Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, February 27, 2009

'அப்படின்னா நான் கிளம்புறேன்...' -ரஹ்மானின் பாசாங்கும், பிரஸ்மீட்டும்!ஆஸ்கர் விருதுடன் சென்னை வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்தார். சலசலப்பும், கலகலப்புமாக நடந்தேறியது இந்த சந்திப்பு. ஹாலுக்குள் நுழைந்த ரஹ்மானை வழக்கத்திற்கு மாறாக கைதட்டி வரவேற்றார்கள் அத்தனை பத்திரிகையாளர்களும். இந்த சந்தர்ப்பத்திற்காகவே பல யுகங்களாக காத்திருந்தது போல அவரை சூழ்ந்து கொண்டார்கள் புகைப்படக்காரர்கள்.

'நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன். இங்கேதான் இருப்பேன். நிதானமாக எடுத்துக்கோங்க' என்று அவரே கேட்டுக் கொண்டும், யாரும் விலகுவதாக இல்லை. சுமார் அரை மணி நேரம் ஒரே தள்ளு முள்ளு. ஆனாலும் தனது புன்னகையை கொஞ்சமும் விலக்கிக் கொள்ளாத ரஹ்மான் 'மும்பையிலே பேட்ச் பேட்ச்சா எடுப்பாங்க. அதே மாதிரி நீங்களும் எடுங்களேன்' என்றெல்லாம் யோசனை சொன்னார். ம்ஹ¨ம், ஒருவரும் கேட்பதாக இல்லை. 'அப்படின்னா நான் போறேன்' என்று கோபித்துக் கொண்டு போவதுபோல பாசாங்கு காட்டினார் ரஹ்மான். அப்போதும் யாரும் அசருவதாக இல்லை. இப்படியே கழிந்தது அரை மணி நேரம். இறுதியாக பேச ஆரம்பித்தார் இசைப்புயல்.

வேடிக்கை என்னவென்றால், இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு ஹாலில் பிரிண்ட்டிங் மீடியாக்களும், இன்னொரு ஹாலில் டி.வி இன்டர்நெட், எஃப்எம் போன்ற எலக்ட்ரானிக் மீடியாக்களும்! முதல் சந்திப்பு தள்ளுமுள்ளு என்றால், இந்த எலக்ட்ரானிக் பிரிவு, அநியாயத்துக்கு டீசண்ட்! எந்தளவுக்கு என்றால், 'ரொம்ப டீசன்ட்டா இருக்காங்களே' என்று ரஹ்மானே வியக்கிற அளவுக்கு!

இனி கேள்வி பதில்...

ஆஸ்கர் விருதை வென்றதற்காக உங்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு எம்.பி. பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வீர்களா?

அந்த மாதிரி பதவிகளை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.

தமிழ், இந்தி. ஆங்கில மொழிகளில் இசையமைக்கும்போது எந்த மொழி படம் உங்களுக்கு சுதந்திரமாக இருந்தது?

என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருப்பதாக உணர்ந்தேன்.

ஸ்லம்டாக் மில்லியனர் ஆஸ்கர் விருது பெறும் என்று எதிர்பார்த்தீர்களா?

அந்த படத்தை முதலில் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. நல்ல கதையம்சம் இருப்பதாக நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். அதனால் அந்த படத்திற்கு முழுமையாக ஈடுபாட்டுடன் இசையமைத்தேன். இத்தனைக்கும் இசைக்காக அவர்கள் ஒதுக்கியிருந்த பட்ஜெட் மிகவும் குறைவு. அதற்காக நான் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருந்தால், இந்த ஆஸ்கரை இழந்திருப்பேன்.

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் இந்த இரண்டு பட்டங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

இரண்டுமே பிடிக்கலே...

வைரமுத்து எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எப்போ இசையமைக்க போறீங்க?

அவரு எழுதி கொடுத்ததும்! (சிரிப்பு)

உங்கள் இசையில் சிம்பொனி எப்போது வரும்?

அதுக்கு இன்னும் டைம் ஆகும்.

ஆஸ்கருக்கு அடுத்து உங்கள் முயற்சி?

திருக்குறளுக்கும், குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களுக்கும் இசையமைக்க போகிறேன்.

தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைப்பீர்களா?

நல்ல படங்களாக இருந்தால் இசையமைப்பேன்.

உங்களை நடிக்க அழைத்தால் ஹீரேவாக நடிப்பீர்களா?

எனக்கு நடிக்க நேரம் இல்லை.

இளையராஜா உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

யுவன்சங்கர் ராஜா எனக்கு ஈ-மெயிலில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அப்பாவும் குடும்பமும் வாழ்த்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

உங்களை ஓபாமா பார்க்க விரும்பினாராமே?

