தனிஷ்கா படு குஷியாக இருக்கிறார். பேராண்மை படத்தின் நாயகிகளில் ஒருவரான இவரது குஷிக்குக் காரணம், உன்னைப் பார்த்தால் ஏஞ்செலீனா ஜூலி மாதிரியே இருக்கு என்று இயக்குநர் ஜனநாதன் கூறியதுதானாம்.ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படம்தான் பேராண்மை. இதில் தனிஷ்காவும் ஒரு நாயகி.
இவர் தவிர சரண்யா, வர்ஷா, வசுந்தரா, லியாஸ்ரீ என்று ஒரு ஹீரோயின் பட்டாளமே உண்டு.பார்க்க மாடல் அழகி போல படு க்யூட்டாக இருக்கும் தனிஷ்கா, இப்படத்தில் நிறைய சண்டைக் காட்சிகளிலும் அசத்தியுள்ளாராம்.என்.சி.சி. வீராங்கனையாக படத்தில் வரும் தனிஷ்கா, பேராண்மை அனுபவம் குறித்துக் கூறுகையில், ஒரு கண்காட்சியில் வைத்து என்னைப் பார்த்தார் இயக்குநர் ஜனநாதன்.
பேராண்மை படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார். எனக்கோ சினிமா என்றால் கொள்ளை ஆசை. கிடைத்த வாய்ப்பை விடாமல் பற்றிக் கொண்டேன்.படத்தில் எனக்கு நிறைய சண்டைக் காட்சிகள் வைத்துள்ளனர். இதற்காக பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம், ஷிஹான் ஹூசேனியிடம் வில்வித்தை, மைக்கேல் மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சிகள் குறித்த நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.பேராண்மை படத்தில் ஐந்து நாயகியர்களில் ஒருவராக நான் வருகிறேன். அடர்த்தியான காடுகளில்தான் படப்பிடிப்பு நடந்தது. அட்டைத் தொல்லை, கொசுத் தொல்லை உள்பட பல தொல்லைகள். ஒரு முறை காட்டெருமை கூட குறுக்கிட்டது. அத்தனையையும் சமாளித்துக் கொண்டு நடித்தோம்.இத்தனை கஷ்டத்துக்கு மத்தியிலும் எனக்கு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் என்னைப் பார்த்தால் ஏஞ்செலீனா ஜூலி போலவே இருக்கிறது என்று இயக்குநர் பாராட்டியதுதான்.
எனது மேனரிசங்களைப் பார்த்தால் டாம்ப் ரைடர் படத்தில் வரும் ஜூலி மாதிரியே இருக்கிறது என்றும் பாராட்டினார் இயக்குநர். இதை மறக்கவே மாட்டேன்.இயல்பிலேயே நான் ஜூலியின் ரசிகை. அவரது ஒரு படத்தையும் நான் விட்டு வைத்ததில்லை. இப்போது என்னைப் போய் ஜூலியுடன் ஒப்பிட்டுக் கூறி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார் இயக்குநர் ஜனநாதன் என்று அடுக்கிக் கொண்டே போகிறார் ஜூலி..
No comments:
Post a Comment