Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, April 20, 2009

இந்திய அணிக்கு நான் தேவையில்லை: டெண்டுல்கர்




உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆனால் 20 ஓவர் போட்டி அவர் விலகி இருக்கிறார். அதிரடியாக ஆட கூடிய அந்த போட்டியில் அவர் விளையாட விரும்பியது கிடையாது. வர்த்தகரீதியாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் டெண்டுல்கர் முத்திரை பதித்தார்.

இதனால் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதை அவரே விரும்பவில்லை. இது தொடர்பாக டெண்டுல்கர் கூறியதாவது:

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் சிங்சுக்கு எதிராக விளையாடிய ஆட்டம் திருப்தி அளிக்கிறது. நானோ, அல்லது டிராவிட்டோ போன்ற சீனியர் வீரர்கள் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை.

2007 ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகினேன். அப்போது எனது உடல் ஒத்துழைக்க வில்லை. 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லை. நான் அணிக்கு தொந்தரவாக இருக்க விரும்பியது இல்லை.

தற்போது நல்ல நிலையில் ஆடி வந்தாலும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணிக்கு நான் தேவையில்லை. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது என்றார்.

No comments:

Post a Comment