Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, April 29, 2009

சிம்புவுக்கு ஷகீரா?

சிம்பு படத்தில் ஓரிரு காட்சிகளில் தோன்ற பாப் பாடகி சகீராவை அணுகியுள்ளார்களாம் போடா போடி படக் குழுவினர்.

கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஷகீரா. பாப் பாடகி. இவரது பாடலை விட இடுப்பசைவுக்குத்தான் ஏகப்பட்ட ரசிகர்கள். இடுப்பை, வளைத்து ஒடித்து ஆடிப் பாடும் ஷகீராவுக்கு உலகெங்கும் எக்கச்சக்க ரசிகர்கள்.

ஹாலிவுட் பக்கமே உலாவிக் கொண்டிருக்கும் ஷகீராவை பாலிவுட்டுக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. ஷகீராவுக்குமே கூட பாலிவுட் ஆசை மனதில் உள்ளது.

இந்த நிலையில் கோலிவுட்டிலும் ஷகீராவை இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிம்புவும், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் ஜோடி போட்டு நடிக்கும் போடா போடி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ஷகீராவை இழுத்துப் போட முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க கனடாவில் நடைபெறவுள்ளது. ஷகீரா தற்போது கனடாவில்தான் இருக்கிறார் என்பதால், எப்படியாவது ஷகீராவை இதில் நடிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளதாம் போடா போடி யூனிட்.

ரஜினி..ஒரு பாட்டு... 100 ஸ்டைலு..!


இதுவரை இந்திய சினிமாவில் ஸ்டைல் என்ற வார்த்தைக்கு ரஜினி என்றுதான் கூறிவந்தார்கள். இனி இதே வார்த்தையை உலகம் முழுக்க கூறப் போகிறார்கள். உலகம் முழுக்க வெளி வரப்போகும் எந்திரன் படத்தில் ஒரே பாடலில் 100 பாடலுக்கு விதவிதமான ஸ்டைல் காட்டி நடித்து அசத்தியிருக்கிறாராம் நமது சூப்பர் ஸ்டார்.

இந்தப் பாடலை எடுக்க மட்டும் 22 நாட்கள் பிடித்திருக்கிறது இயக்குநர் ஷங்கருக்கு.

ஹைதராபாத் பிலிம் சிட்டியில் தனி செட் போட்டு வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்காட்சிக்கு பிரபுதேவாதான் நடனம் அமைக்க வேண்டும் என்று ரஜினியே விரும்பிக் கேட்டுக் கொண்டாராம். இதனால் மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்த பிரபு தேவா, ரஜினியுடன் தங்கியிருந்து இந்த அட்டகாசமான பாடலை எடுத்து முடித்துள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றில் இனியும் இப்படியொரு படம், பாடல் காட்சி இருக்குமா என்று வியக்கும் அளவுக்கு மிகப் பிரமாதமாக வந்திருப்பதாக பிரபு தேவா தெரிவித்துள்ளார்.

'நிச்சயம் என் வாழ்நாளில் இப்படியொரு வித்தியாசமான பாடலுக்கு, இத்தனை சிரமமான நடனத்தை இன்னொரு முறை அமைப்பேனா என்று தெரியவில்லை. ரஜினி சார் ஒரு அதிசயம். நான் அடித்துச் சொல்கிறேன்... நிச்சயம் வேறு எந்த நாயகனாலும் இந்த அளவு கஷ்டமான நடனத்தை, இத்தனை விதமான ஸ்டைல்களுடன் ஆட முடியாது. ரஜினி சாருக்கு இணை ரஜினிதான். ஷங்கர் அற்புதமான க்ரியேட்டர். இல்லாவிட்டால் இவ்வளவு பிரமாதமாக அந்தப் பாடல் வந்திருக்காது' என்கிறார் பிரபு தேவா.

இந்தப் பாடலில் ரஜினியின் ஆட்டம் பார்த்துவிட்டு, வட இந்திய பத்திரிகளிலெல்லாம் ரஜினி புகழ் பாடி வருகிறாராம் ஐஸ்வர்யா ராய்.

இந்தப் பாடலில் 100 ஸ்டைல்களில் தோன்றும் ரஜினி, ஒவ்வொரு ஸ்டைலு்ககும் ஒரு காஸ்ட்யூம் என கலக்கியிருக்கிறாராம்.

ஏற்கெனவே சிவாஜியில், எம்ஜிஆர், சிவாஜி, கமல் மற்றும் அதிரடி நாயகன் ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்புகளில் ரஜினி தோன்றியிருப்பது நினைவிருக்கலாம்.
சினிமா கைவிட்டாலும் கூட கெளரமாக வாழ படிப்பு அவசியம். எனவேதான் எம்.பி.ஏ படிக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை மதுமிதா.

குடைக்குள் மழை மூலம் தமிழுக்கு வந்தவர் மதுமிதா. அதற்குப் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. அவ்வப்போது வந்து போனார்.

இந்த நிலையில் தற்போது மதுமிதா கைவசம் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை. இதனால் படிப்புப் பக்கம் திரும்பி விட்டார்.

தற்போது அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. படிக்கிறார் மது. நேற்று முதல் பரீட்சை தொடங்கி விட்டதாம்.

இதனால் நடித்துக் கொண்டிருக்கிற ஓரிரு படங்களின் படப்பிடிப்புக்கும் லீவு போட்டு விட்டு தீவிரமாக படிக்கிறார்.

