Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, April 10, 2009

'அப்பா வருவார் அரசியலுக்கு!'-சௌந்தர்யா

'மக்களுக்கு நல்லது பண்ண அப்பா நிச்சயம் வருவார்' என சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவும் சூழலில், நேற்று ரஜினியிடம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார். ஆனால் அவரது மகள் சௌந்தர்யாவோ, ரஜிநி அரசியலுக்கு வரவேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் விருப்பமும் என்று கூறியுள்ளார்.

குமுதம் பேட்டியில் சௌந்ததர்யாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

வெங்கட் பிரபுவோட இணைஞ்சிருக்கீங்க... எப்படி ஃபீல் பண்றீங்க, கோவா டு தேனி பற்றி?

வெங்கட் வெரி குட் ஃப்ரெண்ட். அவர் டீமோட ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இது பிரபுவோட ஹாட்ரிக் வெற்றிப் படமா இருக்கும். இந்தப் படத்தோட தயாரிப்பாளராக இருப்பதில் ரொம்ப சந்தோஷம்.

நீங்க தயாரிக்கும் ரஜினியோட சுல்தான் அனிமேஷன் படம் எப்ப திரைக்கு வரும்?

நல்லபடியா போயிட்டிருக்கு. அனிமேஷன் படம்னா ரொம்ப லேட் ஆகும். லாவ் ஆக்ஷன் படம்ன்றது ஈஸியா முடிச்சிடலாம். ஆக்டர்ஸ் நடிச்சா கட் சொல்லலாம், ஆக்ஷன் சொல்லலாம், ரீடேக் போகலாம். ஆனா அனிமேஷன்ல ஸ்டார்ட் டு எண்ட் வரைக்கும் டெக்னாலஜி. அப்பாவை வச்சுப் பண்றதால, பக்காவா வரணும்னு எக்ஸ்ட்ரா டயம் எடுத்துப் பண்றோம். கண்டிப்பா இந்த வருஷம் முடியறதுக்குள்ளே வந்திடும்!

கலர்புல் சிட்டியிலிருந்து கரிசல்காட்டுக்கு வந்திருக்கீங்க. எப்படி இருக்கு?

எல்லாமே நம்ம ஊருதானே (பொழச்சிக்கிருவீங்க!). தேனிக்கு இப்பதான் முதல்முறையா வர்றேன். ஆனா சினிமாவில தேனிக்கு நிறைய ஹிஸ்டரி இருக்கு. அப்பா ரொம்பப் படம் இங்கே நடிச்சிருக்கார். வெங்கட்டோட ஃபேமிலிக்கு இந்த ஊருதான். கங்கை அமரன் சார் ரொம்பப் படம் பண்ணியிருக்கார். ரொம்ப இம்பார்ட்டன்ட் சினிமா சிட்டி இது... பட்டி இல்லை!

தமிழகத்தில் சினிமா துறை சார்ந்த குடும்பங்கள் அரசியலுக்கும் வந்தாச்சு. சினிமாவுல முழுமையா வந்துட்ட நீங்க அரசியலுக்கு வர்றது எப்போ?

நான் அரசியல்ல என்ன நடக்குதுன்னு தினமும் ஃபாலோ பண்ணுவேன். எல்லா நியூஸும் தெரியும். அப்பாவோட நிறைய அரசியல் பேசியிருக்கேன். இரண்டு பேருக்கும் அரசியல்ல நிறைய ஐடியாஸ் உண்டு. கிராஃபிக்ஸ்ல இருந்து சினிமா வரைக்கும் வந்தாச்சு, கண்டிப்பா அரசியலுக்கும் வருவோம். 'அப்பா அரசியலுக்கு வரணும்னு' நாங்க சொல்றோம். அப்பா எப்பவுமே 'மக்களுக்கு நல்லது பண்ணனும், மக்கள் விரும்பறதைச் செய்யணும்'னு சொல்வார். சீக்கிரம் கிருஷ்ண பகவான் ஆசியோட நல்லது பண்ண அப்பா வருவார்!

சூப்பர் ஸ்டார் மாதிரி பொண்ணுக்கும் பஞ்ச் டயலாக் இருக்கா?

ரஜினியைப் போலவே முடியை ஸ்டைலாகக் கோதிவிட்டு பளிச்சென்று சிரிக்கிறார். "பஞ்ச் அப்பாதான் சொல்லணும்! அவரு மாதிரி வருமா? நான் வெரி சிம்பிள், இருந்தாலும் சொல்றேன்... 'பெத்தவங்க குழந்தைக்கு என்ன பண்ணனும்னு கேக்கக்கூடாது. குழந்தைங்க பெத்தவங்களுக்கு என்ன பண்றாங்கன்னு கேக்கணும்!' - இது என்னோட, எனக்குப் பிடித்த பஞ்ச் டயலாக்!

சரி... அரசியல்ல உங்களுக்குப் பிடிச்ச தலைவர் யார்?

ஓபாமா...!

No comments:

Post a Comment