தெரியாது.

இலங்கை விஷயத்திலே நீங்கள் பேசினால் கவனிக்கப்படும். அங்கே அமைதி திரும்ப வேண்டும்னு பேசுவீங்களா?

போர் நடக்கணும்னு யாருதான் விரும்புவாங்க. அங்கே அமைதி திரும்பணும். இலங்கை தமிழர்களுக்காக நான் 'வெள்ளை பூக்கள்' என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைச்சிருக்கேன். அங்கு அமைதி திரும்பனும்னு பிரார்த்தனை செய்கிறேன்.

தமிழ் திரையுலகம் உங்களுக்கு பாராட்டு விழா நடத்தனும்னு முடிவு செஞ்சுருக்கு. எப்போ தேதி கொடுப்பீங்க?

ரொம்ப சீக்கிரம்.

தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்குமா?

அங்கேயுள்ள டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் படத்தை வாங்கினா கிடைக்கும்.

ஸ்லம்டாக் படப்பிடிப்பு நடத்தப்பட்ட தாராவிக்கு ஏதாவது செய்ய விரும்புறீங்களா?

இப்பவே அது டூரிஸ்ட் ஸ்பாட்டா ஆயிடுச்சு. உலகத்தின் பார்வை இப்போ தாராவியில் இருக்கு.

எல்லா கேள்விகளுக்கும் இப்படி நறுக்கு தெறித்தார்போல சுவையாகவும், ஜாலியாகவும் பதில் சொன்ன ரஹ்மான், பலத்த பாதுகாப்புடன் வீடு திரும்பினார். நள்ளிரவு வரைக்கும் கூட அவரது வீட்டிற்கு சென்று, பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

Thursday, February 26, 2009

ரஹ்மான் முதல் தேசிய விருது பெற்ற கதை!


ப்பேற்பட்ட சிறந்த இயக்குநர் அல்லது படைப்பாளியாக இருந்தாலும் அவர்களின் கயமைத் தனத்தை ஒரு அளவுக்கு மேல் மறைக்கவே முடியாமல் போகிறது. சமயத்தில் அவர்களாகவே உளறிக் கொட்டி மாட்டிக் கொள்வதும் உண்டு. அதில் லேட்டஸ்ட் வரவு பாலு மகேந்திரா.

ரஹ்மான் தனது முதல் தேசிய விருதினைப் பெற்றதன் பின்னணிக் கதை ஒன்றை, நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார் பாலு மகேந்திரா.

17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அதை வெளிப்படுத்தினார். ஆனால் அதைக் கேட்ட பிறகு அந்த மனிதர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயே போய்விட்டது.

இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த போது பாலுமகேந்திராதான் தேசிய விருதுக் குழு தலைவரும் கூட. அப்போது சிறந்த இசைக்குரிய பிரிவில் இளையராஜா இசையில் கமல் நடித்த தேவர் மகனும், ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ரோஜாவும் போட்டியிட்டன.

இதில் ரோஜாவின் இசைக்கு விருது கொடுத்தார்கள். ஆனால் அப்படி விருது தரும்முன் நடந்த அரசியலை நேற்றுதான் பாலுமகேந்திரா வெளிப்படுத்தினார். அதாவது ரஹ்மான் உயர்வுக்கு நானும் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதை நிலை நிறுத்த அப்படிச்சொன்னாரோ என்னமோ… ஆனால் அதைக் கேட்ட பிறகு… சீ என்றாகிவிட்டது.

சிறந்த இசைக்கான விருது பெற இசையைத் தாண்டி வேறு என்னவெல்லாம் தகுதியாக உள்ளன பாருங்கள்!

எது சிறந்த இசை?

ஒரு சமூகத்தின், பிராந்தியத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பலிப்பதே நல்ல இசை. அது எந்த வயதுக்காரனிடமிருந்து வந்திருந்தால் என்ன?

அந்த வகையில் தேவர் மகன் இசை, வேறு யாருடைய அல்லது எந்தப் படத்தினுடைய இசையுடனும் ஒப்பிட முடியாதது. அத்தனைச் சிறப்பு அந்தப் படத்தின் பின்னணி இசைக்கு உண்டு. தேவர் மகனில் ராஜாவின் பின்னணி இசையை இப்போது கேட்டாலும் கண்முன் படக் காட்சிகள் அப்படியே அழகழகாக விரியும்.

ஆனால் ரோஜாவைப் பொறுத்தவரை, பின்னணி இசை அத்தனைப் பிரமாதமில்லை. பாடல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு.

