Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, April 20, 2009

'ஐபோனை' விட நோக்கியாவின் 5800 xpressmusic பல வசதிகளில் சிறந்தது எப்படி..?

செல்வந்தர்களுக்காகவே மின்னணு சாதனங்களை தயாரித்து தரும் நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம்.ஆமாம் இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்கள் எல்லாமே பணக்காரர்களால் மட்டுமே வாங்கமுடியும். அந்த அளவுக்கு விலை அதிகமாக இருக்கும் . பணக்காரர்களும் தங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாக காட்டிக்கொள்ள பணத்தை தண்ணியாக செலவு செய்து இந்நிறுவன பொருள்களை வாங்கி உபயோகிப்பார்கள். இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்களில் அதிகமான வசதிகள் இருக்கிறதோ இல்லையோ? கண்டிப்பாக வடிவமைப்பு அபாரமாக இருக்கும். அதில்தான் எல்லோரும் மயங்கி விடுவார்கள். அந்த மயக்கத்தில் இல்லாத சிலவசதிகள் வாங்குவோருக்கு பெரிதாக தெரியாது.அது தான் இந்த நிறுவன வெற்றியின் ரகசியம். பொதுவாக நாம் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதனங்களில் கொடுக்கின்ற பணத்திற்கு உள்ள வசதிகள் உள்ளனவா? என்று பார்த்து வாங்க வேண்டும்.ஆனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை.





வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையை ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. கம்ப்யூட்டர், ஐபாட் போன்ற சாதனங்களை தயாரித்து வழங்கிவரும் ஆப்பிள் நிறுவனம் செல்போன் சந்தையிலும் இறங்க 'ஐபோன்' என்ற தனது தயாரிப்பை களம் இறக்கியது. 16GB நினைவகம் கொண்ட போனின் விலை 39,000 விலைக்கும், 8GB நினைவகம் கொண்ட போன் 37,000 என்ற விலைக்கும் அறிமுகப்படுத்தியது.ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் பல வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள், சிலபேர் ஷோரூம்களுக்கு முன்னாள் இரவுமுழுவதும் காத்துக்கிடந்து வாங்கினார்கள். தனது தயாரிப்புக்கு உள்ள அமோக ஆதரவை பார்த்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க இன்னொரு தந்திரம் செய்தது. அதாவது உலகம் முழுக்க ஒரு நேரத்தில் சாதனத்தை விற்பனைக்கு விடாமல் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் விற்பனை செய்தது.இதனால் அறிமுகப்படுத்தப்படாத மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்த போனை எப்படியாவது வாங்கி பயன்படுத்தி பார்த்து விடவேண்டும் என்ற பேராசையை வளர்த்துவிட்டது. இதனால் ஆப்பிள் ஐ போனின் விற்பனை சூடுபிடித்தது. ஆனால் அவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய போன் உண்மையிலேயே கொடுத்த பணத்திற்கு உரிய வசதிகளை இருக்கின்றனவா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

'ஐபோன்' ஒரு கையால் தொட்டு இயக்கப்படும் (touch screen) போன் என்பதால் அந்த நிறுவனத்தோடு போட்டிபோட மற்ற நிறுவனங்களும் தங்கள் சார்பில் தொட்டு இயக்கும் போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய 5800xpressmusic என்ற மாடலுக்கும், ஐபோனுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. செல்போன் விற்பனையில் தாத்தாவான நோக்கியா நிறுவனம் தனது மாடலில் ஆப்பிள் ஐபோனால் தரமுடியாத பலவசதிகளை உட்புகுத்தி அறிமுகப்படுத்தியது.அதில்முக்கியமானது போனின் விலை, ஆமாம் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகளுடன் நோக்கியாவின் 5800 xpressmusic வெறும் 18,850 க்கே விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் ஐபோனில் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக இல்லை என்று சொல்லமுடியும். இங்கே ஐபோனுக்கும் நோக்கியா 5800xpressmusic போனுக்கும் உள்ள வசதிகளின் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளேன். படித்துவிட்டு நீங்களே எந்த போனை வாங்கலாம் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.

