந்த பட்டம் சூட்டப்பட்டது.

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் இறுதியிலும் ஒரு அழகி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். மொத்தம் 48 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒருவரை மிஸ் பாலிவுட் ஐபிஎல் தென் ஆப்பிரிக்கா பட்டத்திற்கு இணையதள வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்தனர்.

அதில் ட்யூன் கோஸட்ஸ் வெற்றி பெற்றார். இவருக்கு ஷாருக் கானுடன் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர மேலும் பல பரிசுகளும் வழங்கப்படும்.

இந்த வித்தியாசமான போட்டி தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஜோஹன்னஸ்பர்க்கைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் ஜென்னா கிளவுட் (24 வயது) 2வது இடத்தைப் பெற்றார். இவருக்கு முதல் இளவரசி என்ற கூடுதல் பட்டமும் கிடைத்தது. 2வது இளவரசியாக டுடனே நோரே தேர்வானார்.

இதுவரை ஒரு பாலிவுட் படம் கூட பார்த்ததில்லையாம் ட்யூன். இருப்பினும் உடனே போய் பாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்தி கற்கவும் போகிறாராம்.

இந்தப் போட்டியில் நிறைய இந்தியப் போட்டியாளர்களும் இருந்தனர். ஆனால் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர்தான் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் வெற்றி பெற்ற ட்யூனுக்கு தங்கம், வெள்ளி, வைர நகைள், அரிய வகை கற்கள் உள்ளிட்டவை பரிசாகக் கிடைத்தன.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகி மிஷல் மெக்லீன் இந்தப் பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக மெக்லீன் பங்கேற்ற நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியும் கலந்து கொண்டு ஆடினார்.

ஐபிஎல் 2வது சீசன் போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

How to Record Skype Conversations?


How to Record Skype Conversations?


Skype is very very essential Application in this VoIP days. It uses VoIP (Voice Over Internet Protocol) Technology.

It connects two different persons in different places of the world. You can freely use Skype. But this Skype Application does not have Conversation Recording facility. But we can record Skype voice using different freeware tools.

Here I am listing 5 different freeware tools to record Skype conversations.

All the applications are doing the same operations - recording voice call. All applications have a RED button to record. And they have Pause, Stop buttons too.

You can record Skype based voice conversation into MP3 format.

Here is the download links:

Skype call Recorder

Call Graph

MX Skype Recorder

KishKish SAM

Pamela Call Recorder

ஆன்லைன் வைரஸ் பரிசோதனை

பிரபலமான ஆண்டி வைரஸ் புரோகிராம் வைத்திருக்கிறேன். அவ்வப்போது இன்டர்நெட்டில் அதன் தளம் சென்று அப்டேட் செய்து வருகிறேன். இருந்தாலும் வைரஸ் வந்துவிட்டதோ என்று எப்போதும் அச்சம் என்று சிலர் புலம்புகின்றனர். சிலரோ இத்தகைய புரோகிராம் இருந்தும் வைரஸ் வந்துவிட்டதே என்று தவிக்கின்றனர். ஏன் இந்த நிலை? எத்தகைய திறன் மிக்க ஆண்டி வைரஸ் தொகுப்பாயிருந்தாலும் சில வைரஸ்களை, குறிப்பாகப் புதியதாக எழுதி உலாவிடப்படும் வைரஸ்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

இதற்குக் காரணம் வைரஸ்களை உருவாக்குபவர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதுதான். மேலும் பிரவுசர் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களில் ஹேக்கர்கள் நுழையும் வகையில் பல பலவீனமான இடங்கள் இருப்பதுதான். இத்தகைய சூழ்நிலைகளில் நமக்கு உதவ இணைய தளம் ஒன்று செயல்படுகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது பைல் ஒன்றில் வைரஸ் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் அல்லது டவுண்லோட் செய்யப்படும் அனைத்து புரோகிராம்களையும் நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும் என விரும்பினால் உடனே அதனை இந்த தளத்திற்கு அனுப்பலாம். இந்த தளம் நீங்கள் அனுப்பும் புரோகிராமினை முழுமையாக சோதனை செய்து வைரஸ் இருக்கிறதா எனச் சோதிக்கும்.

ஜஸ்ட் லைக் தேட் சோதிக்காமல் 36 வெவ்வேறு வகையான ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் கொண்டு சோதிக்கும். முடிவுகளை உடனே நமக்கு அறிவிக்கும். இதற்கான கட்டணம் எதுவும் இல்லை. நீங்களும் சந்தேகப்படும் அனைத்து புரோகிராம்களையும் இந்த தளத்திற்கு அனுப்பிப் பார்க்கலாமே.

தற்போது தமிழ் வலைப்பதிவுகளில் நெல்லை தமிழ் திரட்டியால் வழியே வந்த மால்வேர் வைரஸ் பிரச்சினையால் வலைத்தளங்கள் முடக்கப்படுகின்றன. தங்கள் தளங்களிலும் வைரஸ் உடுருவியிருக்குமோ என சந்தேகிப்பவர்கள் தங்கள் வலைப்பதிவுகளை BackUp செய்து இந்த தளத்தில் பரிசோதித்துப் பார்ர்க்கலாம்.

இணையத்தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்

Saturday, May 23, 2009

ஸ்பைடர் மேன்-3 பட நாயகி லூசி கார்டன் தற்கொலை செய்து கொண்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லூசி கார்டன். ஸ்பைடர்மேன் 3 படத்தில் ஜெனிபர் டுகான் என்ற பெண் நிருபர் வேடத்தில் நடித்திருந்தார். பாரீஸில் உள்ள தனது வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.


அவரது 29வது பிறந்த நாள் இன்னும் 2 நாளில் வரவுள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்டு விட்டார் லூசி. தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை.

லூசி 2001ம் ஆண்டு பெர்ப்யூம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். 12 படங்களில் நடித்துள்ளார்.

பிரெஞ்சுப் பாடகர் செர்ஜி கெய்ன்ஸ்பெர்க் குறித்த படம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் லூசி தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

எந்திரன்: 57 விதவிதமான காஸ்ட்யூம்களில் ஐஸ்வர்யா!

எந்திரன் படத்தில் 57 விதவிதமான உடைகள் மற்றும் வித்தியாசமான பழங்குடிப் பெண் வேடத்தில் தோன்றுகிறாராம் ஐஸ்வர்யா ராய்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கிறார். இவருக்கு மிகப்பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளது.

படம் குறித்த தகவல்கள் பெரும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அதில் பணியாற்றும் கலைஞர்களஅ சமயத்தில் அவ்வப்போது கூறி வருகின்றனர்.

எந்திரனில் ஐஸ்வர்யா ராய்க்கு மேக்கப் கலைஞராக பணியாற்றுவர் ஓஜா ரஜனி.

எந்திரனில் தனது பங்கு குறித்தும், படத்தில் ஐஸ்வர்யா ராயின் அழகு மற்றும் மேக்கப் குறித்தும் அவர் கூறியுள்ளதாவது:

எந்திரன் இந்தியாவின் மிகச் சிறந்த ஷோவாக இருக்கும் என்று நினைக்கிறேன். திரைப்படம் என்று பார்த்தால் நான் ஐஸ்வர்யா ராயின் மேக் அப் உமனாக பணியாற்றுவது எந்திரனில்தான்.

எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு 57 விதவிதமான காஸ்ட்யூம்கள் மற்றும் மேக்கப் உத்திகளை ஐஸ்வர்யாவுக்கு கையாண்டுள்ளோம்.

குறிப்பாக ஒரு பாடலில் மெக்ஸிகன் பழங்குடி இனப் பெண் ணைப் போன்ற தோற்றத்தில் வருவார். அந்த தோற்றத்தில் அவரது இளமையும் கவர்ச்சியும் இளைஞர்களை தீப்பிடிக்க வைக்கும். இன்னொரு பக்கம் மணீஷ் மல்ஹோத்ராவின் சிறப்பான டிஸைனிங் படத்துக்கே புதிய அழகைக் கொடுத்துள்ளது..., என்றார்.

இலவச தரவிறக்க மென்பொருட்கள்

இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் இணைப்பு வழங்கும் வேகத்தைப் பயன்படுத்தி நாம் டவுண்லோட் செய்திடும் பைல்களை எந்த சிக்கலுமின்றி வேகமாக இறக்கித் தர நமக்கு டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.


அவ்வகையில் இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் நமக்கு கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் தொகுப்புடன் இத்தகைய வசதி இணைந்தே இருந்தாலும் டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தரும் பல வசதிகள் அதில் இல்லை.

ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை கிளிக் செய்து டவுண்லோட் செய்திடும் வசதி போன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. பொதுவாக இந்த கூடுதல் வசதிகள் எல்லாம் இத்தகைய புரோகிராம்களில் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இலவச புரோகிராம்கள் அதிகமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக் கும் இந்நாளில் மேல் குறிப்பிட்ட வசதிகள் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களிலேயே தரப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில டவுண்லோட் மேனேஜர்களில் அதிகமான எண்ணிக்கையில் இந்த வசதிகள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பாகும். அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

Free Download Manager

1. புரோகிராம் பெயர் : FreeDownload Manager

2. வழங்குபவர் : FreeDownload Manager.org

3. தரவிறக்க தள முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

4. பைல் அளவு: 5754 கேபி.