ஆனால் அந்தப் படத்துக்குத்தான் விருது கொடுக்க சிபாரிசு செய்துள்ளார் பாலுமகேந்திரா. காரணம், ‘சின்ன பையன் என்பதால் பரிந்துரைத்தேன்’ என்று இப்போது கூறியுள்ளார்.

இசையின் ஜீவன், ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் அந்த இசை உயிரூட்டுகிறது? அந்த இசை படம் பார்ப்பவருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்ன… என்பதைப் பார்த்துதான் ஒரு படத்துக்கு விருது தரப்பட வேண்டுமே தவிர, இவர் இளைஞர், அவருக்கு விருது கொடுத்துவிடலாம் என்று கொடுப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அதுவும் விருதுக் குழுவின் தலைவரே இதைச் செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியைத் தந்தது.

இந்த தேசிய விருதினை தவற விட்டதால் ராஜாவின் மதிப்போ தரமோ குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் பெற்ற விருதுகள் மற்றும் வாங்கும் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு இசைக் கலைஞரை மதிப்பிடுபவர்கள்தானே இங்கு அதிகம்? ரஹ்மான் பெற்ற இரண்டு ஆஸ்கர்கள்தானே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்துள்ளது நம்மையெலலாம்.

அப்புறம் எதற்கு போட்டி, ஓட்டு? இசையமைப்பாளர்களின் வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விருதுகளை வழங்கிவிடலாமே! அப்படியெனில் இத்தனை ஆண்டுகளாக திறமைகள் ஓரங்கட்டப்பட்டு, லாபி அல்லது தனி நபர்களது விருப்பத்தின் அடிப்படையில்தான் விருதுகளை வழங்குகிறார்களா?

தேவர் மகன் என்ற அந்த நல்ல படத்துக்கு, பல புதிய பரிமாணங்களைத் தந்தது ராஜாவின் இசை. தென் மாவட்ட மக்களின் ஆன்மாவை அப்படியெ வெளிக்கொணர்ந்த காட்சியமைப்புகள் நிறைந்த அந்தப்படத்தை, ராஜாவின் இசை தவிர்த்துப் பார்த்தால் ரசிக்க முடியாது. தேவர் மகனோடு ஒப்பிடுகையில் ரோஜாவின் இசை மிகச் சாதாரணமான ஒன்று (அந்த விருது தனக்கு மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையுமே ஏற்படுத்தியது என ரஹ்மான் கூறியுள்ளதை நினைவுகூரத்தக்கது. )

ஆனால் அந்தப் படம் சிறந்த இசைக்கான தேசிய விருது பெறுவதை, ரஹ்மானுக்காக தடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

என்னதான் செய்தார் அப்படி?

இதோ அவரே நேற்று வெளியிட்ட ரகசியம்!

இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.

பாலுமகேந்திரா மைக்கப் பிடித்தார்.

“நானும் ரஹ்மானும் இணைந்து பணியாற்றாவிட்டாலும், ரஹ்மானின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு என்னாலான உதவியைச் செய்திருக்கிறேன் என்ற உரிமையில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எங்கும் இது பற்றி நான் சொன்னதில்லை.

ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும், இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருதுக் கமிட்டிக்கு வந்தன. நான்தான் விருதுக் குழுவின் தலைவர் அப்போது. இரண்டு படங்களும் சிறந்த இசைக்கான பிரிவில் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம் நிலையில் இருந்தன. நான் என்னுடைய ஓட்டைப் போடாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசியில் நான் ஓட்டுப் போட்டே தீர வேண்டிய நிர்ப்பந்தம்.

ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன்.

தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன். அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்…”, என்றார் பாலு மகேந்திரா.

இதை என்னவென்று சொல்வது?

ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!

நிச்சயம் ஆஸ்கர் வென்ற ரஹ்மானை விமர்சிக்கும் நோக்கத்திலல்ல இதைக் குறிப்பிடுவது. அவர் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்றே நாமும் பிரார்த்தித்தோம்.

ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடவே இதை எழுதுகிறோம்.

மார்ச் 23 -ல் நானோ அறிமுகம்!

இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டாடாவின் மக்கள் கார் நானோ வருகிற மார்ச் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்மாக தகவல் வெளியிட்டுள்ளது டாடா நிறுவனம்.

மும்பையில் நடைபெறும் விழாவில் இந்தக் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா. ஆனால் அறிமுகமாகும் தினத்தன்று இந்தக் கார்கள் விற்பனைக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ஏப்ரல் முதல்வாரத்தில் அனைத்து ஷோரூம்களிலும் பார்வைக்கு வைக்கப்படும் நானோ, வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலிருந்து புக்கிங் செய்யப்படும்.

