தமிழில் விஜய்யை வைத்து தான் இயக்கிய போக்கிரியை, சல்மான்கானை வைத்து இந்தியில் உருவாக்கி வருகிறார் பிரபுதேவா. படப்பிடிப்பு முடிந்து விரைவில் படம் ரிலீசாக உள்ளது.
இதற்கிடையில் நயன்தாராவும், பிரபுதேவாவுக்கும் இடையே புதிய 'நட்பு' மலர்ந்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.
வில்லு படத்தில் நயன்தாரா நடித்த போது ஏற்பட்ட நெருக்கம்தான் இப்போது நயன்தாரா நடித்து வரும் பாடிகார்ட் மலையாள படத்தில் பிரபு தேவாவை டான்ஸ் மாஸ்டர் ஆக்கியுள்ளதாம்.
பெரிய இயக்குநராக இருந்தாலும், நயனின் அன்புக் கட்டளையை மீற முடியாமல்தான் இந்தப் படத்துக்கு நடனம் அமைத்துத் தர பிரபுதேவா ஒப்புக் கொண்டதாகக் கிசுகிசுக்கிறார்கள்.
இது பற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது,
பாடிகார்ட் பட இயக்குநர் சித்திக் எனது நீண்டகால நண்பர். அவர் இயக்கிய எங்கள் அண்ணா படத்தில் நான் நடித்துள்ளேன்.
அவர் மலையாளத்தில் எடுக்கும் படத்தில் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கு நான்தான் நடனம் அமைக்க வேண்டும் என பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டார்.
அதனால்தான் ஒப்புக் கொண்டேன். இப்போது குடும்பம், குழந்தைகள் என வேறு மாதிரி செட்டப்பில் செட்டிலாகிவிட்டேன். இந்த சமயத்தில் போய் என்னையும், நயன்தாராவையும் பற்றி ஏன் இப்படி கிசுகிசு பரப்புகிறார்கள் என்று புரியவில்லை.
நயன்தாராவைப் பொறுத்தவரை அவர் மிகச் சிறந்த டான்ஸர். எங்களுடைய தொடர்பு முழுக்க தொழில் ரீதியிலானது.
மீண்டும் ஹீரோவாகியுள்ளது சந்தோஷம் தருகிறது. தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் மிகச் சிறந்த படைப்பாக வரும். இந்த மாதிரி ஒரு கதையில் நடிக்கத்தான் இவ்வளவு நாளாக நடிக்காமல் காத்திருந்தேன்.
என் நடிப்பு வாழ்க்கையில் மிகச் சிறந்த படமாக களவாடிய பொழுதுகள் அமையும் என்றார்.
No comments:
Post a Comment