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட் வேர் தொகுப்பு. இதன் பெயருக்கேற்ற வகையில் சிறப்பான பல வசதிகளை இந்த புரோகிராம் தருகிறது. அனைத்து பிரவுசர் தொகுப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இன்டர்பேஸ் இயங்குகிறது. எப்.டி.பி. மற்றும் எச்.டி.டி.பி. வகைகளுக்குத் தனித்தனியே கிளையண்ட் புரோகிராம்கள் இணைக்கப்பட்டுள்ளன.

டவுண்லோட் செய்யப்பட வேண்டிய புரோகிராம்களை பகுதி பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்து தருகிறது. டவுண்லோட் செய்திடும் நேரத்தில் இன்டர்நெட் தொடர்பு விட்டுப் போனாலோ அல்லது கம்ப்யூட்டர் முடங்கிப் போனாலோ அடுத்த முறை விட்டுப்போன இடத்திலிருந்து பைலை டவுண்லோட் செய்து இணைத்து தரும் திறன் கொண்டது. வீடியோ தளங்களிலிருந்து டவுண்லோட் செய்வதுடன் பார்மட்டுகளையும் மாற்றி தருகிறது. இதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள அப்லோட் மேனேஜர் புரோகிராம் பைல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள அப்லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. ஒரு பைலை பல்வேறு லிங்க்குகளிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்து தரும் திறன் கொண்டது. டவுண்லோட் செய்யப்படும் பைல்களை அதன் வகைகளுக்கிணங்க சேவ் செய்து நிர்வகிக்க உதவிடுகிறது.

ஒரு பைலை டவுண்லோட் செய்திடும் முன் அந்த பைல் குறித்து மற்றவர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று காட்டப்படுகிறது. அதே போல நீங்களும் உங்கள் கருத்தைப் பதிவு செய்திடலாம். இதனால் கெடுதல் விளைவிக்கும் பைல்களை டவுண்லோட் செய்திடுவதனைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்திடலாம்.

முழு இணையதளத்தையும் அப்படியே டவுண்லோட் செய்திடும் திறன் கொண்டது. இதற்கென எச்.டி.எம்.எல். ஸ்பைடர் என ஒரு புரோகிராம் பிரிவு தரப்படுகிறது. அதனால் தான் இதனை சைட் ரிப்பர் (‘site ripper’) என அழைக்கின்றனர்.

Orbit Downloader

1. புரோகிராம் பெயர் : OrbitDownloader

2. வழங்குபவர் : OrbitDownloader.com

3. தரவிறக்க தள முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

4. பைல் அளவு: 2217 கேபி.

டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்களின் லீடர் என இது செல்லமாக அழைக்கப்படுகிறது. ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட துணை புரியும் நோக் கத்துடன் இந்த புரோகிராம் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய சில அம்சங்களுடன் வழக்கம்போலான இ.எக்ஸ்.இ. மற்றும் காம் பைல்கள் மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மீடியா வகையைச் சேர்ந்த ஆடியோ மற்றும் வீடியோ பைல் களை டவுண்லோட் செய்திடுகிறது. யு–ட்யூப் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற சில தளங்களிலிருந்து நேரடியாக டவுண் லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. இன்றைக்குக் கிடைக்கும் சிறந்த டவுண் லோட் மேனேஜர் புரோகிராம்களில் ஒன்று எனப் பலராலும் பாராட்டுப் பெற்றது.

இதனைப் பயன்படுத்த எந்தவிதமான ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை. விளம்பரங்களோ அல்லது ஸ்பை வேர் புரோகிராம்களோ இல்லை என சான்று பெற்றது. யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திட இது மிக உகந்தது என பாராட்டுப் பெற்றது. தற்போதைய பதிப்பு 2.7.3.

Flash Get

1. புரோகிராம் பெயர் : FlashGet

2. வழங்குபவர் : Trend Media

3. தரவிறக்க தள முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

4. பைல் அளவு: 4520கேபி.

இன்டர்நெட்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண் டுள்ள புரோகிராமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டவுண் லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது எளிதாக தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப் பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்துவகைப்படுத்தும் வழிகள்.

இந்த புரோகிராம் முதலில் சீன சொல்லை ஒட்டி ஜெட் கார் என அழைக்கப் பட்டது. இதன் புதிய பதிப்பு 1.9.6. இதில் மல்ட்டி சர்வர் ஹைபர் த்ரெடிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு புரோடோகால் முறைகளை இதில் பயன்படுத்தி டவுண் லோட் செய்திடலாம். இறக்கப் படும் பைலின் அளவிற்கேற்ப பைல் இறக்கப் படும் வேகம் 6 முதல் 10 முறை அதிகரிக்கப்படுகிறது.

டவுண்லோட் செய்யப் படும் பைலை பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இந்த பகுதிகளை டவுண்லோட் செய்து பின் இணைத்துத் தருகிறது. ஒரு பைல் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல பைல்களை இது போல பிரிவுகளாகப் பிரித்து டவுண்லோட் செய்கிறது. அத்துடன் எந்த நேரத்தில் எந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும் என வரையறை செய்திடலாம். இதனால் நம் இன்டர் நெட் இணைப்பு வேகத்தினை ஒட்டியும் நம் தேவையை பொறுத்தும் டவுண் லோட் செய்திட முடிகிறது.

இந்த புரோகிராமைப் பயன்படுத்துகையில் எந்த அட்–வேர் புரோகிராமும் குறுக்கிடாது. எந்தவிதமான ஸ்பைவேர் புரோகிராமும் இல்லை என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான ராம் மெமரியைப் பயன்படுத்துவதால் டவுண்லோட் செய்திடுகையில் நம்முடைய வேலையை கம்ப்யூட் டரில் தொடர்ந்து மேற் கொள்ளலாம். டவுண்லோட் முடிந்தவுடன் தானாக கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி டவுண்லோட் செய்யப் பட்ட பைலில் வைரஸ் எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்கிறது.

ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை டவுண்லோட் செய்திடும் வசதிபோன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. டவுண்லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்து வகைப்படுத்தும் வழிகள்.

Wednesday, May 20, 2009

நடிகை கார்த்திகா திருமணம் காதலித்தவரை கரம் பிடித்தார்

தமிழ் சினிமாவில் இது கல்யாண சீசன் போலும். நடிகை மீனாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. நடிகை அபிதாவுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது.
அவர்கள் எல்லாரும் திருணமத்திற்கு காத்திருக்க, நடிகை கார்த்திகாவோ காதலித்து வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணமும் பண்ணிவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகப்போகிறார். தமிழ் சினிமாவில் இரண்டு கார்த்திகா இருக்கின்றனர், இவர் நம் நாடு படத்தில் சரத்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆன கார்த்திகா. அதன் பின்பு திண்டுக்கல் சாரதியில் சந்தேகப்படும் கணவனுக்கு அழகு மனைவியாக வந்து நடிப்பில் அனைவரின் உள்ளத்தையும் அள்ளிக் கொண்டு போனார். இப்போது பாலைவனச்சோலை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கேரளாவைச் சேர்ந்த மெரின் மேத்யூ என்பவர் கார்த்திகாவிடம் ரசிகனாக அறிமுகம் ஆனார். அடிக்கடி இருவரும் போனில் பேசுவது வழக்கம். இது பின்னாளில் காதலாக உருவெடுத்தது. இதை அறிந்த இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்து இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டனர்.

கார்த்திகா-மெரின் மேத்யூ திருமணம் கொல்லம் அருகே உள்ள தேவனக்கரை செயிட் மேரீஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு நடிகர் சுரேஷ் கோபி குடும்பத்துடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

கார்த்திகா தற்போது நடித்து வரும் மற்றும் ஒப்பந்தமாகி உள்ள படங்களை முடித்துக் கொடுத்து விட்டு கணவருடன் அமெரிக்கவில் செட்டில் ஆகிவிட இருக்கிறார்.

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா?

கார் பரிசளித்தார் பிரியாமணியுடன் தருண் காதல்

“கண்களால் கைது செய்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுக மான பிரியாமணி தமிழ், தெலுங்கில் 24 படங்களில் நடித்து விட்டார்.
“பருத்திவீரன்” படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று தந்ததால் இந்தியா முழுவதும் பிரபலமானார். “மலைக்கோட்டை”, “தோட்டா” போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களின் ஹீரோக்கள் விஷால், ஜீவன் ஆகியோருடன் இணைத்து ஏற்கனவே கிசுகிசு வெளியானது.

பின்னர் பிருதிவிராஜை காதலிப்பதாகவும் செய்தி அடிபட்டது. இதை பிரியாமணி மறுத்தார்.

தற்போது தெலுங்கு நடிகர் தருணை பிரியாமணி தீவிரமாக காதலிப்பதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் “நவ வசந்தம்” என்ற படத்தில் நடித்த போதே நெருக்கமானதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை மறைத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்தார்களாம். இப்போது அது வெளியே கசிந்துள்ளது. காதல் பரிசாக பிரியாமணிக்கு, தருண் புதிய சொகுசு கார் வாங்கி கொடுத்துள்ளார். காதல் விவகாரம் தருண் தாயார் ரோஜாரமணிக்கு தெரிய வந்திருப்பதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்ததும் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.

ஏற்கனவே நடிகை ஆர்த்தி அகர்வாலை காதலித்து தருண் கை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

ஆஷஸ் தொடரில் சைமண்ட்ஸ் இல்லை

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்ட்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சைமண்ட்சிற்கும், ஷேன் வார்சனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ஷேன் வாட்சன் வெற்றி பெற்று அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சைமண்ட்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.

ஆல்ரவுண்டரான மெக்டொனால்டிற்கு பதிலாக சைமண்ட்ஸ் சேர்க்கபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாட்சன், மெக்டொனால்ட் என்று இருவரையுமே ஆஸ்ட்ரேலிய தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

இதனால் அடுத்த மாதம் 34 வயது நிரம்பவுள்ள சைமண்ட்சின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டது என்று ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

ஆஸ்ட்ரேலிய அணி: ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், பிராட் ஹேடின், ஸ்டூவர்ட் கிளார்க், நேதன் ஹாரிட்ஸ், பென் ஹில்ஃபென் ஹாஸ், பிலிப் ஹியூஸ், மைக்கேல் ஹஸ்ஸி, மிட்செல் ஜான்சன், சைமன் கேடிச், பிரட் லீ, மெக்டொனால்ட், கிராகம் மனூ, மார்கஸ் நார்த், பீட்டர் சிடில், ஷேன் வாட்சன்.

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தியது கோல்கத்தா

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கோல்கத்தா அணி முதல் பேட்டிங் செய்ய ராஜஸ்தானை கேட்டுக் கொண்டது.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது.

இரண்டாவதாக களமிறங்கிய கோல்கத்தா அணி 19.3 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இன்றைய தோல்வி மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் ராஜஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது.

ராஜஸ்தான் அணி வெற்றி பெறுவதை காண அதன் உரிமையாளரான நடிகை ஷில்பா ஷெட்டி ஆட்டம் துவக்கம் முதலே உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரது அணி தோல்வியுற்றதால் சோகமானார். இதன் மூலம் ஷாருக்கானின் கோல்கத்தா அணி ஷில்பா ஷெட்டியின் கனவையும் தகர்த்தது.

Disable ஆகிய Task Manager ஐ மீளப் பெறுவது எப்படி? Read more: http://tamilhackx.blogspot.com/2009/05/disable-task-manager.html#ixzz0G7Immrj9&B

விண்டோஸ் ஐ பயன்படுத்தும் எவரும் Task Manager ஐ பயன்படுத்தாமல் இருந்திருக்கவே முடியாது. விண்டோசில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஏதாவது ப்ரோக்ராம் இல் சிக்கல் ஏற்ப்பட்டால் நாம் முதலில் செய்வது alt +ctrl + Del ஐ அழுத்தி Task Manager இல் குறிப்பிட்ட ப்ரோக்ராமை End task பண்ணுவதுதான்.


ஆனால் சில நேரங்களில் நமது கணணியில் வைரஸ் தாக்கம் காரணமாக alt +ctrl + Del ஐ அழுத்தும் போது “Task Manager has been disabled by your administrator“ என்ற Message வருவதுண்டு இதனால் பல சிக்கலுக்கு முகம் கொடுத்திருப்போம். இச் சிக்கலை எவ்வாறு தீர்ப்பதென்று பார்ப்போம்

இங்கு 3 முறைகள் தரப்பட்டுள்ளன ஏதாவது ஒரு முறை மூலம் முயர்ச்சி செய்யவும்

முறை-1

* முதலில் Start சென்று அதில் Run ஐ Click செய்யவும்
* அதில் gpedit.msc என்று type செய்து Enter பண்ணவும்
* பின் User Configuration இன் கீழ் உள்ள Administrative Templates இன் முன் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
* பின் அதில் System என்பதன் முன் இருக்கும் + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
* அதன் கீழ் உள்ள Ctrl+Alt+Delete Options ஐ Click செய்யவும்.
* அதில் வலது பக்கத்தில் உள்ள Remove Task Manager ஐ Double Click பண்ணி அதில் Not Configured என்பதை தெரிவு செய்து Ok பண்ணவும் .


முறை- 2

ஒரு புதிய Notepad ஐ ஓபன் செய்து கீழ் உள்ள Registry Value வை copy செய்து அதில் Paste செய்து taskmanager.reg என்ற பெயரில் Save செய்த பின் அதை Double click செய்யவும்.

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000

முறை- 3கீழ் உள்ள சுட்டியில் இருந்து Task Manager Fix என்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இம் மென்பொருள் பற்றிய மேலதிக விடயத்திற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் இங்கே அழுத்தவும்.

Read more: ":::~TamilhackX~:::" - http://tamilhackx.blogspot.com/2009/05/disable-task-manager.html#ixzz0G7IVj8Ns&A

பதிவர்களுக்கு ரூ.30,000 பரிசு!

பத்திரிகைகளில் பதிவர்களின் சிறுகதைகளோ, கட்டுரைகளோ வெளிவந்தால் தமிழ்மணமே கொண்டாடுகிறது. சம்பந்தப்பட்ட பதிவரிடம் ‘பார்ட்டி’ கேட்கிறது. உண்மையில் அதற்குரிய சன்மானமாக பத்திரிகைகளிடம் இருந்து எவ்வளவு கிடைத்தது என்பதை சம்பந்தப்பட்ட பதிவர்கள் கவுரவம் கருதி வெளியே சொல்வதில்லை. போனவாரம் கூட ஒரு பிரபல பத்திரிகை எனக்கு ரூபாய் எழுபத்தி ஐந்து மணியார்டர் அனுப்பி வைத்தது. பத்திரிகைகளில் எழுதி சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருந்தால் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் வறுமையில் இன்றொரு முதியோர் இல்லத்தில் அனாதை போல வாடுவாரா?தினமலர் வாரமலர் எழுத்தாளர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான நல்ல சன்மானம் வழங்குகிறது என்று நினைக்கிறேன். விகடன் குழுமம் வாசகர்களுக்கு அவ்வப்போது பரிசாக வழங்கும் தொகை மிகப்பெரியது. அதெல்லாம் வேற பாலிட்டிக்ஸ், விடுங்க.

பத்திரிகையில் கூட எழுதவேண்டாம், உங்கள் வலைப்பூவில் சிறப்பாக ஒரு கதை எழுதினாலே ரூ.ஆயிரத்து ஐநூறு தர முன்வந்திருக்கிறார் அண்ணன் பைத்தியக்காரன். மொத்தம் இருபது சிறுகதைகளை தேர்ந்தெடுத்து ரூபாய் முப்பதாயிரம் (தன் சொந்தப்பணத்தை) வழங்க முன்வந்திருக்கிறார். இதற்காக அவருக்கும், அவரது சமூக கலை இலக்கிய அமைப்புக்கும் வாழ்த்துகள்!

தேர்ந்தெடுக்கப்படும் இருபது கதைகளை கிழக்குப் பதிப்பகத்தின் மூலமாக ஒரு நூலாக உருவாக்கித்தர பதிப்பாளர் பத்ரி முன்வந்திருக்கிறார். எனவே போட்டியில் கலந்துகொள்பவர்கள் அக்கதை தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நூலாக வெளிவருவதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். எனினும் அந்தந்த சிறுகதைகள் அந்தந்த படைப்பாளிக்கே சொந்தம்.

போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் விபரங்கள் :

1. உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி. ('போட்டி என்பது அதிகாரத்தின் உரையாடல் அல்லவா?' எனக் கேட்கும் வேதாளத்தின் கேள்விக்கு விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?)

2. முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, ஆறுதல் பரிசுகள் என்றெல்லாம் எதுவும் கிடையாது.

3. மொத்தம் 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும். கதை ஒன்றுக்கு ரூபாய் 1,500 வீதம், 20 சிறுகதைகளுக்கும் சரிசமமாக பரிசுத்தொகை அனுப்பப்படும்.

4. வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்தது 3 பதிவுகளை எழுதிய வலைப்பதிவாளர்களாக இருக்கவேண்டும்.

5. ஒருவர் ஒரு சிறுகதையை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒருவரே இரண்டு அல்லது மூன்று வலைத்தளங்களை வைத்திருந்தால், வலைத்தளத்துக்கு ஒன்று வீதம் கதைகளை அனுப்பலாம்.

6. சிறுகதையானது ஆயிரம் வார்த்தைகளை தாண்டக் கூடாது. இதற்கு முன் எழுதியதாகவோ, மீள் பிரசுரம் செய்ததாகவோ, அச்சில் வந்ததாகவோ, இன்னொருவரின் படைப்பை அடிப்படையாகக் கொண்டதாகவோ இருக்கக் கூடாது.

7. போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் வேறு இதழ்களுக்கு, போட்டிக்காக அனுப்பிய சிறுகதையை அனுப்பக் கூடாது.

8. இந்திய நேரப்படி, 16.05.2009 அதிகாலை 1 மணி முதல், ஜூன் 30ம் தேதி இரவு 12 மணி வரை எழுதப்பட்ட சிறுகதைகளாக இருக்க வேண்டும். எழுதிய கதைகளை தங்கள் வலைத்தளத்தில் அவர்கள் பிரசுரிக்க வேண்டும். அப்படி வலைத்தளத்தில் ஏற்றும்போது, இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது என்பதை குறிப்பிட்டு, இந்தப் பதிவின் லிங்கைத் தர வேண்டும்.

8. சிறுகதை பிரசுரமான தளத்தின் லிங்கை எங்களுக்கு மெயிலில் தெரியப்படுத்தினால் போதும். அப்படி அனுப்பும்போது உங்களது முகவரியையும், தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எந்தப் பெயருக்குக் காசோலை அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு, நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக ஒரு உறுதிமொழியையும் மெயிலில் அனுப்பவேண்டும்.