ஐபோனுக்கும், நோக்கியா 5800 xpressmusic போனுக்கும்
உள்ள வசதி வித்தியாசங்கள் :
1. 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற போன்களில் கூட F.M வசதி உள்ளது.ஆனால் ஐபோனில் இல்லை.நோக்கியா 5800 மாடலில் RDS வசதியுடன் F.M RADIO உள்ளது.
2. ஐபோனில் BLUTOOTH வசதி உள்ளது ஆனால்அதன்மூலம் பாடல்கள்,வீடியோ, ரிங்டோன் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.ஆனால் நோக்கியாவில் இது தண்ணி பட்டபாடு .
3. ஐபோனில் கேமரா வசதி உள்ளது.ஆனால் அதில் VIDEO RECORDING செய்ய முடியாது .(மூன்றாம் தரப்பு நிறுவனம் வழங்கும் அப்ளிகேஷனை பயன்படுத்திதான் இந்த வசதியை பெறமுடியும். நோக்கியாவில் இந்த வசதி இயற்கையாகவே உள்ளது.
4.நோக்கியாவில் எம்.பி 3 பாடல்களை,வீடியோ காட்சிகளை ரிங்டோனாக பயன்படுத்த முடியும், ஆனால் ஐபோனில் முன்பே பதியப்பட்ட ரிங்டோன்களை மட்டுமே பயன்படுத்தமுடியும்.

5.நோக்கியாவில் நீங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் பேசலாம், அதன் STANDBY நேரம் 406 மணிநேரம், பாட்டரியை கழற்றி மாட்ட முடியும், ஆனால் ஐபோனில் தொடர்ந்து 5 மணிநேரம் மட்டுமே பேசமுடியும், அதன் STANDBY நேரம் 300 மணி நேரம் மட்டுமே, பாட்டரியை கழற்ற முடியாது.

6. நோக்கியாவில் ஸ்பீக்கர் ஒலி அளவு மிகச்சிறப்பாக உள்ளது. ஆனால் ஐபோனில் குறைந்த அளவே கேட்கிறது.எம்.பி 3 பாடல்களை ஹெட் போன் இணைத்தால் மட்டுமே நல்ல ஒலி அளவில் கேட்க முடியும்.
7. நோக்கியாவில் DUAL LED FLASH' உள்ளது , ஆனால் ஆப்பிள் ஐபோனில் FLASH கிடையாது.

8.ஐபோனின் எடை 133 கிராம், நோக்கியாவின் எடை 109 கிராம்

10. நோக்கியாவில் 3.2 MEGAPIXELS கேமரா உள்ளது. ஐபோனில் 2MEGAPIXELS மட்டுமே.

11.ஐபோனின் திரை அளவு 3.5" INCH, நோக்கியாவின் திரை அளவு 3.2" INCH நோக்கியாவின் SCREEN RESOLUTION 640*360 என்ற அளவில் உள்ளது, ஆனால் ஐபோனில் SCREE RESOLUTION 480*320 மட்டுமே

12.நோக்கியாவில் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளது,ஐபோனில் இந்த வசதி இல்லை , 3G வசதி இரண்டு போன்களிலும் உள்ளது.நோக்கியாவை நம் வீட்டு 'டிவி' யுடன் இணைக்கமுடியும், ஐபோனில் அந்தவசதி இல்லை,அதே போல் ஐபோனில் VOICE DIALING வசதியும் இல்லை.
13. ஆப்பிள் ஐபோனில் பாடல்களை பணம் கொடுத்து மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும், ஆனால் நோக்கியாவில் ஒரு வருடத்திற்கு இலவசமாக பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

14.நோக்கியா சிம்பியன் O.S வகையை சார்ந்தது, இதன் மூலம் ஏராளமான மேம்படுத்தப்பட்ட வசதிகளை தொடர்ந்து பெறமுடியும், ஆனால் ஐபோன் அதன் தனிப்பட்ட MAC O.S வகையை சார்ந்தது,இதில் பெரிய அளவில் வசதிகளைப் பெற முடியாது.
15. எல்லா வற்றுக்கும் மேலாக நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் விலை இந்தியாவில் 18,850 மட்டுமே, ஆனால் ஐபோனின் விலை இந்தியாவில் 30,000 ரூபாய்

இப்போது நீங்களே சொல்லுங்கள் கொடுக்கிற பணத்திற்கு எந்த போன் சிறந்தது ?

No comments:

Post a Comment