Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, April 4, 2009

'அயன்' விமர்சனம்




தான் கடந்து வரும் ஒவ்வொரு படைப்பிலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் சூர்யாவின் சமீபத்திய வெளியீடு 'அயன்'. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் 'கனா கண்டேன்' படத்திற்கு பிறகு, ஒரு அப்பட்டமான உண்மையை கொஞ்சம் கலர் பொடி தூவி கமர்ச்சியல் படமாக இயக்கியிருக்கிறார்.


இங்கிருந்து வெளிநாட்டிற்கு போதைப் பொருள் கடத்தும் கொள்ளை கும்பலை அடித்து துவைத்து வில்லனுக்கு மரண தண்டனைக் கொடுக்கும் ஒரு சூப்பர் ஹீரோ தான் சூர்யா.ஆனால் அதே கடத்தல் தொழிலை கொஞ்சம் நாகரீகமாக தங்கம், வைரம் என்று நிறுத்திக்கொள்ளும் ஹீரோ சூர்யா, ஏன் வில்லனை பழிவாங்க வேண்டும் என்பதே கதை.

படத்தின் துவக்கத்தில் சென்னைக்கு திரும்பும் சூர்யா ஏர்போர்டில் 'தஸு புஸு'ன்னு இங்கிளீஷில் பீட்டர் விடுவதைப் பார்த்து 'ஆஹா'ன்னு சொல்லி வாயை மூடுவதற்குள் வெளியே வந்த சூர்யா பிரபுவைப் பார்த்து 'இன்னா ணா.. உள்ள ஒரே பேஜாரா பூட்சி'ன்னு சொல்லும் போது பாக்குற நமக்கு ஒரே ஆச்சர்யமா பூட்சி. புது படத்தின் திருட்டு வி.சி.டி வியாபாரம் பார்க்கும் 'தாஸ்' பிரபுவுக்கு அசிஸ்டெண்ட் வேலை பார்க்கிறார் சூர்யா என்பது பின்னர் புரிகிறது.


இந்த கும்பலில் இவரைத் தவிர கருணாசும் ஒருவர். ஒரு கட்டத்தில் ஜெகன் பிரபுவிடம் வேலைக்கு சேர்கிறார். சூர்யாவும் ஜெகனும் ஆப்பிரிக்கா சென்று வைரம் கடத்துகிறார்கள். 'தங்க பிஸ்கட்' வரை இந்த கடத்தல் போகிறது. கடத்தல் தொழிலுக்கு நடுவே சூர்யாவிற்கும் தமன்னாவிற்கும் காதல் தொழிலும் நடக்கிறது. தமன்னா ஜெகனின் தங்கை. சூர்யாவிற்கு அம்மா மட்டுமே, ஆனால் எல்லாமே 'தாஸ்' பிரபு அண்ணன் தான்.


இப்படியிருக்க பிஸ்னஸ் நடக்கிற ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு செய்தி தெரிந்துவிட, ஒவ்வொரு முறையும் சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டாலும், யாரு அந்த இன்பார்மர் என்ற குழப்பத்தோடு இருக்கிறார்கள் சூர்யாவும் பிரபுவும். ஒரு கட்டத்தில் ஜெகன் தான் அந்த த்ரோகி என்று தெரிய வர, சூர்யா ஜெகன் நட்பு சொல்ல முடியாத சோகத்தில் முடிந்துவிடுகிறது, வேறென்ன சூர்யா தமன்னா காதலும் அம்பேல் ஆகிறது. வில்லன் கும்பலில் இருக்கும் ஜெகன் கொலை செய்யப்பட, கொலைப் பழி சூர்யா மேல் விழ, என்ன நடக்க போகுதுன்னு நம்ம மண்டைக் குழம்ப, நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன அதே ஹீரோ வில்லன் சண்டையை கொஞ்சம் செலவு செய்து ஆப்பிரிக்கா மலை உச்சியில் எடுத்திருக்கிறார்கள்.


முதல் பாதி நன்றாக சென்றாலும் படத்தின் இரண்டாவது பாதியில் திரைக் கதையில் வலிமை குறைந்துவிடுகிறது. புதுசா ஏதோ சொல்லப் போறாங்க என்று ஆவலுடன் எதிர்பார்த்த நமக்கு அதே 'தகடு தகடு' மேட்டரை ரிபீட் அடித்ததில் கொஞ்சம் சலிப்பு. ஜெகன் வயரு கிழிந்து சாகும் காட்சி நம் அடி வயிற்றைக் கலக்குகிறது. நண்பனை கொடூரமான கோலத்தில் பறிகொடுத்த சூர்யா, அண்ணனை இழந்த தமண்னா இப்படி சோகத்தில் இருக்கும் போது இருவருக்கும் ரொமண்டிக் டூயட் தேவையா? ரசிகர்கள் ரிலாக்ஸ் பண்ண வேற ஏதாவது செய்திருக்கலாம். தேவை இல்லாத இடத்தில் சீட்டை சூடாக்குகிற பாடலை தவிர் திருக்கலாம். இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் சூர்யாவின் 'சிஸ் பேக்' சாகசங்கள் அதை மறைத்துவிடுகிறது.


தமன்னா அளவான அழகு. பிரபுவின் நடிப்பு வழக்கம் போல சூப்பர். படத்தில் ஆழமாக பதிந்துவிடுகிற இன்னொருவர் சூர்யாவின் அம்மாவாக வரும் ரேணுகா.ஜெகனுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'பல பலக்குற பகலா நீ', 'விழி மூடி யோசித்தால்' பாடல்கள் இளமை மழை. கனல் கண்ணனின் சண்டைப் பயிற்சி 'தூள்'. அதுவும் சூர்யா ஆப்பிரிக்கா வில்லன்களோடு போடும் முதல் சண்டை நிச்சயமாய் தமிழ் சினிமாவிற்கு புதுசு.


'அயன் ' சூர்யாவின் அசத்தல் அட்டகாசம

No comments:

Post a Comment