விழுப்புரம்: மனைவி உஷாவை ரயிலில் அனுப்புவதற்காகச் சென்ற லதிமுக தலைவர் டி ராஜேந்தரை வழி மறித்த விஜய்காந்த் கட்சியினர் சரமாரியாகத் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இவர்களில் 6 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர். t-rajendaract_01
கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், வேட்புமனு தாக்கல் செய்ய மனைவி உஷாவுடன் கள்ளக்குறிச்சியில் தங்கியிருந்தார். மனுத் தாக்கல் முடிந்துவிட்டதால் உஷாவை சென்னைக்கு ரயிலில் அனுப்பி க்க சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு வந்தார்.
அவர் பிளாட்பாரத்தில் நடந்து போனபோது, திடீரென அங்கு வந்த சின்னசேலம் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, குமார், கோபிநாத், சூரியன், தாமோதரன், அறிவழகன் உள்ளிட்டோர் ராஜேந்தரை வழிமறித்தார்களாம்.
அவரை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சின்னசேலம் போலீஸில் புகார் கொடுத்தார் டி ராஜேந்தர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது, குப்புசாமி மகன் சின்னசாமி, சின்னசேலம் பாண்டியன் மகன் குமார், சின்னப்பன் மகன் கோபிநாத், துரைசாமி மகன் சூரியன், அங்கமுத்து மகன் தாமோதரன், கோவிந்தன் மகன் அறிவழகன் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
“இது என்னய்யா அநியாயமா இருக்கு… யார் யாரைத் திட்டறதுன்னு விவஸ்தை இல்லையா… எதிர்த்துப் போட்டியிடறதைக் கூட அவங்களால தாங்க முடியல. பயம் வந்துருச்சிய்யா… பயம் வந்துருச்சி. நான் விடமாட்டேன்… ரயில்வே பிளாட்பாரம்ல வழிமறிச்சித் திட்டறானுங்க, இதான் வீரமா.. முடிஞ்சா அரசியல் பிளாட்பாரம்ல நின்னு பேசட்டும்…” என்று காவல் நிலைய வாசலில் செய்தியாளர்களிடம் கூறினார் ராஜேந்தர்.
No comments:
Post a Comment