9. மெயில் முகவரி: sivaraman71@gmail.com

10. வெளிநாட்டு பதிவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால், தவிர்க்க இயலாத காரணத்தினால், காசோலை இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். எனவே இந்தியாவில் வங்கிக் கணக்கை வைத்திருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் விலாசத்தை தருவது நல்லது.

11. நகைச்சுவை, க்ரைம், காதல், மாஜிக்கல் ரியலிஸம், அறிவியல் புனைவு இத்யாதி, இத்யாதி ... என எந்த வகையிலும் சிறுகதைகளை எழுதலாம். பரிசோதனைகள் செய்யலாம். யதார்த்தமாகவும் எழுதலாம். அ - யதார்த்தமாகவும் வார்த்தைகளைச் சுழற்றலாம்.

12. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. நடுவர்கள் யார் என்பது இன்னும் 15 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.

13. இந்த அறிவிப்பை உலகெங்கும் அறிவிக்கப் போகும் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்மானம், தமிழிஷ், திரட்டி, மாற்று மற்றும் முகம் தெரியா அனைத்து பதிவுலக திரட்டிகளுக்கும் நன்றி.

14. இது குறித்த ஆலோசனைகளும், விமர்சனங்களும் பின்னூட்டத்தில் வரவேற்க்கப்படுகின்றன.

15. போட்டியின் முடிவு ஜூலை 15ம் தேதி அறிவிக்கப்படும்.

தோழமையுடன்
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக,
பைத்தியக்காரன் : 9840907375

பயமற்ற சூரியக் குளியல்…

மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வரும் பலரும் கடற்கரையோரங்களில் குறைந்த பட்ச ஆடைகளோடு சூரிய ஒளிக் குளியலில் லயித்திருப்பது சகஜம்.

நமது நாட்டிலும் சூரியக் குளியல் மற்றும் சூரிய ஒளியில் ஓய்வு எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்கூடு.
10

இந்த சூரியக் குளியலில் பல்வேறு நன்மைகள் உண்டு. மிக முக்கியமான நன்மை வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி. அதேபோல இந்த சூரியக் குளியலில் பல்வேறு தீமைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானது “சன் பர்ன்” எனப்படும் வெப்பத்தினால் உடலில் தோல் சிவந்து போய் கொப்புளங்களோ, புண்களோ வருவது.

சிலருக்கு மிகவும் மிருதுவான தோல், விரைவில் சிவந்து போய்விடும். சிலருடைய தோல் வெப்பத்தை அதிகம் கிரகித்துக் கொள்ளும். இது தான் சூரியக் குளியல் நடத்துவோரின் மிகப்பெரிய சிக்கல்.

எவ்வளவு நேரம் வெயிலில் இருக்கலாம், எப்போது நிழலில் போகவேண்டும் ? போதுமான அளவு வெயிலில் இருந்து விட்டேனா என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே என கலங்கியிருந்த சூரியக் குளியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது இந்த புதிய கண்டுபிடிப்பு.

சின்ன ஒரு பிரேஸ்லெட் போன்ற இந்த மெல்லிய ஸ்டிரிப் ஒன்றை நமது கைகளில் கட்டிக் கொண்டால் நமது உடல் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு அதிகமான வெயில் தாக்கும் போது இந்த ஸ்ட்ராப் “பிங்க்” நிறமாக மாறிவிடுகிறதாம்.

வெயிலிலுள்ள புற ஊதாக்கதிர்களின் அளவைக் கிரகித்தும், நமது தோலின் தன்மையை அறிந்தும் இந்த கருவி செயல்படுகிறதாம்.

சூரிய வெப்பம் தாக்கிவிடுமோ எனும் பயத்தில் தேவையற்ற கிரீம்களை உடலில் பூசிக்கொள்வதோ, தேவையான அளவு வெயிலை ரசிக்க முடியாமல் போவதோ இதன் மூலம் முழுமையாக தவிர்க்கப்படும் என்பது சிறப்புச் செய்தியாகும்.

புற உதாக் கதிர்களின் தாக்கம் பல வகை தோல் புற்றுநோய்களுக்குக் கூட காரணமாகி விடுகிறது, இந்த எளிய ஸ்ட்ராப், நம்மை எச்சரிக்கை செய்வதன் மூலம் புற ஊதாக்கதிர்கள் அதிகமாய் தாக்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

மிகவும் மலிவாக, ஒரு சில ரூபாய்கள் எனும் விலையில் இந்தப் பொருள் விற்பனைக்கு வர இருக்கிறது.

கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் இந்த கண்டு பிடிப்புக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

விஷால்-ஸ்ரேயா 'லிப்-லாக்'!

தோரணை படத்தில் உங்களுக்கும் ஸ்ரேயாவுக்கும் கிளுகிளு முத்தக் காட்சிகள் எக்கச் சக்கமாய் இருக்கிறதாமே...'

இந்தக் கேள்வியை தோரணை பிரஸ் மீட்டில் கேட்டபோது, விஷால் சிரித்து மழுப்பியதன் அர்த்தம் அதற்கடுத்த வாரம்தான் தெரிந்தது.

'செம ஹாட் மச்சி' என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஹாட் லிப் டு லிப் காட்சி ஒன்றை இந்தப் படத்தில் வைத்துள்ளார் இயக்குநர் சபா ஐய்யப்பன். அந்த சமாச்சாரத்தை பிரஸ் மீட்டில் ரகசியமாக வைத்த விஷால், அடுத்த வாரமே ஸ்டில்கள் மூலம் உலகுக்கு அம்பலப்படுத்திவிட்டார்.அதுவும் ஸ்ரேயாவோடு அவர் உதடு பதிக்கும் காட்சியை படங்களாக பத்திரிகைகளுக்குத் தந்துள்ளார்.

இந்தக் காட்சிகளுக்கும், கொடுத்த ஆடைகளுக்கும் முகம் சுளிக்காமல் ஒப்புக் கொண்டதற்காகத்தான் ஸ்ரேயாவுக்கு தன் அடுத்த பட வாய்ப்பையும் கொடுத்துள்ளாராம் விஷால்.

கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க

வீடுகளில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று இருப்பது வழக்கமாகி விட்ட நிலையில் ஒரு கம்ப்யூட்டரை பலர் இயக்குவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது.இதில் ஒருவருக்கு கம்ப்யூட்டர் அத்தியாவசிய தேவையாக இருக்கும்.அவரே அதில் உள்ள செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை அமைத்து இயக்கி வருவார்.மற்றவர்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள்.இதில் பிரச்சனை என்னவென்றால் மற்றவர்கள் அவ்வாறு பயன்படுத்துகையில் தாங்கள் விரும்பும் சில மாற்றங்களை கம்ப்யூட்டரில் ஏற்படுத்தி விடுவார்கள்.இது கம்ப்யூட்டரிலேயே தங்களின் பல வேலைகளை மேற்கொள்வோருக்கு எரிச்சல் தரும் நிலையை தோற்றுவிக்கும்.

எடுத்துக் காட்டாக வேர்டில் ரூலர்,நார்மல் டெம்ப்ளேட்,எக்ஸெல் தொகுப்பில் தேதி அமைப்பு,பக்க அமைப்பு,பிரவுசர் செட்டிங்ஸ் ,இமெயில் செட்டிங்ஸ் ஆகியவை குறிப்பிட்ட அமைப்பில் வைத்து பழகியவர்களுக்கு திடீரென மாற்றங்கள் இருந்தால் அவற்றில் வேலை பார்ப்பது சிரமமாகி விடும்.எனவே மற்றவர்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸை மாற்றுவதைத் தடை செய்திட வேண்டும் என எண்ணுவார்கள்.

குழந்தைகள் கம்ப்யூட்டரைப் பகிர்ந்து பயன்படுத்துகையில் இது போன்று சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படும்.தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வைப்பதும்,இண்டர்நெட்டில் செட்டிங்ஸை மாற்றி பயன்படுத்துவதும் குழந்தைகள் அடிக்கடி செய்யும் தவறுகளாகும்.

இது போன்ற பிரச்னைகளில் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாக்கவும் அதன் மூலம் உங்களின் நலனைப் பாதுகாக்கவும் விண்டோஸ் Steadystate என்று ஒரு புரோகிராமினை இலவசமாகத் தருகிறது.இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டால் உங்களைத் தவிர யாரும் செட்டிங்ஸ் மாற்ற முடியாது.இதை எப்படி அமைப்பது என பார்க்கலாம்.

1.இந்த புரோகிராமின் பெயர் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட்(Windows Steady State) .இது கிடைக்கும் தள முகவரி :www.microsoft.com/windows/products/winfamily/sharedaccess இந்த தளம் சென்று புரோகிராமினை இறக்குவதற்குள் உங்கள் கம்ப்யூட்டரைத் தயார் செய்ய வேண்டும்.அனைத்து டிஸ்க்குகளையும் முதலில் டிபிராக் செய்திடுங்கள்.இதற்கு Start->>All programs->>Accessories->>System Tools->>Disk Defrag menter எனச் செல்லவும்.அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளையும் தேர்ந்தெடுத்து பின் டிபிராக்மெண்ட் பட்டனை அழுத்தவும்.இதற்கு சிறிது நேரம் ஆனாலும் பொறுமையாக இந்த வேலையை மேற்கொள்ளவும்.முடிந்தவுடன் மைக்ரோசாப்ட் அப்டேட் தளம் சென்று அண்மைக் காலத்தில் மைக்ரோசாப்ட் வழங்கிய அப்டேட் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிட்டதா என்பதைச் சோதித்துப் பதியப்படாமல் இருந்தால் பதியவும்.பின் நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் தொகுப்பிற்கான தளம் சென்று அதனையும் அப்டேட் செய்திடவும்.அத்துடன் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.இதனை Control Panel->>User Accounts சென்று ஆப்ஷனில் உறுதி செய்யலாம்.

