இந்தியாவின் டாப் நடிகர் என்ற அந்தஸ்து மாமனார் அமிதாப்புக்கும், டாப் நடிகை என்ற கிரீடம் நடிகை ஐஸ்வர்யாவுக்கும் கிடைத்துள்ளது. பர்ஸப்ட் டேலன்ட் மேனேஜ்மென்ட் மற்றும் ஹன்ஸா ரிசர்ச் அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு முடிவின்படி, அகில இந்திய சினிமாவில் ஐஸ்வர்யா ராய்க்கே முதலிடம் கிடைத்துள்ளது.
இவரது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள ரஜினியின் எந்திரன் மற்றும் மணிரத்னத்தின் ராவண் திரைப்படங்கள் இவரது ரேங்க் மற்றும் சம்பளத்தை மேலும் பல மடங்கு உயர்த்தக் கூடும் என்கிறது அந்த சர்வே. ஐஸ்வர்யாவுக்கு அடுத்த இடத்தில் கத்ரீனா கைஃபும், பேஷன், தோஸ்தானா வெற்றிகளின் மூலம் பரபரப்பாகப் பேசப்படும் ப்ரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தையும், ஜப் வி மெட் மூலம் மீண்டும் ஹாட் சீட்டுக்கு வந்த கரீனா கபூர் நான்காவது இடத்திலும் உள்ளனர். 5-வது இடத்தைப் பிடித்துள்ள நடிகை யாரென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள். அவர் இத்தனைக்கும் பீல்டிலேயே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வேறு யாருமல்ல... முன்னாள் கனவுக்கன்னியும், தர்மேந்திராவின் மனைவியுமான அறுபது வயது ஹேமமாலினி!!
No comments:
Post a Comment