உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிடும் வகையிலான காட்சிகளில் நடிக்க நான் ரெடி என்று அதிரடியாக அறிவித்துள்ளாராம் ஷீலா.
குட்டிப் பாப்பாவாக நடித்து வந்த ஷீலா, இப்போது தனி நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் பெரிய இடம் கிடைக்கும் என நினைத்து இளவட்டம் படத்தில் பெரும் கவர்ச்சி காட்டி நடித்து அறிமுகமானார் ஷீலா. ஆனால் இளவட்டம், இளசுகளைக் கவர்ந்ததோடு சரி, தமிழ்த் திரையுலகை அது கவரவில்லை.
இதனால் அங்குமிங்குமாக சில வாய்ப்புகள் வந்ததோடு சரி. இதனால் தெலுங்குப் பக்கம் புகுந்தார் ஷீலா. அங்கு கவர்ச்சியுடன் நடித்ததால் ஓரளவு வாய்ப்புகள் வந்தன.
இந்த நிலையில், தமிழிலிலும் தடபுடலாக தனது கவர்ச்சியைக் கூட்ட முடிவு செய்துள்ளாராம் ஷீலா. அதன் ஒரு பகுதியாக காட்சிக்குத் தேவை என்று கருதினால் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தம் கொடுத்தும் நடிக்கத் தயார் என கூறியுள்ளாராம் ஷீலா.
முத்தம் ஆபாசம் அல்ல. ஆனால் அது கொடுக்கும் முறையிலும், பார்க்கும் பார்வையிலும்தான் இருக்கிறது. காட்சிக்கு பொருத்தமாக இருந்தால், அவசியமாக இருந்தால் லிப் லாக் காட்சிகளில் நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளாராம் ஷீலா.
ஷீலா ரெடியாகி விட்டார், வாய்ப்புகள் வருதான்னு பார்க்கலாம்...
No comments:
Post a Comment