Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, April 20, 2009

தனது 'பிரபலமான இணையதளத்தை' மூடப்போகும் நோக்கியா நிறுவனம்?



செல்போன் விற்பனையில் முன்னணி வகித்து வரும் பிரபல நோக்கியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக இருக்கும் "www.mosh.nokia.com" என்ற இணையதளத்தை விரைவில் இழுத்து மூடப்போகிறது. அப்படி என்ன அந்த இணையதளத்தில் இருக்கிறது. என்று நீங்கள் கேட்கலாம், தொடர்ந்து படியுங்கள் ...

பொதுவாகவே செல்போன் (os ) என்று சொல்லப்படுகின்ற சாப்ட்வேர் தொகுப்புகளில் எனக்கு தெரிந்தவரையில் இதுவரை ஐந்து வகைகள் உள்ளன. 1. java 2.symbian 3.windows 4.mac(apple iphone) 5.antroid (google phone) இதில் பெரும்பாலான செல்போன்கள் ஜாவா வகையை சார்ந்தவைகள்தான், விண்டோஸ் ஒ.எஸ் தொகுப்பை கொண்ட போன்களை HTC,ASUS,IPOD,IMATE ACER போன்ற நிறுவனங்கள் வெளியிடுகின்றன. பெரும்பாலும் தொழிலதிபர்கள் இந்தவகை போன்களை பயன்படுத்துவார்கள். இந்த சாப்ட்வேர் தொகுப்பை பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான "MICROSOFT" நிறுவனம் வெளியிடுகிறது. அதே போல் தான் சிம்பியன் ஒ.எஸ் தொகுப்பை கொண்ட செல்போன்களை நோக்கியா நிறுவனம் அதிக அளவில் வெளியிடுகிறது.(சிம்பையனுக்கு சொந்தக்காரரும் நோக்கியா தான்.) மற்ற ஒ.எஸ் தொகுப்பை காட்டிலும் சிம்பியன் வசதி கொண்ட போன் களில் மூன்றாம் தரப்பு சாப்ட்வேர்கள் என்று சொல்லப்படுகின்ற (THIRD PARTY SOFTWARE) களை நிறைய வைத்து பயன்படுத்தலாம். நாம் வாங்குகிற நோக்கியா போன் களில் முன்பே பதியப்பட்டு தருகிற அப்ளிகேஷன்கள் ரொம்பவும் குறைவுதான்.ஏனென்றால் நம்மோடு பேசுபரின் குரலை அவருக்கு தெரியாமலேயே பதிவு செய்வது , வைரஸ்களிலிருந்து போன்களை பாதுகாப்பது, இன்டர்நெட் ரேடியோக்களை மொபைலில் கேட்பது, ஈமெயில் அக்கவுண்டுகளை மொபைலிலேயே கையாளும் வசதி போன்ற அப்ளிகேஷன்களை மூன்றாம் தர நிறுவனங்கள் தயாரித்து தருகின்றன. இதில் சில நிறுவனங்கள் இலவசமாக தரும்,சில நிறுவனங்கள் பணத்திற்கு விற்பார்கள். இந்த இலவச அப்ளிகேஷன்களை(ringtones,games,wallpaers,themes,
applications,screensavers,videos etc...) தனது வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள வசதியாக 'MOSH' இணையதளத்தை நோக்கியா ஆரம்பித்தது.இந்த இணையதளம் ஒரு 'ஓப்பன் சோர்ஸ்'என்று சொல்லப்படும் திறந்து விடப்பட்ட இணையதளமாகும்.அதாவது யார் வேண்டுமானாலும் இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தங்களிடத்திலுள்ள அப்ளிகேஷன்களை அப்லோடு செய்து மற்றவர்களும் அதை பயன்படுத்த அனுமதிக்கலாம். உள்ளே சென்றவுடன் (Register) பதிவு செய்ய சொன்னாலும், பதிவு செய்யாமலேயே எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் இங்கு தான் வந்தது பிரச்சனை! இலவசங்களை தவிர கட்டணம் செலுத்தி வாங்க வேண்டிய அப்ளிகேஷன்களையும் CRACK KEYGEN (திருட்டு சாவி) கொடுத்து பலரும் இதில் வெளியிட்டார்கள். இதனால் அந்த நிறுவனங்களில் வருவாய் வெகுவாக குறைந்தது. அவர்கள் நோக்கியா நிறுவனத்திடம் முறையிட வேறு வழியின்றி விரைவில் தனது MOSH இணையதளத்தை மூடப்போவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.அதனால் உங்கள் மொபைலுக்கு தேவையான வற்றை இப்போதே நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஆனாலும் அந்த குறையை போக்க OVI STORE என்ற பெயரில் 'www.ovi.com' என்ற இணையதளத்தை நோக்கியா நிறுவனம் துவங்கியுள்ளது. ஆனால் இதில் இலவசங்களை மட்டுமே இலவசமாக பெறமுடியும், கட்டண அப்ளிகேஷன்களை கட்டணம் செலுத்தி தான் தரவிறக்கம் செய்ய முடியும்.மேலும் விபரங்களுக்கு www.mosh.nokia.com என்ற இணையதளத்தை நீங்கள் பார்க்கலாம்.

No comments:

Post a Comment