கிசுகிசுக்களில்கூட காஸ்ட்லி கிசுகிசுக்களைத்தான் சந்திக்கிறார் அசின். பாலிவுட் போனபிறகு ஏற்பட்ட மவுசுதான் இதற்கு காரணம்.
சல்மான்கானுக்கும் அசினுக்குமிடையே ஒரு ‘இது’ இருக்கிறது என மும்பை பத்திரிக்கைக்காரார்கள் கொளுத்திப்போட்ட கிசுகிசுதான் இந்தி ரசிகர்களுக்கு சமீபத்திய ஸ்னாக்ஸ். இலவச பப்ளிசிட்டிக்கு இது பயன்பட்டாலும், அதனை காட்டிக்கொள்ளாமல் கடுப்பை வெளிப்படுத்துகிறாராம்.
]
கேள்வியும் நானே, பதிலும் நானே கான்செப்டில் நிருபர்களிடம் இதுபற்றி விளக்கவுரை நிகழ்த்திய அசின்,” சல்மான் கானுடன் காதல் என வரும் செய்திகளில் உண்மையில்லை. யார்தான் இப்படியான வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள் என தெரியவில்லை. ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன். அவர் எனது சக நடிகர் அவ்வளவுதான். இப்படியான வதந்திகளை சல்மான் சாதாரணமாக எடுத்துக்கொள்வார். அவரிடமிருந்து நானும் அந்த பழக்கத்தை கற்றுக்கொண்டுள்ளேன் ( எந்த பழக்கத்தை?)” என்றார்.
அப்படினா நீங்க யாரை லவ் பண்றீங்க?
“ நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு பாய்பிரண்ட்கூட இல்லை. யாருடனும் ஊர்சுற்றும் பழக்கம்கூட எனக்கு கிடையாது (இத யாரும் கேட்கலையே?) என்னுடைய கவனமும் காதலும் சினிமா மீதுதான். தீபிகா படுகோனேவுடன் மோதல் என்று எழுதிய செய்தியிலும் உண்மை இல்லை. நாங்கள் இருவரும் நல்ல தோழிகள்” என கொதிக்கும் அசினின் கோபத்தில் கோடை வெப்பம்.
No comments:
Post a Comment