ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் நடித்த சிறுமி ரூபினா, சிறுவன் அசாருதீன் இஸ்மாயில் ஆகியோருக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் வீட்டு வசதி நிறுவனம் இரு வீடுகளை ஒதுக்கியுள்ளது.
7 ஆஸ்கர் விருதுகளைக் குவித்த 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் சிறுமி ரூபினா, அசாருதீன் இஸ்மாயில். ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள். ரூபினா தந்தை ரபீக் குரேசி கார் பெயிண்டராக பணியாற்றுகிறார். மும்பை குடிசை பகுதியில் தான் இரு குழந்தைகளின் குடும்பத்தினரும் வசிக்கின்றனர். இவர்களுக்குச் சொந்த வீடு இல்லை.
இவர்கள் கஷ்டத்தைப் பார்த்து பலரும் உதவ முன் வந்துள்ளனர். சிலர் கல்விச் செலவை ஏற்றார்கள். வசதி படைத்தவர்கள் பண உதவியும் செய்தனர்.
இரு குழந்தைகளுக்கும் இலவச வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இந்த வீடுகளை தனியார் வீடு கட்டும் நிறுவனமொன்று ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு வீட்டின் விலை தலா ரூ.10 லட்சம். அடுக்குமாடி குடியிருப்பில் இவை வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment