மிகுந்த பணக்கஷ்டம் மற்றும் மனக்கஷ்டத்துக்குப் பிறகு இயக்குநர் சரண் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியிருக்கும் படம் மோதி விளையாடு.
ஜெமினி புரொடக்ஷன்ஸ் எனும் பெயரில் சொந்தப் படம் எடுத்த சரண், முனி, வட்டாரம் போன்ற படங்களில் கையைச் சுட்டுக் கொண்டதால், வீட்டை விற்கும் அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தார் திரையில். இப்போதுதான் சற்றே நிமிர்ந்து மோதி விளையாடு படத்தில் கவனம் செலுத்தினார்.
உன்னாலே உன்னாலே வினய்யை வைத்து சரண் எடுத்த இந்தப் படம் நீண்ட நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால் வெளியில் அந்தப் படம் குறித்த பேச்சே இல்லாமல் பார்த்துக் கொண்டது படத்தின் பிஆர்ஓவுக்கே உரிய தனித் திறமை!
இதனால் படத்தின் ஆடியோவெல்லாம் வெளியாகிவிட்ட நிலையிலும் படம் விற்பனையாகும் வழியைக் காணோம். இந்தப் படம் வெளியாகி அதற்குக் கிடைக்கும் ரிசல்டை வைத்துதான் தல அஜீத் நடிக்கும் அசலின் தலைவிதியே நிர்ணயமாகும் என்ற சூழல்.
ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதால் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக உருகுகிறார் சரண். இவரைப் போன்றவர்கள் ஜெயிக்க வேண்டும் என வைரமுத்து உள்ளிட்டோர் வெளிப்படையாகவே வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
என்ன செய்வது... நியாயமாக படத்தின் தயாரிப்பாளருக்கும், பிஆர்ஓவுக்கும் இருக்க வேண்டிய கவலை இது.
வைரமுத்து கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது...!
No comments:
Post a Comment