வாரணம் ஆயிரம் என்ற சின்ன சறுக்கலுக்குப் பின் வெளிவந்த அயன் படம் சூப்பர் டூப்பராகிவிட்டதில் ஏக சந்தோஷத்திலிருக்கிறார் சூர்யா.
இந்தப் படம் வீடொக்கடே என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகிறது. சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தை தாங்களே நேரடியாக வெளியிடுகிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர்.
அதுமட்டுமல்ல, தான் நல்ல படங்கள் என்று நம்புவதை இனி தெலுங்கிலும் சேர்த்தே ரிலீஸ் செய்யப் போகிறாராம் சூர்யா.
"படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதைத்தான் நான் விரும்புகிறேன். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைகளில் நடிப்பதை விரும்பவில்லை..." எனும் சூர்யாவுக்கு, இப்போது முன்பை விட அதிகமாக ரசிகர்கள் பெருகியிருக்கிறார்களாம்.
"ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். பதிலுக்கு அவர்களுக்கு நல்ல படங்கள் தர விரும்புகிறேன். எனக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தொடர்பு இவ்வளவுதான். வேறு எந்த நோக்கமும் எனக்கில்லை. எனக்குப் பெண் ரசிகைகள் முக்கியம். என்னை அவர்கள் வீட்டில் ஒருவனாக நினைக்கத் துவங்கியதால்தான் இத்தனை ஆதரவு கிடைத்துள்ளது. பெண்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிலைப்பது கஷ்டம்" என்கிறார் சூர்யா.
No comments:
Post a Comment