Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, May 16, 2009

வெளிநாட்டில் குடியேற விருப்பம் இல்லை-ரஹ்மான்

அமெரிக்காவில் சென்று குடியேறும் எண்ணம் எனக்கு இல்லை. நான் சென்னையை விட்டு போகமாட்டேன் என இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி இசை அமைப்பாளரும், ஆஸ்கர் விருது[^] வென்றவருமான ரஹ்மான் அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து இசை[^] யமைக்க வாய்ப்பு வருவதால் அங்கு சென்று குடியேறப் போவதாக செய்திகள்[^] வெளியாகி உள்ளன.



இந்நிலையில் ஈசா திரைப்படத்தின் பாடல் கேசட் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட ஏஆர் ரஹ்மான் கூறுகையில்,

நான் இந்த விழாவுக்கு வந்திருப்பதும் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம். நான் இங்கு வந்ததற்கு விசேஷமான காரணம் ஒன்று இருக்கிறது. ஈசா படத்தின் இசை[^] அமைப்பாளரின் தந்தை ஒரு இசை குழுவை வைத்திருந்தார். நான் என்னுடைய இளம் வயதில் ஒரு இசை குழுவை வைத்திருந்தேன்.

அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

நான் அமெரிக்காவில் சென்று குடியேற போவதாக கூறுவது எல்லாம் வதந்தி. எனது குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள்.

வெளிநாட்டு வாய்ப்புகளுக்காக நான் சென்னையை விட்டு போகமாட்டேன். நான் இங்கு தான் இருப்பேன்.

தற்போது நான் எந்திரன், சுல்தான் தி வாரியர், விண்னை தாண்டி வருவாயா, ராவணா என நான்கு படங்களுக்கு இசை[^] யமைத்து வருகிறேன் என்றார் ரஹ்மான்.

No comments:

Post a Comment