Wednesday, April 29, 2009
ரஜினி..ஒரு பாட்டு... 100 ஸ்டைலு..!
இதுவரை இந்திய சினிமாவில் ஸ்டைல் என்ற வார்த்தைக்கு ரஜினி என்றுதான் கூறிவந்தார்கள். இனி இதே வார்த்தையை உலகம் முழுக்க கூறப் போகிறார்கள். உலகம் முழுக்க வெளி வரப்போகும் எந்திரன் படத்தில் ஒரே பாடலில் 100 பாடலுக்கு விதவிதமான ஸ்டைல் காட்டி நடித்து அசத்தியிருக்கிறாராம் நமது சூப்பர் ஸ்டார்.
இந்தப் பாடலை எடுக்க மட்டும் 22 நாட்கள் பிடித்திருக்கிறது இயக்குநர் ஷங்கருக்கு.
ஹைதராபாத் பிலிம் சிட்டியில் தனி செட் போட்டு வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்காட்சிக்கு பிரபுதேவாதான் நடனம் அமைக்க வேண்டும் என்று ரஜினியே விரும்பிக் கேட்டுக் கொண்டாராம். இதனால் மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்த பிரபு தேவா, ரஜினியுடன் தங்கியிருந்து இந்த அட்டகாசமான பாடலை எடுத்து முடித்துள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் இனியும் இப்படியொரு படம், பாடல் காட்சி இருக்குமா என்று வியக்கும் அளவுக்கு மிகப் பிரமாதமாக வந்திருப்பதாக பிரபு தேவா தெரிவித்துள்ளார்.
'நிச்சயம் என் வாழ்நாளில் இப்படியொரு வித்தியாசமான பாடலுக்கு, இத்தனை சிரமமான நடனத்தை இன்னொரு முறை அமைப்பேனா என்று தெரியவில்லை. ரஜினி சார் ஒரு அதிசயம். நான் அடித்துச் சொல்கிறேன்... நிச்சயம் வேறு எந்த நாயகனாலும் இந்த அளவு கஷ்டமான நடனத்தை, இத்தனை விதமான ஸ்டைல்களுடன் ஆட முடியாது. ரஜினி சாருக்கு இணை ரஜினிதான். ஷங்கர் அற்புதமான க்ரியேட்டர். இல்லாவிட்டால் இவ்வளவு பிரமாதமாக அந்தப் பாடல் வந்திருக்காது' என்கிறார் பிரபு தேவா.
இந்தப் பாடலில் ரஜினியின் ஆட்டம் பார்த்துவிட்டு, வட இந்திய பத்திரிகளிலெல்லாம் ரஜினி புகழ் பாடி வருகிறாராம் ஐஸ்வர்யா ராய்.
இந்தப் பாடலில் 100 ஸ்டைல்களில் தோன்றும் ரஜினி, ஒவ்வொரு ஸ்டைலு்ககும் ஒரு காஸ்ட்யூம் என கலக்கியிருக்கிறாராம்.
ஏற்கெனவே சிவாஜியில், எம்ஜிஆர், சிவாஜி, கமல் மற்றும் அதிரடி நாயகன் ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்புகளில் ரஜினி தோன்றியிருப்பது நினைவிருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment