Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, April 1, 2009

அக்டோபரில் ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா திருமணம்!

நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் அவரது நீண்ட நாள் காதலர் ராஜ் குந்த்ராவுக்கும் வரும் அக்டோபரில் திருமணம் நடக்கிறது.

பாலிவுட் நாயகியாக மட்டுமே இருந்த ஷில்பா, பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் சர்வதேச புகழ் பெற்றார்.

இவரும் ஏற்கெனவே கல்யாணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தையுடன் உள்ள தொழிலதிபர் ராஜ் குந்த்ராவும் நீண்ட நாளாக காதலித்து வருகிறார்கள்.

இந்தக் காதல் கல்யாணத்தில் முடிய வேண்டும் என விரும்புகிறார் ஷில்பா. அதற்கு ராஜ் குந்த்ராவின் முதல் மனைவி கவிதா தடையாக இருந்ததால், அவரை விவாகரத்து செய்ய கடந்த ஆண்டே வழக்குத் தொடர்ந்தார். பின்னர் இருவரும் மனமொத்து பிரிவதாக கோர்ட்டில் எழுதிக் கொடுத்துவிட்டனர். இருவரும் சட்டப்படி பிரிந்தே வாழ்கிறார்கள்.

இப்போது எந்த தடையும் இல்லாததால் ஷில்பாவை மணமுடிக்கப் போகிறாராம். திருமணத்துக்குப் பின் இனிமையாக நாட்களைக் கழிக்க பிரிட்டனில் 7 படுக்கை அறைகள் கொண்ட பிரமாண்ட மாளிகை ஒன்றையும் வாங்கியுள்ளனர் ஷில்பாவும் ராஜ் குந்த்ராவும். இதனை ஷில்பாவின் பெயரிலேயே ராஜ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கல்யாணமானவரைக் காதலிப்பது தவறில்லையா என்றால், 'அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லை. முறைப்படிதான் எங்கள் திருமணம் நடக்கப்போகிறது. அவரது முந்தைய வாழ்க்கைப் பற்றிய தகவல்கள், கவலைகள் எனக்கு தேவையில்லாத ஒன்று. அதையெல்லாம் நல்லவிதமாக செட்டில் செய்துவிட்டுத்தான், அவர் என்னைத் திருமணம் செய்து கொள்கிறார்' என்று ஷில்பா ஏற்கெனவே கூறியிருந்தார்.

இப்போது திருமணம் நடப்பதை உறுதி செய்து ஷில்பா கூறியிருப்பதாவது:

"என்னுடைய பெற்றோர் திருமணமாகி 35 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த மாதிரி தாம்பத்யம் அமைவதையே விரும்புகிறேன்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். எனது திருமணமும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்பட்டிருக்கும். இந்திய கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டு சிறந்த மனைவியாக இருப்பேன்" என்கிறார் ஷில்பா.

இந்த திருமணத்தை இனியும் தள்ளிப் போடாமல், வரும் அக்டோபருக்குள் முடித்துவிட விரும்புவதாக ராஜ் குந்த்ராவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இருவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் உரிய முறைப்படி திருமணம் நடக்கும் என ஷில்பாவின் பெற்றோரும் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment