ஊடகத்தின் பலம் என்னவென்பதை மற்றெவரையும் விட நன்கு புரிந்து வைத்திருப்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
வைகோவின் அழுத்தமான ஆரம்பத்துக்குக் காரணமே ஊடகங்கள் தந்த முக்கியத்துவம்தான்.
திமுகவிலிருந்து பிரிந்து வந்தபின் வைகோவுக்கு முன்னணி நாளிதழ்களின் வெளிப்படையான ஆதரவு இருந்தது. அந்த பலத்தையும் மக்கள் மீது கொண்ட நம்பிக்கையையும் வைத்து மார்க்சிஸ்ட் மற்றும் ஜனதா தளத்துடன் தனி அணி அமைத்துக் களம் கண்டார் வைகோ. ஆனால் மக்கள் அவரைக் கைவிட, வெறுத்துப் போய் அவரும் கூட்டணியில் விழுந்தார்.
ஒருவேளை முதல் தேர்தலில்யே வைகோவுக்கு சில ஆறுதல் வெற்றிகளாவது கிடைத்திருந்தால் அவரது அரசியல் நிலைப்பாடுகள் வேறாகக் கூட இருந்திருக்கலாம்.

ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு மதிமுகவை ஆதரித்த பத்திரிகைகளும் முகத்தைத் திருப்பிக் கொள்ள தங்களுக்கென்று தனி பத்திரிகை இல்லாமல் தவித்து வந்தார் வைகோ. கட்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட மாதமிருமுறை ஏடான சங்கொலியை நடத்தி வந்தவரும் திமுகவில் ஐக்கியமாகிவிட, அந்தப் பத்திரிகையும் நின்றே போனது.
சங்கொலி நடத்தப்பட் காலத்திலேயே அதை நாளிதழாக்கவும், மறுமலர்ச்சி எனும் பெயரில் ஒரு தொலைக்காட்சியும் ஆரம்பிக்க வேண்டும் என்பதும் வைகோ மற்றும் நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாக இருந்தது.
ஆனால் பல்வேறு நெருக்கடிகளில் கட்சி இருந்ததால் அவை எதுவும் நிறைவேறாமல் போயின. கடந்த முறை வாஜ்பாய் ஆட்சியின்போது இதற்கான முழு வேலைகளில் இறங்கினார் வைகோ. ஆனால் அப்போது ஜெயலலிதா அவரை பொடாவில் உள்ளே வைக்க, அந்த முயற்சியும் முடங்கிப் போனது.
இருந்தாலும் தங்களுக்கென்று தனி நாளிதழ் மற்றும் டிவி ஆரம்பிக்க வேண்டும் என்ற தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மற்றும் மாறாமலே இருந்தது.
தற்போது அந்தக் கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. பொதிகை தவிர தமிழகத்தில் இன்றுள்ள அனைத்து சேனல்களுமே ஏதாவது அரசியல் கட்சியின் சார்பு கொண்டவை என்பதால், மதிமுகவுக்கென்று தனி சேனல் இல்லாத நிலை. செய்திகளையும் முடிந்தவரை இருட்டடிப்பு செய்துவிடுகின்றனர். கூட்டணிக் கட்சிகள் என்பதற்காக அவர்களது செய்திகளைப் போட முடியாது என்று பகிரங்கமாகவே கூறிவிட்டன.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் செய்தித் தாள் மறறும் தொலைக்காட்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்குள் மதிமுகவுக்கென்று ‘மறுமலர்ச்சி டிவி’ என்ற பெயரில் சேனல் துவங்க திட்டமுள்ளதாக வைகோ அறிவிக்க, உடனே தொண்டர்கள் அந்தப் பெயர் வேண்டாம், வைகோ டிவி என்றே வைக்கலாம், செய்தித் தாளுக்கு வேண்டுமானால் மறுமலர்ச்சி என்று வைக்கலாம் என வற்புறுத்தினார்களாம்.
எனவே தொண்டர்களின் விருப்பத்துக்கிணங்க வைகோ டிவி என்ற பெயரை வைகோ ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. மறுமலர்ச்சி நாளிதழ் குறித்து தகவல் எதுவும் இல்லை
No comments:
Post a Comment