தனது கலர்புல் தேர்தல் பிரச்சாரத்தை கர்நாடகாவில் நடத்தி வரும் நடிகை லட்சுமிராய், அடுத்து தமிழகத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுக்க சூறாவளியாய் தனது பிரச்சாரத்தை நிகழ்த்தப் போகிறாராம்.
வெள்ளித்திரை, தாம்தூம் போன்ற தமிழ் படங்களிலும், பல கன்னட, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்தவர். இந்தப் படங்களில் நடித்து சம்பாதித்த பெயரை விட, கிரிக்கெட் வீரர் தோணியுடன் கிசுகிசுக்கப்பட்டதில் தேசிய நடிகை அந்தஸ்து பெற்றுவிட்டவர் லட்சுமி ராய்.
பெங்களூரில் இப்போது பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை ஆதரித்து லட்சுமிராய் பிரசாரம் செய்து வருகிறார். உத்தரபிரதேச மாநில முதல்வர் மாயாவதியின் திட்டங்கள் பிடித்து இருப்பதாலேயே அக்கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இப்போது அவரை தமிழகத்திலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த மாயாவதி முடிவு செய்துவிட்டாராம்.
இதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்களாம்.
இதுகுறித்து அக்கட்சியின் நிர்வாகியான செல்வபெருந்தகை கூறுகையில், 'நடிகை லட்சுமிராய் பிரசாரத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்' என்றார்.
பிரச்சாரத்துக்கு வருவதா இல்லையா என்பதை இன்னும் லட்சுமிராய் தகவல் தெரிவிக்காததால், அவர் சம்மதத்துக்காக காத்திருக்கிறார்கள் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள்.
No comments:
Post a Comment