Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, April 3, 2009

நடிகை ரம்யா தேர்தலில் போட்டி?

பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ரம்யா காங்கிரஸ் சார்பில் மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

தமிழில் குத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாஸ். தமிழ், கன்னடம், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மண்டியா தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் அம்பரீஷ். அவரையே இந்த முறையும் போட்டியிடுமாறு காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், அவர் பாஜகவுக்குத் தாவ திட்டமிட்டுள்ளதால் பதில் சொல்லாமல் உள்ளார்.

அம்பரீஷ் போட்டியிடுவார் என்று காங்கிரசும் நம் கட்சியில் இணைந்து போட்டியிடுவார் என பாஜகவும் காத்துக் கொண்டுள்ளன. இதனால் இந்தத் தொகுதிக்கு இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

தேவெ கெளடா சார்ந்த ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவரான அம்பரீஷ் சமீபகாலமாகவே காங்கிரசில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். மண்டியா தொகுதியில் ஒக்கலிகா சமூகத்தினரே அதிகம். இதனால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவரையே எல்லா கட்சிகளும் வாக்காளர்களை நிறுத்தும்.

Divya


இம்முறை அம்பரீஷ் அமைதி காப்பதால் இந்த சீட்டைப் பிடிக்க காங்கிரசில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் நெருங்கிய உறவினரான ரஞ்சிதா தனக்கு போட்டியிட சீட் கேட்டு கர்நாடக காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டேவை அணுகியுள்ளார்.

இந்த ரஞ்சிதா வேறு யாருமல்ல. நடிகை ரம்யாவின் தாயார் தான்.

சீட் கேட்டு வந்த ரஞ்சிதாவிடம் உங்கள் மகள் ரம்யாவை தேர்தலில் நிறுத்தலாமே என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். பாஜக சார்பில் அம்பரீஷ் போட்டியிட்டால் அவரது சினிமா பலத்தை முறியடிக்க நடிகையையே நிறுத்தலாமே என்பது காங்கிரஸ் தலைவர்களி்ன் ஐடியா.

இதற்கு ரஞ்சிதா ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது. தனது மகளுக்கு சீட் தந்தால் அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

சோனியாவுக்கு நெருக்கமான எஸ்.எம்.கிருஷ்ணாவும் ஓ.கே. சொல்லிவிட்டால் ரம்யாவுக்கு சீட் கிடைத்துவிடும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment