பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன், நடிகைகள் கேஆர் விஜயா மற்றும் எம் என் ராஜத்துக்கு சத்யபாமா பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் தலைமை தாங்கினார்.
அரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மூல்சந்த் சர்மா மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 2,500 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர்.
23 பேர் முனைவர் (பி.எச்டி.) பட்டம் பெற்றனர்.
கலைத் துறையில் சாதனைகள் புரிந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகைகள் கே.ஆர்.விஜயா, எம்.என்.ராஜம், என்.பி.சி.ஐ.எல். நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கே.ஜெயின், 'இஸ்ரோ' பேராசிரியர் பாஸ்கர நாராயனா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார் பல்கலைக் கழக வேந்தர் ஜேப்பியார்.
No comments:
Post a Comment