கல்யாணம் என்றதும் தீயை மிதித்துவிட்டதைப் போல பதைக்கிறார் த்ரிஷா. அவ்வளவு கசப்பான சமாச்சாரமா...
"அதுக்கில்ல... மாசத்துல 28 நாள் ஓயாம நடிச்சிக்கிட்டே இருக்கேன். மீதி ரெண்டு நாள்தான் ரெஸ்ட். அவற்றை ஒரு நொடி கூட வீணாக்காமல் என்ஜாய் பண்றேன். வேலை செய்யறது கஷ்டமில்லை. அதையும் அனுபவித்து செய்கிறேன்.
ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த அற்புதமான சந்தோஷங்களையெல்லாம் இழக்க விரும்பலே. அதனால கல்யாணம் என்கிற ஐடியாவே இப்போதைக்கு இல்லை.. இல்லை... இல்லை..." எனும் த்ரிஷா, இனி ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மாதம் கட்டாய விடுப்பு எடுக்கப் போகிறாராம்.
எதற்கு?
"சமீபத்தில் 20 நாட்கள் தோழிகளுடன் மீண்டும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டுத் திரும்பினேன். அது மறக்க முடியாத அனுபவம். ஆண்டுக்கு ஒரு தடவை இதுபோல வெளிநாடு சுற்றுப்பயணம் போனா மனசும் உடம்பும் பிரஷ்ஷாயிடுது. உலகம் முழுவதும் இப்படியே சுற்றி பார்த்து விடவேண்டும் என்ற ஆசை உள்ளது..." என்கிறார்.
அனுபவிங்க அனுபவிங்க!
No comments:
Post a Comment