2.இனி விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியது தான்.மேலே குறிப்பிட்ட மைக்ரோசாப்ட் தளம் சென்று அத்தளத்தில் உள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும்.முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி காசு கொடுத்து வாங்கிய ஒரிஜினல் பதிப்பா என்ற சோதனை மேற்கொள்ளப்படும்.இந்த வேலிடேஷன் சோதனை முடிந்தவுடன் டவுண்லோட் பட்டனை அழுத்தி புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும்.இதை டெஸ்க்டாப்பில் சேவ் செய்திடவும்.பின் இது டெஸ்க்டாப்பில் இருக்கும் இடம் அறிந்து SteadyState_Setup_ENU.exe என்ற பைலை டபுள் கிளிக் செய்திடவும்.டயலாக் பாக்ஸ்களுக்கு எஸ் கொடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்தியவாறு தொடர்ந்தால் புரோகிராம் பதியப்பட்டு விடும்.

3.அடுத்து இந்த புரோகிராமினை இயக்கவும்.ஸ்டார்ட்-ஆல் புரோகிராம்ஸ் சென்று இயக்கலாம்.அல்லது டெஸ்க்டாப்பில் இதன் ஐகானில் மீது கிளிக் செய்து இயக்கலாம்.இந்த புரோகிராம் இயங்கத் தொடங்குகையில் உடனே ஹெல்ப் மெனு திறக்கப்படும்.இதனை மூடவும்.திரையின் வலது பக்கத்தில் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற யூசர் அக்கவுண்ட்ஸ் அனைத்தும் காட்டப்படும்.அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் காட்டப்பட மாட்டாது .உங்களுக்குத் தேவையான பிற யூசர் அக்கவுண்ட்கள் இல்லை என்றால் புதிய யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கலாம்.இதற்கு "Add a New User" என்ற லிங்க்கில் கிளிக் செய்து பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓகே கிளிக் செய்தால் யூசர் அக்கவுண்ட் தொடங்கப்படும்.

4.இதில் உள்ள ஜெனரல் டேப்பினைப் பயன்படுத்தி யூசர் ஒருவர் தன அக்கவுண்டிற்கு நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம்.இதில் ஒரு யூசர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதையும் செட் செய்திட முடியும்.

5.அடுத்து Windows Restrictions என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும்.இதன் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து அமைக்கலாம்.இதில் High,Medium,Low மற்றும் No Restrictions என நான்கு வகையான தடுப்பு நிலைகள் உள்ளன.நீங்கள் அமைக்க விரும்பும் வகையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.இங்கு காணப்படும் பட்டியலில் விண்டோஸ் வசதிகள் அனைத்தும் காணப்படும்.ஒரு குறிப்பிட்ட யூசரைக் கண்ட்ரோல் பேனல் பக்கம் செல்ல முடியாதபடி கூட அமைக்கலாம்.

6.இந்த பட்டியலில் இன்னும் கீழாக ஸ்குரோல் செய்து போனால் இன்னும் பல வகையான தடுப்பு ஆப்ஷன்களைக் காணலாம்.ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அணுக முடியாமல் தடுத்தல்,சிடிக்கள் தானாக இயங்கும் ஆட்டோ பிளேயைத் தடுத்தல்,சிடி மற்றும் டிவிடிக்களை உருவாக்குவதைத் தடுத்தல் போன்ற பல வழிகள் காட்டப்படும்.இறுதியில் அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் மற்றும் இணைத்து எடுக்கக் கூடிய டிஸ்க்குகளும் பட்டியலிடப்படும்.இதன் எதிரே உள்ள பாக்ஸ்களில் டிக் செய்தால் அந்த ஹார்ட் டிஸ்க் மறைக்கப்பட்டுவிடும்.

7.அடுத்ததாக Feature Restrictions டேப் செல்லலாம்.இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகளில் குறிப்பிட்ட அளவில் தடை ஏற்படுத்தலாம்.இன்டர்நெட் பயன்பாட்டினையே தடை செய்யலாம்.அல்லது குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும் செல்லும் வகையில் செட்டிங்ஸை அமைக்கலாம்.

8.எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினைப் பொறுத்த வரை விசுவல் பேசிக் புரோகிராமினை செயல் இழக்கச் செய்து விட்டால் இதில் வைரஸ் பாதிக்கும் வழிகளை அடைத்து விடலாம்.அதே போல Addin மெனுவைத் தடுத்து விட்டால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே இருக்கின்ற ஆட்-இன் வசதிகளை நீக்க முடியாது.புதிதாக எதனையும் சேர்க்கவும் முடியாது.

9.அடுத்து Blocked Programs என்ற டேப் செல்லலாம்.இதில் கிளிக் செய்தால் இடது பக்கம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும்.தடை செய்யப்பட வேண்டிய புரோகிராம்களுக்கு எதிரே டிக் செய்தால் அவை வலது புறம் மாறிவிடும்.அனைத்து புரோகிராம்களையும் தடை செய்திட வேண்டும் என்றால் Block All என்பதில் கிளிக் செய்திடலாம்.இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் பிரவுஸ் செய்து அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து தடுத்து விடலாம்.

10.பிற யூசர்களுக்கு உண்டான தடையை செட் செய்து விட்டால் இந்த அமைப்பை சேவ் செய்து கொள்ளலாம்.பின் ஒரு நாளில் விண்டோஸ் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இந்தத் தடைகளுக்கான செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வேலையை மேற்கொள்ளாமல் அப்படியே மீண்டும் ஒரே கிளிக்கில் அமைத்துவிடலாம்.இதற்கு இந்த திரையில் கீழ் வலது மூலையில் உள்ள Export User என்ற லிங்க்கில் கிளிக் செய்து இந்த பேக் அப் எங்கு இருக்க வேண்டுமோ அந்த போல்டர் செல்ல வேண்டும்.பின் யூசர் நேம் மெனுவில் எந்த யூஸருக்கான தடைகளோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.அதன்பின் Save கிளிக் செய்து வெளியேற வேண்டும்.இப்படியே ஒவ்வொரு யூசருக்கும் தடைகளை செட் செய்து சேவ் செய்திடலாம்.

11.தனிப்பட்ட யூசர் அக்கவுண்ட்டில் தடை விதிப்பது மட்டுமின்றி சிலவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாதபடியும் தடை செய்திடலாம்.இதற்கு மெயின் செக்ஷனில் உள்ள "Global Computer Settings"பயன்படுத்த வேண்டும்.அதில் Set Computer Restrictions என்ற லிங்க்கை கிளிக் செய்திட வேண்டும்.விண்டோஸ் தொடங்குகையில் யூசர் அக்கவுண்ட்ஸ் திரை தோன்றுவதையும் மறக்கலாம்.இதற்கு 'Turn on the Welcome Screen' என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடலாம்.

12.பெரும்பாலான தடைகள் எல்லாமே நேரடியாக புரோகிராம்கள் மற்றும் சில வசதிகளைப் பயன்படுத்துவதை தடை செய்திடும் வகையில் அமைக்கப்படுகின்றன.ஒரு சில குறுக்கே புகுந்து தடுக்கும் வகையிலும் அமைகின்றன.எம்.எஸ்.ஆபீஸ் டாகுமெண்ட்கள் சிலவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியாத படி தடை அமைதிருப்போம்.ஆனால் இவற்றை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் திறக்க முயற்சிக்கையில் தடைகள் ஒதுக்கப்பட்டு டாகுமெண்ட்கள் திறக்கப்படும்.எனவே இந்த வகை முயற்சிகளுக்கும் தடை விதிக்க ஸ்டெடி ஸ்டேட் இடம் தருகிறது.இதற்கென 'Prevent users from opening Microsoft Office Documents from within Internet Explorer' என்று ஒரு ஆப்ஷன் உள்ளது.இதனை இயக்கி செட் செய்தால் நாம் மறைத்திடும் டாகுமெண்ட்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திடும்.

13.அப்டேட் பைல்கள் விண்டோஸ் சிஸ்டம் இயங்க மிக மிக முக்கியமானவையாகும்.இவற்றை அவ்வப்போது தானாக சிஸ்டம் அப்டேட் செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும்.இந்த வசதியினையும் ஸ்டெடி ஸ்டேட் தருகிறது.இதனுடைய மெயின் பேஜில் Schedule Software Update என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.பின் அதில் 'Use Windows Steadystate to automatically download and instal updates' என்று இருப்பதில் கிளிக் செய்து இயக்கவும்.அங்கேயே இருக்கும் மெனுவில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை விண்டோஸ் இந்த அப்டேட் பைல்களை செக் செய்து அப்டேட் செய்திட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம்.இதே போல அப்டேட் தேவைப்படும் மற்ற செக்யுரிட்டி புரோகிராம்களுக்கும்,ஆண்டி வைரஸ் போல,இதே போல் நாட்களை செட் செய்திடலாம்.

