சிம்பு படத்தில் ஓரிரு காட்சிகளில் தோன்ற பாப் பாடகி சகீராவை அணுகியுள்ளார்களாம் போடா போடி படக் குழுவினர்.
கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஷகீரா. பாப் பாடகி. இவரது பாடலை விட இடுப்பசைவுக்குத்தான் ஏகப்பட்ட ரசிகர்கள். இடுப்பை, வளைத்து ஒடித்து ஆடிப் பாடும் ஷகீராவுக்கு உலகெங்கும் எக்கச்சக்க ரசிகர்கள்.
ஹாலிவுட் பக்கமே உலாவிக் கொண்டிருக்கும் ஷகீராவை பாலிவுட்டுக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. ஷகீராவுக்குமே கூட பாலிவுட் ஆசை மனதில் உள்ளது.
இந்த நிலையில் கோலிவுட்டிலும் ஷகீராவை இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிம்புவும், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் ஜோடி போட்டு நடிக்கும் போடா போடி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ஷகீராவை இழுத்துப் போட முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க கனடாவில் நடைபெறவுள்ளது. ஷகீரா தற்போது கனடாவில்தான் இருக்கிறார் என்பதால், எப்படியாவது ஷகீராவை இதில் நடிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளதாம் போடா போடி யூனிட்.
No comments:
Post a Comment