காணாமல் போனதாக பரபரப்பேற்படுத்திய துணை நடிகை பூஜா புதுக்கோட்டையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலை போலீசாரிடம் சரணடைந்த பூஜாவின் காதலன் ஜெகன் தெரிவித்துள்ளார்.
நடிகை பூஜா ஒரு துணை நடிகை. சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்த இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது.
திருமணத்துக்கு முன்பே நீலாங்கரையை சேர்ந்த ஜெகன் (26) என்ற ஆட்டோ டிரைவரை தீவிரமாகக் காதிலித்து வந்திருக்கிறார். இந்த உண்மை தெரிந்ததால், கணவர் அவரைப் பிரிந்து சென்றுவிட, தாய் தந்தையுடன் வசித்து வந்த பூஜா, மீண்டும் தனது காதலனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாராம்.
இந் நிலையில் கடந்த வாரம், படப்பிடிப்புக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பூஜா திரும்ப வீட்டுக்கு வரவில்லை. காதலன் ஜெகனையும் காணவில்லை. எனவே இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார் பூஜாவின் தாய் காமாட்சி.
வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். இந்தத் தகவல் பரபரப்பான செய்தியாகப் பரவவே, ஜெகன் மட்டும் போலீசில் சரணடைந்தார்.
போலீசாரிடம் அவர், "எனக்கு திருமணம் ஆகி விட்டது. நான் வீட்டில் இருந்தபோது, பூஜா வந்து, தன்னுடன் ஒரு இடத்துக்கு வருமாறு அழைத்தார். என்னை புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றார்.
அங்கு நண்பரின் உறவினர் வீட்டில்தான் தங்கி இருந்தோம். போலீசார் தேடுவதை அறிந்து நான் மட்டும் இங்கு வந்துவிட்டேன், என்றார் ஜெகன். பூஜா தங்கியிருக்கும் விலாசத்தையும் போலீசாரிடம் கொடுத்தார்.
இப்போது பூஜாவை அழைத்து வர போலீசார் புதுக்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.
No comments:
Post a Comment