14.விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமில் மிக மிக முக்கியமானது டிஸ்க் பாதுகாப்புதான்.மெயின் ஸ்க்ரீனில் உள்ள 'Protect the Hard Disk' என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.ஆனால் இதனைக் கவனமாகக் கையாள வேண்டும்.முழுமையாக ஒரு டிஸ்க்கை பாதுகாக்க அமைத்துவிட்டால் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் எதுவும் சேவ் செய்திட முடியாது.எனவே அதற்கான வழிகளை நன்கு யோசித்த பின்னரே இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.

நம் கம்ப்யூட்டரை மற்றவர்களிடமிருந்து காப்பாற்ற மைக்ரோசாப்ட் தரும் அருமையான புரோகிராம் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் .இலவசமாக கிடைக்கும் இந்த புரோகிராமினை நம் பாதுகாப்பிற்கு பயன்படுத்துவது நல்லது.மேலே சொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி இன்னும் பல பாதுகாப்பு வழிகளையும் இந்த புரோகிராம் தருகிறது.

Monday, May 18, 2009

வைரமுத்து மைக் பிடிச்சாரு...

கிரிக்கெட்டுல வேணும்னா ‘ஆட்ட நாயகன்’ வெவ்வேற வீரர்களா இருக்கலாம். ஆனா..கவிப்பேரரசு கலந்துக்கற எந்த கூட்டமானாலும் ‘கூட்ட நாயகன்’ அவரா மட்டும்தான் இருப்பாரு!

‘கொக்கோ கோலா நிறம்..கொட்ற கவிதைகளோ
உலகத்தரம்..இவர் தமிழுக்கு கிடைச்ச தனி வரம்’னு ‘டமுக்கு டப்பா’ கவிதை
பாடி..டமுக்கு அடிச்சு வைரமுத்துவை அறிமுகம் பண்ணவேண்டிய
அவசியம்லாம் இல்லை.பொத்தாம்பொதுவான விழாவானாலும்..எத்தாம்பெரிய கூட்டம்னாலும் தன்னோட சுட்டுவிரலை சுட்டுப்புடற மாதிரி நீட்டி வைரமுத்து தன் ‘மேக்னட்டு’ குரல்ல பேசற அழகுக்கு ‘நகைநட்டு’ அத்தனையும் அள்ளிக்
குடுக்கலாம்!

‘நல்லது நண்பர்களே..வைரமுத்து பற்றி உங்களுக்கு முக்கியமாக இரண்டு செய்திகள் சொல்ல ஆசைப்படுகிறேன்’னு கவிஞரோட
பாஷையிலேயே ஆரம்பிக்கறேன்.

அண்ணா அறிவாலயம் உள்ளே..கலைஞர் அரங்கத்துல ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர்கள்னு பெரும்படையே மேடையிலிருக்கு. ஆளாளுக்கு பேசி கைதட்டலை அள்ள..அத்தனை ‘தட்டலையும்‘ சேர்த்து மொத்தமா ‘தட்டிகிட்டு’
போக.. வைரமுத்து மைக் பிடிச்சாரு...‘ஒரு வேந்தன் மாதிரி பாத்துகிட்டு காந்தக் குரல்’ல ‘‘நண்பர்களே! நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.. தலைவர் கலைஞருக்கு
நான்கு மகன்கள் என்று! ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா..முத்தமிழறிஞர் கலைஞருக்கு மொத்தம் ஐந்து மகன்கள்!’’ என்று சொல்லி நிறுத்த..கூட்டமே திடுக்கிட்டு பாக்க..கலைஞரும் திகைச்சு பாக்க..அரங்கமே கிறங்கி நிக்குது!

‘பிடிபட்டதடா பாஞ்சாலங்குறிச்சி’ங்கற பூரிப்போட
தொடர்ந்து பாஞ்சாரு பாருங்க கவிஞர்..‘‘ஆம் நண்பர்களே! கலைஞருக்கு
மொத்தம் ஐந்து மகன்கள். மூத்தவர்..மு.க.முத்து. அடுத்தவர்..மு.க.அழகிரி.
மூன்றாமவர்..மு.க.ஸ்டாலின். நாலாவது..நம்ம மு.க.தமிழரசு. ஆனால்
இவர்களுக்கெல்லாம் மூத்த அந்த முதல்மகன் யார் தெரியுமா?’’னு மறுபடியும்
கொக்கியை போட..சஸ்பென்ஸ்ல சிக்கித்தவிக்குது கூட்டம்!

இன்னும் பின்றாரு கவிஞர்..‘‘பதினான்காம் வயதிலேர்ந்து கலைஞர் தன்னுடைய தோளில் தூக்கி, மார்பில் தாங்கி வளர்த்த ‘முரசொலி’ பத்திரிகைதான் அவருடைய மூத்தமகன்!’’னு சொல்லி முடிக்க..உணர்ச்சிவசப்பட்ட கலைஞர் கண்ணீர் வடிக்க..அரங்கமே நொறுங்கறமாதிரி கைதட்டல் வெடிக்க..
அப்போ வைரமுத்து பாத்த பார்வை இருக்கே..‘அங்கே பாரதி தெரிந்தான்!’

ரெண்டாவது சங்கதியும் கலைஞர் சம்பந்தப்பட்டதுதான். 2006 மே 11ம் தேதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட். அன்னிக்கு பொழுது விடிஞ்சதுமே கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு போயிட்டேன். தி.மு.க. கூட்டணி வெற்றியால் கோபாலபுரமே ‘கோலாகல‘புரமானது.

அப்போ நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர். வெற்றி பெற்ற அந்த முதல் நிமிஷங்கள்ல கலைஞரோட ரியாக்ஷனையும்.சிச்சுவேஷனையும் நேர்ல பாத்தேன். அதைவெச்சு ‘முதல்வரின் முதல் நிமிடங்கள்’னு ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி பண்ணேன். அந்த நிமிஷங்களை ‘கலைஞர் கூடவே இருந்த கவிப்பேரரசு
விவரிச்சா நல்லா இருக்குமே‘ன்னு வைரமுத்துகிட்டே பேசினேன்.

‘‘நேர அவகாசம் இல்லையே உதயசூரியன்!’’ன்னாரு. விடுவமா? ‘‘இதிகாசம் படைச்சவருக்கு அவகாசம் அவசியமா?’’ன்னேன். நம்ம ‘சகவாசம்‘ தெரிஞ்சு ரசிச்சு சிரிச்சவர்..ஃபோன்லயே அடுக்கடுக்கா விவரிச்சாரு. நானும் அந்த ஸ்பாட்ல இருந்ததால ஜோரா கட்டுரை எழுதி முடிச்சுட்டேன். வைரமுத்துக்கு
ஃபோன்ல படிச்சுக்காட்டறேன்..

‘‘முத்தமிழும் ஆசி கூற..நான்கு திசைகளும் பூத்தூவ..ஐந்தாம் முறையாக முதல்வர் பதவி ஏற்றிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்’’னு நான் எழுதின ஓப்பனிங்கை கேட்டதுமே..‘‘உதயசூரியன்..இது நீங்க சொல்வதா? நான்
சொல்வதா?’’ன்னாரு. ‘‘கட்டுரையோட ஆரம்ப வரிகள் சார்’’னேன். ‘‘அப்போ..இதை என் வரிகளாக வாசகர்கள் கருதிவிடக்கூடாது. உங்களுக்கான பாராட்டு
உங்களைத்தான் சேரவேன்டும்’’னு கம்பீரமா சொன்னாரு.

மூணாவது பாராவிலேர்ந்து கவிஞரோட விவரிப்பு
ஆரம்பமாகுது. அந்த பாராவை படிச்சதுமே ‘‘சரியான இடம். நில்லுங்கள். இந்த
பாராவின் தொடக்கத்தில் ‘இதை வைரமுத்துவே தன் வாய்மொழியால் விவரிக்
கிறார்’ என்று போடுங்கள்’’னாரு! சூப்பர்!

கட்டுரை ‘குங்குமத்தில்’ வெளியான நாள்..அதிகாலையிலேயே என் செல் குதித்தது! எடுத்தால்..கவிஞரின் உதவியாளர் பாஸ்கர் ‘‘சார் உங்ககிட்ட பேசறாங்க’’னாரு. பேசினார் வைரமுத்து...‘‘அருமை உதயசூரியன்! என் சொல்பேச்சை செல்பேச்சாக கேட்டு..நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை மிகப்பிரமாதம். தலைவர் கலைஞரிடம் இப்போதுதான் பேசினேன். உங்களைப்பற்றி சொன்னேன். மிகவும் பாராட்டினார். விகடன் தயாரிப்பல்லவா நீங்கள்! விரைவாக நிறைவாக செய்திருக்கிறீர்கள்!’’னு அந்த ‘கவிஞர் சிகரம்’ இந்த கூழாங்கல்லை குனிஞ்சு
பாராட்டினதுல மனசே கனிஞ்சுபோச்சு!

‘கிறுக்குச் சித்தர்’ கமல்ஹாசன்!

‘சிங்கத்தை அதோட குகையில சந்திக்கணுமா? இல்ல..கமல்ஹாசனை நேருக்கு நேரா பேட்டி எடுக்கணுமா?‘. ‘பேசாம‘ சிங்கத்தையே சந்திச்சிரலாம். ஏன்னா அதுக்கு தமிழ் தெரியாதே!
மத்த நடிகர்கள்மாதிரி மிக்ஸர் தின்னுகிட்டே வெட்டி லெக்சர் அடிக்கிற பிஸினஸ்லாம் கிடையாது. வேதாளம் மாதிரி கேள்விகள் கேக்கணும்..அப்போதான் பாதாளம்வரை பாய்ஞ்சு பதில் சொல்ற கலைஞானியோட மேதாவித்தனத்தை உணரமுடியும்!
அப்படியான அற்புத அனுபவம் ரெண்டுமுறை வாய்ச்சது எனக்கு. முதலாவது..நான் ‘ஆனந்த விகடன்’ நிருபராக இருந்தபோது. ரெண்டாவது..‘தமிழ் சிஃபி.காம்’ இணைய இதழில் எடிட்டராக இருந்தபோது! (‘உலகத் தமிழ் இணைய இதழ்களிலேயே முதல்முறையாக உலகநாயகன் சிறப்பு நேரடிப்பேட்டி தந்தது‘ நமக்குத்தான்!)


‘ஆழ்வார்பேட்டை ஆண்டவன்’ ஆபீஸ். மாடியறைக்கு சுழல் படிக்கட்டுல ஏறிப்போறப்பவே சுத்துது தலை. உள்ளே..கமல்ஹாசனின் அறை. காத்திருந்தேன். கதவு திறந்தது. ‘‘வாங்க’’னு வரவேற்றுகிட்டே உள்ளே வந்தார் கலைஞானி! பார்க்கிற நம்மை ‘ஏதோ ஒரு அவதார புருஷன்’போல ஆக்கிரமிக்கிற கம்பீர அழகு.
வெளிச்சமடிக்கிற கமலின் பார்வையில்..‘கிழிச்சு தொங்கவிடும்’ லேசர் கூர்மை! ‘சொல்லுங்க’ன்னாரு. ஆரம்பிச்சேன்...‘‘முன்னெல்லாம் ‘சுருக்’குன்னு குத்துறமாதிரி கவிதை எழுதுவீங்க. ‘காலையில் எழுந்தால் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’னு ஒரு கேள்விக்கு..‘காட்டில் கிடந்தால் நரி முகத்தில்! கட்டிலில் கிடந்தால் ஸ்த்ரீ முகத்தில்!’’னு பொட்டுல அறைஞ்சமாதிரி அபாரமா பதில் சொன்னீங்க. இப்பவும் எழுதறீங்களா?’’ன்னேன்.
லேசான சிரிப்போடு கமல் ‘‘இப்பவும் எழுதிகிட்டுதான் இருக்கேன். இதுவரைக்கும் எழுதினதை தொகுத்தும் வெச்சிருக்கேன். சுஜாதா முன்னுரையோட ரெடியா வெச்சிருக்கேன். என்னுடைய இந்த மறுபக்கம் நிறைய பேருக்கு தெரியாது!’’ன்னாரு.

அடுத்ததா ‘‘கமலுக்குள்ள இருக்கிற கவிஞனை சினிமாவின் பரபரப்பு சிதைத்துவிடாதா?’’ன்னு கேட்டேன். நாசியையும் மீசையையும் ஒருசேர வருடிகிட்டே கமல் ‘‘எனக்கு கவிதை எழுதற அளவுக்கு ஓய்வுப்பொழுதை தந்திருப்பதே சினிமாதான். இந்த சினிமாவே இல்லைன்னா ஏதாவது ஆபீஸ் போய்கிட்டு,சாப்பிட்டுகிட்டு சும்மா இருந்திருப்பேன்.எனக்கு குதிரைசவாரி தெரியும். ஜாக்கியா கூட ஆகியிருக்கலாம். ஆனா எனக்கு சினிமா மேலதான் ஆர்வம்!’’னு அழகா சொன்னாரு.
அப்போது கமலின் செல் சிணுங்கியது. எடுத்தவர் ‘தசாவதாரம்‘ ஃபிளெட்சர் மாதிரி ‘அமெரிக்க இங்கிலீஷ்‘ல பேசினாரு. அசந்து பாத்த என்கிட்ட ‘‘ஒரு ஃபாரினர் பேசினாரு. அவங்க பாஷைல பேசினா அவருக்கு சந்தோஷம். பெருசா படிக்கலை. எட்டாங்கிளாஸ்தான். ஆனா நிறைய கத்துகிட்டேன்’’னு சிரிச்சார்.

‘சினிமாவுக்காக உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திக்கறீங்களே! கஷ்டமா இல்லையா?’’ன்னேன். கும்முன்னு விம்மி புடைக்கற புஜங்களை கமல் தட்டிகிட்டே ‘‘ஒண்ணுமே பண்ணாம கையை காலை முறிச்சுக்கிறாங்க. அதைவிட தெரிஞ்சே முறிச்சிக்கறதுல சந்தோஷம்தான். உதாரணமா பத்ரிநாத் போற பெரியவங்களுக்கு மூட்டுவலி,தசைப்பிடிப்பு,சுளுக்கு எல்லாம்தான் வருது. அதை அவங்க வலியா நினைக்கறதில்ல. அந்த வலியை சுகமாத்தானே ஏத்துக்கறாங்க. அதேதான் எனக்கும்!’’னு எளிமையா சொன்னார்.
முக்கியமான கேள்விக்கு வந்தேன்.. ‘‘குணா படம் டி.வி.யில போட்டப்போ செம வரவேற்பு. ஆனா ரிலீஸானப்போ ஒடலை. அதேமாதிரி ‘ஹே ராம்..அன்பே சிவம்! ரசிகர்களை மலையேத்தி காட்டணும்னு ஆசைப்படறீங்க. ஆனா ‘தெனாலி’ காமெடி மூலம் தரைக்கே திரும்பி வந்துடறீங்களே! இது உங்களுக்கே முரண்பாடா இல்லையா?’’ன்னேன்.
ஆழமா ஒரு பார்வை பார்த்த கமல் ‘‘என்ன செய்ய? என்னோட மலையேறுபவர்கள் மைனாரிட்டிதான். மத்தவங்க மலையேறிவந்து ‘ஹே ராம்’ மாதிரி படங்களை பாக்கறதே இல்லை. கீழேயே தங்கிடறாங்க. எப்படியோ ‘அன்பே சிவம்’ பேர்ல மலையேறினவன்..‘தெனாலியா’ தரைக்கு திரும்பி வருவான். அப்போ பாத்துக்கலாம்னு இருந்துர்ராங்க. என்னை ஒரு ‘கிறுக்குச் சித்தர்’ மாதிரி பண்ணிட்டாங்க! இது எனக்கும் வசதியா போச்சு!’’னு சொல்லி வாய்விட்டு சிரிச்சார் கமல்.

இப்படி அணில் மரமேறுனமாதிரி பல விஷயங்களை ஆழமா பேசி அலசிட்டு கிளம்பறப்போ கேட்டேன்..‘‘கமல்..ஸ்ரீதேவி, கமல்..ஜோதிகா, கமல்..அசின். வருஷங்கள் ஓடினாலும் கமல்கிட்ட மட்டும் அதே இளமை..அதே துடிப்பு. உங்களோட காயகல்பம்தான் என்ன?’’ன்னேன்.
ரசிச்சு சிரிச்ச கமல் ‘‘காயகல்பமெல்லாம் எதுவும் கிடையாது! நல்ல ஆரோக்கியம்தான் காரணம். இன்னும் பத்துவருஷம் கழிச்சு இந்த கேள்வியை கேக்கமாட்டீங்க!’’ன்னு சொல்லிட்டு..தட்டுல இருந்த கடலை உருண்டைகளை எனக்கும் குடுத்து..தானும்

தமிழ் சினிமாவின் மவுன புரட்சி!

வர்ணம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. பாடல்களை, டைரக்டர் பாலுமகேந்திரா வெளியிட, டைரக்டர் அமீர் பெற்றுக்கொண்டார்.

விழாவில், டைரக்டர் அமீர் பேசும் போது,


``சமீபகாலமாக நான் விழாக்களில் அதிகமாக கலந்துகொள்வது பற்றி சில நண்பர்கள் என்னிடம் கருத்து தெரிவித்தார்கள். ``மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய டைரக்டர்கள் விழாக்களில் கலந்துகொள்வதில்லை. அதுமாதிரி நீங்களும் இருங்கள் என்றார்கள்.

நான், அமீராகவே இருக்கணும். மணிரத்னம், ஷங்கர் மாதிரி வர எனக்கு ஆசை இல்லை.

எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இருவருக்கும் முன்னோடிகள் தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும். ரஜினிகாந்த்-கமலஹாசன் ஆகிய இருவருக்கும் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னோடியாக இருந்தார்கள். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு ரஜினி-கமல் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

எங்களுக்கு பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

இப்போது தமிழ் சினிமாவில் மவுன புரட்சி ஏற்பட்டு இருக்கிறது. சின்ன `பட்ஜெட்'டில் தயாராகும் படங்கள் யாருடைய தயவும் இல்லாமல் வரிசையாக வெற்றிபெற்று வருகின்றன. அதற்கு, `பசங்க' படமே சாட்சி.

அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் இல்லை. நயன்தாரா, அசின் கிடையாது. நல்ல படங்களுக்கு வரவேற்பு எப்போதும் உண்டு.''என்றூ பேசினார்.

Saturday, May 16, 2009

Pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி ?

