Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, May 1, 2009

நைட் ரைடர்ஸ்' அணியை விற்க ஷாருக் முடிவு?

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விற்கும் முடிவுக்கு பாலிவுட் நடிகரும் அந்த அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் வந்திருப்பதாகவும், இது தொடர்பாக நோகியா, சஹாரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் அவர் பேசி வருவதாகவும் தெரிகிறது.

ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் விளையாடி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ரூ. 300 கோடி கொடுத்து வாங்கினார்.

அணிக்கு கேப்டனாக கங்குலியும், பயிற்சியாளராக ஜான் புக்கானனும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் யிற்சியாளர் புக்கானன் அணிக்கு கங்குலி மட்டும் கேப்டன் அல்ல. பல கேப்டன்கள் இருப்பார்கள் என்றார். இதற்கு கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த எதிர்ப்பையும் மீறி தற்போதைய தொடரில் மெக்கலம் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும், கொல்கத்தா அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் அவர் வெறுத்து போயுள்ளார். கடந்த ஆண்டு நடந்த தொடரில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் திணறியது.

தற்போது அதைவிட பரிதாபமான நிலையில் இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டியில் 1ல் மட்டுமே வென்றுள்ளது. அதுவும் மழை காரணமாக அடித்த அதிர்ஷ்டத்தில் வென்றுள்ளது. இதனால் ஷாருக் கான் நொந்து போயுள்ளார்.

இந்நிலையில் தேர்தலில் ஓட்டு போட இந்தியா வந்த அவர் கொல்கத்தா அணி வெற்றி பெறும் வரை தான் தென் ஆப்ரிக்கா வர போவதில்லை என தெரிவித்தார்.

ஷாருக் கான் மறுப்பு...

ஆனால், இதை ஷாருக் கான் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் கொல்கத்தா அணியை அதிக ஆசையுடன் வாங்கினேன். அதை யாருக்கு விற்க மாட்டேன் என்றார்.

இந்நிலையில் அவர் அணியை விற்க போவதாகவும், அது தொடர்பாக நோகியா, ரிலையன்ஸ், சஹாரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும், பேரம் படிந்தவுடன் அதை விற்க போவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அணியின் மோசமான ஆட்டம் மற்றும் கையை கடிக்கும் செலவு ஆகியவை கிங் கானை தனது முடிவை மாற்ற யோசிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு லாபமாக வெறும் ரூ. 13 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மற்ற அணிகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இது மிகவும் குறைவு.

No comments:

Post a Comment