கார் டெலிவரி எப்போது என்பதை புக்கிங் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காரின் ஷோரூம் விலை ரூ.1 லட்சம் என்று கூறப்பட்டாலும், வரிகள் உள்பட அதன் உண்மையான விலை என்னவென்பதை மார்ச் 23 அன்றுதான் சொல்வார்களாம்.

Wednesday, February 25, 2009

முதல் டி20 : இந்தியாவை வென்றது நியூஸிலாந்து


இந்தியாவுக்கு எதிரான முதல் டிவென்டி 20 கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து எளிதில் வென்றது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிராக இரண்டு டிவென்டி 20, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

கிறிஸ்ட்சர்சில் உள்ள ஏ.எம்.ஐ. மைதானத்தில் இன்று நடந்து முடிந்த போட்டியில், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 18.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியின் மெக்கலம் ஆட்டமிழக்காமல் 56 ரன்களையும், குப்டில் 41 ரன்களையும் எடுத்தனர். டெய்லர் 31 ரன்களையும், ஓரம் ஆட்டமிழக்காமல் 29 ரன்களையும் சேர்த்தனர். துவக்க ஆட்டக்கரர் ரைடர் மட்டும் ஒரு ரன்னையே எடுத்தார்.

இந்தியா தரப்பில் ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ராய்னா 61 ரன்களை எடுத்தார். சேவாக் 26 ரன்களையும், ஹர்பஜன் 21 ரன்களையும் எடுத்தனர். யூசுப் பதான் 20 ரன்களையும், இர்பான் பதான் 12 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களையே எடுத்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் ஒ பிரியென், பட்லெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், செளதி, விட்டொரி, மெக்கலம் மற்றும் ரைடர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் மெக்கலம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tuesday, February 24, 2009

ஓய்வு பெறுகிறார் ஸ்டீவ் பக்னர்

ஐ.சி.சி. உயர் மட்டக் குழுவில் உள்ள மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த நடுவர் மேற்கிந்திய தீவுதென் ஆப்பிரிக்கா ஆஸ்ட்ரேலிய தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், மேற்கிந்திய தீவுகளுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே பார்படோஸில் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் சர்வதேசப்போட்டியுடன் ஒரு தினப்போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் நடுவர் பொறுப்பை ஏற்று பணியாற்றத் தொடங்கிய ஸ்டீவ் பக்னர் இது வரை 126 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்து சாதனை படைத்துள்ளார். 179 ஒரு தின போட்டிகளிலும் இவர் நடுவராக இருந்துள்ளார்.

1992 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முதல் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை 5 உலகக் கோப்பைகளில் இறுதிப் போட்டியில் நடுவர் பொறுப்பு வகித்து சாதனை படைத்துள்ளார் பக்னர்.

பந்து வீச்சாளர்கள் உரத்த குரலில் முறையீடு செய்யும் போது நாட் அவுட்டாக இருந்தால் உடனேயே இல்லை என்று தலையாட்டி விடும் இவர் அவுட் என்று தீர்மானித்தால் யோசித்து மெதுவாகவே அவுட் கொடுப்பார். பல பேட்ஸ்மென்கள் இனிமேல் இவர் நமக்கு அவுட் கொடுக்க மாட்டார் என்று நினைத்த தருணத்தில் கடைசி நேரத்தில் கையை உயர்த்தி வெறுப்பேற்றியுள்ளார்.

கடந்த முறை இந்திய அணி ஆஸ்ட்ரேலிய சென்றிருந்த போது சிட்னியில் நடைபெற்ற மோசடி டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அபாண்ட வெற்றிக்கு இவரது மோசடி தீர்ப்புகள் உதவின. ஆண்ட்ரூ சைமன்ட்சிற்கு மட்டும் சுமார் 6 முறை அவுட் மறுக்கப்பட்டது.

டெஸ்டை மோசடி வெற்றியிலிருந்து காக்க ஆடிக் கொண்டிருந்த திராவிட் உள்ளிட்ட இந்திய வீரரகளுக்கு கேட்டவுடன் அவுட் என்று இவரது நடுவர் திறமையின் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்து கடைசியில் இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கைக்கேற்ப இவர் அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் இவரது நடுவர் பணி சிறப்பாகவே அமைந்தது என்று கூறலாம்.

ஓய்வு பெற்றவுடன் மேற்கிந்திய தீவுகள் வாரியத்துடன் இணைந்து நடுவர் தரத்தை உயர்த்தப் பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

Some Actress in Oscar
Monday, February 23, 2009

KEY OSCAR WINNERS


Best film Slumdog Millionaire
Best actor Sean Penn
Best actress Kate Winslet
Best supporting actor Heath Ledger
Best supporting actress Penelope Cruz
Best director Danny Boyle, Slumdog Millionaire

THE BIG PICTURE