கணணிப் பயன்பாட்டாளர் களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. என்ற நிலை உருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம் கையில் இருக்கும் மட்டும் தான் அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம் அதை எங்காவது மறந்து போய் விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும்.
இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும் நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக் கூடியவாறு அதனுடன் சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்த மென்பொருட்களை இந்த வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.அப்ப மற்றவர்கள் என்ன பண்ண............... ? ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள் தான் Rohos Mini Drive இதன் முலம் Pen drive வின் ஒரு பகுதியை தனியாக Patition பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க முடியும்.

செயற்படுத்தும் முறை

1. முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.
2. அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
3. Pen drive கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.
4. அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன் உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும் அதன் கீழ் Password கேட்பார்கள் .
5. அந்த தகவல் சரியாயில் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Password டைக் கொடுத்துவிட்டு Create disk ஐ கிளிக் செய்யவும். ( அந்த தகவலில் ஏதேனும் பிழையிருப்பின் Change என்பதை கிளிக் செய்து தகவலை மாற்றலாம் )


அது தானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும் பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.

பின் கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து விட்டு My computer ஐ open பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும். அந்த Drive தான் நீங்கள் password கொடுத்திருக்கும் drive.அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது தான் மீண்டும் அந்த
Password போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect என்பதை Click செய்யவும்.

இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள் கணணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது அதன் சிறப்பாகும்.

மேலதிக விபரங்களுக்கு : http://www.rohos.com/products/rohos-mini-drive/

மென்பொருளைத் தரவிறக்க : http://www.rohos.com/rohos_mini.exe

Read more: http://tamilhackx.blogspot.com/2009/05/pen-drive-password.html#ixzz0FjjH1h8G&B

மைக்ரோசாப்ட் சில்வர் லைட்

நீங்கள் இணையத்தில் அடிக்கடி பிரவுஸ் செய்து தகவல்களை டவுண்லோட் செய்திடும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அடோப் பிளாஷ், மேக்ரமீடியா பிளாஷ், அடோப் ஷாக்வேவ் மற்றும் மைக்ரோசாப்ட் சில்வர் லைட் குறித்த தகவல்களை அல்லது குறிப்புகளைத் தெரிந்திருப்பீர்கள். நீங்கள் சற்று திடுக்கிடுவது தெரிகிறது. முதலில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து படித்திருக்கிறோம்; அதென்ன சில்வர் லைட் என்று வியக்கிறீர்களா!
ஆம், இது அடிக்கடி கேள்விப்படாததுதான்; ஆனால் எளிதாகக் கிடைக்கக் கூடியதும் கூட. முதலில் இது என்ன சில்வர் லைட் என்று பார்ப்போம். அடிப்படையில் உங்களிடம் சில்வர் லைட் தொகுப்பு கம்ப்யூட்டரில் இல்லை என்றால் அதனை டவுண்லோட் செய்து பதித்திட வேண்டியதிருக்கும். பதியும் போது உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அது எடுத்துக் கொள்ளும் தான். ஆனால் அதனால் பயன்களும் உண்டு. அடோப் பிளாஷ் மற்றும் ஷாக்வேவ் தொகுப்புகளுக்கு இணையான மைக்ரோசாப்ட் தொகுப்பாகும்.

முதலில் http://www.microsoft.com/silverlight என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லுங்கள். தளத்தில் Install என்பதில் கிளிக் செய்திடுங்கள். அது தானாகப் பதிந்து முடித்தவுடன் கம்ப்யூட்டரை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும். மைக்ரோசாப்ட் சில வேளைகளில் இந்த தொகுப்பில் மட்டுமே இயங்கக் கூடிய சில பைல்களைத் தரும். அப்போது இந்த தொகுப்பின் பயன் கிடைக்கும். இல்லை என்றாலும் அடோபின் தொகுப்பிற்குப் பதிலாக இதனை இயக்கி பார்க்கலாம்.

வெளிநாட்டில் குடியேற விருப்பம் இல்லை-ரஹ்மான்

அமெரிக்காவில் சென்று குடியேறும் எண்ணம் எனக்கு இல்லை. நான் சென்னையை விட்டு போகமாட்டேன் என இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி இசை அமைப்பாளரும், ஆஸ்கர் விருது[^] வென்றவருமான ரஹ்மான் அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து இசை[^] யமைக்க வாய்ப்பு வருவதால் அங்கு சென்று குடியேறப் போவதாக செய்திகள்[^] வெளியாகி உள்ளன.இந்நிலையில் ஈசா திரைப்படத்தின் பாடல் கேசட் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட ஏஆர் ரஹ்மான் கூறுகையில்,

நான் இந்த விழாவுக்கு வந்திருப்பதும் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம். நான் இங்கு வந்ததற்கு விசேஷமான காரணம் ஒன்று இருக்கிறது. ஈசா படத்தின் இசை[^] அமைப்பாளரின் தந்தை ஒரு இசை குழுவை வைத்திருந்தார். நான் என்னுடைய இளம் வயதில் ஒரு இசை குழுவை வைத்திருந்தேன்.

அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

நான் அமெரிக்காவில் சென்று குடியேற போவதாக கூறுவது எல்லாம் வதந்தி. எனது குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள்.

வெளிநாட்டு வாய்ப்புகளுக்காக நான் சென்னையை விட்டு போகமாட்டேன். நான் இங்கு தான் இருப்பேன்.

தற்போது நான் எந்திரன், சுல்தான் தி வாரியர், விண்னை தாண்டி வருவாயா, ராவணா என நான்கு படங்களுக்கு இசை[^] யமைத்து வருகிறேன் என்றார் ரஹ்மான்.

Sonyக்கு வந்த பரிதாப நிலை

உலக பொருளாதாரப் பின்னடைவு – அமெரிக்க சனாதிபதித் தேர்தல் சமயத்தில் சக்கை போடு போட்ட விவகாரம். இப்போது அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டேரைத் தவிர யாரும் பேசுவதே கிடையாது.

அமெரிக்காவில் வீடு, நிலங்களின் மதிப்பு உயர்வாயிருந்த காலம். பெரும்பாலானோர் அவற்றிலே முதலிடத் தொடங்க, வங்கிகளும் அவர்களுக்கு கேட்டுக் கேள்வி இல்லாமல் கடனைக் கொடுத்தன. பின் வீடு நிலங்களின் பெறுமதி குறையத்தொடங்கியபோதே பிரச்சினை ஆரம்பமாகியது. கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிக்கொடுக்க முடியாது திணற, அமெரிக்க வங்கிகளும் திவாலாகத் தொடங்கின. இவ்வாறு தொடங்கிய பிரச்சினை பலருடைய வேலையைப் பறித்து, பல நிறுவனங்களை இழுத்து மூட வைத்தது. ஏன்? பெட்டிக் கடைமுதல், பெரிய நிறுவனங்கள்வரை இதன் பாதிப்புக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்தையும் பாதித்தது.

ஆகா, ஓகோ எனப் புகழப்பட்ட IT துறையும், இலத்திரனியல் துறையும் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்தன. அதன் தாக்கத்தை தமது இலாப(?) நட்டங்களை கூட்டிக் கழித்துப் பார்த்து வெளியிட்டு வருகின்றன அத்துறைகளில் பிஸ்தாவான நிறுவனங்கள்.

உலகின் முன்னணி இலத்திரனியல் நிறுவனமான SONY கடந்த 14 வருடங்களில் தனது முதலாவது வருடாந்த நட்டத்தை அறிவித்துள்ளது. 1.7 பில்லியன் அமரிக்க டாலர் நட்டத்தை அது அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு அதைவிட அதிக நட்டத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அது தனது எட்டு தொழிற்சாலைகளை மூடப்போவதாகவும், மேலும் எண்ணாயிரம் பேரை வேலையைவிட்டுத் தூக்கப்போவதாகவும் கூறியுள்ளது.SONY மட்டுமல்ல, Hitachi, NEC Corp ஆகிய இலத்திரனியல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் நிலை இதைவிட மோசம் எனக் கூறப்படுகிறது. Hitachi யின் நட்டம் அதிகமல்ல, வெறும் 7.9 பில்லியன் அமரிக்க டாலர் மட்டுமே. NEC நிறுவனம் 3 பில்லியன் அமரிக்க டாலர் நட்டத்தை பெற்று இரண்டாமிடம் வகிக்கின்றது.

வருகின்ற செய்திகளைப்பார்த்தால் ஒரு ஒபாமா என்ன, ஓராயிரம் ஒபாமா வந்தாலும் உலகத்தைக் காப்பாற்ற முடியாது.

மடோனாவின் 'கசமுசா' படம்!

பாப் ராணி மடோனா, ராப் கலைஞர்[^] கென்யே வெஸ்ட்டின் காதலி ஆம்பர் ரோஸின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அந்தப் படத்தில் ரோஸின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் மடோனா. அதை வெஸ்ட் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் நடந்த காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூட்டின் விழா ஒன்றில் இந்தப் படம்[^] எடுக்கப்பட்டுள்ளது. டெய்லி மெயில் ஆன்லைன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படம்[^] வெளியே வராமல் இருந்தது. ஆனால் படு ஜாலியாக மடோனா கொடுத்த இந்த போஸ், ஆம்பர் ரோஸுக்குப் பிடித்துப் போகவே தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆம்பர் ரோஸின் பின்பக்கத்தை மடோனா பிடித்திருப்பது போன்ற இந்தப் படம்[^] இங்கிலாந்தில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.