இனிமேல் நடிப்பு அவ்வளவுதானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. கைவசம் படங்கள் உள்ளன. இருந்தாலும் படிப்பும் அவசியம்தானே. நாளையே நடிப்பு இல்லாமல் போனால் படிப்பு கை கொடுக்கும் அல்லவா. கெளரவமாக வாழ படிப்பு அவசியம். அதனால்தான் எம்.பி.ஏ படிக்கிறேன் என்கிறார்.

அது ஏன் எம்.பி.ஏ. என்றால், எனக்கு நிர்வாகவியலில் ஆர்வம் அதிகம். அதனால்தான் இதை தேர்வு செய்தேன் என்கிறார் மது.

கவனம் சிதறாம படிங்க.. கூடவே வாய்ப்பு கிடைத்தால் நடிங்க..

'இம்சை அரசன் சிம்பு!'-தருண்கோபியின் தடாலடி பல்டி!

சிம்புவின் இம்சையால்தான் நன்றாக வந்திருக்க வேண்டிய காளை திரைப்படம் தோல்வியடைந்தது என்று அந்தப் படத்தின் இயக்குநர் தருண் கோபி கூறியுள்ளார்.

குறிப்பிட்ட நாயகர்களுடன் இணைந்து படம் பண்ணுவதே தனது பிறவிப் பயன் என சில இயக்குநர்கள் பேசுவதும், படம் தோல்வியடைந்ததும் அந்த நடிகர் படுமோசம் என்று திட்டி பேட்டி கொடுப்பதும் திரையுலகில் சகஜம்தான்.

இப்போது அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு தருண் கோபி. திமிரு, காளை படங்களின் இயக்குநர்.

இவர் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்போது, தான் இயக்கிய இரு ஹீரோக்களைப் பற்றியுமே தாறுமாறாக பேட்டி கொடுத்து வருகிறார்.

திமிரு படத்தில் நடித்த விஷாலுக்கு நடிக்கத் தெரியாது என்றும், ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கக் கூட ரொம்ப சிணுங்குவார் என்றும் கூறியுள்ளார்.

இவர் இயக்கிய இன்னொரு ஹீரோ சிம்புவை, இம்சை அரசன் என்று வர்ணித்துள்ளார்.

'காளை படத்தில் நடித்த ஹீரோ நிஜமான இம்சை அரசன். தன் வேடத்தோடு நில்லாமல், எல்லாவற்றிலும் தலையை நுழைத்தால் படம் எப்படி ஒழுங்காக வரும்?' என்று கூறியுள்ளார்.

ஆனால் இதே தருண்கோபிதான், சிம்புவை ஓஹோவெனப் புகழந்தார். 'சிம்புவை இனி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக் கூடாது என்றும், அவர்தான் இனி சூப்பர் ஸ்டார்' என்றும் பெரிய ஐஸ் பாறையையே வைத்தார் படத்தின் ரிலீஸ் சமயத்தில்.

அதேபோல கமலா திரையரங்கில் படம் குப்பையாக உள்ளது என்று கூறி, ரசிகர்கள் முன்னிலையிலேயே தருணை 'நிமிர்த்தி' எடுத்தார் டி ராஜேந்தர். ஆனால் நிருபர்களிடம், 'டி ஆர் என் அண்ணன் மாதிரி, அவருக்கு படம் பார்த்துவிட்டு சந்தோஷத்தில் அருள் வந்துவிட்டது. அதைத்தான் அப்படிக் காட்டினார்' என்று வுட்டாலக்கடியாகப் பேசியது நினைவிருக்கலாம்.

World's Weird Car - Funny Vehicle of the World








பாவனாவுக்கு விருந்துடன் பாடம்

மகாத்மா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பாவனாவன் நடிப்பில் கிறங்கிப் போன தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், உடனே அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தளித்து உபசரித்தார்.


விருந்தில் அவரது மனைவி சிவரஞ்சனியும் கலந்து கொண்டார். சிவரஞ்சனி முன்னாள் நாயகி என்பது நினைவிருக்கலாம்.

தனக்குப் பிடித்த ஹீரோயின்களை இப்படித்தான் வீட்டுக்குக் கூட்டிப் போய் விருந்தளித்துக் கெளரவிப்பது ஸ்ரீகாந்த்தின் வழக்கம். அந்த வகையில் மகாத்மா படத்தில் பாவானாவின் நடிப்பில் அதிசயித்துப் போய் விருந்தளித்து விட்டார் ஸ்ரீகாந்த்.

விருந்தில் கலந்து கொண்ட சிவரஞ்சனி, பாவனாவுக்கு நிறைய டிப்ஸ்கள் கொடுத்தாராம். கூடவே சினிமா உலக அனுபவங்களையும் எடுத்துக் கூறினாராம்.

பாவனாவுக்கு தமிழ், மலையாளம் நன்கு வரும். தெலுங்கு தத்தக்கா புத்தக்காதான். எனவே தெலுங்கு உச்சரிப்பு குறித்தும் ஸ்ரீகாந்த் தம்பதியினர் பாடமே எடுத்து விட்டார்களாம்.

ஸ்ரீகாந்த் தம்பதியினரின் இந்த அன்பான உபசரிப்பில் நெகிழ்ந்து போய் விட்டாராம் பாவனா.

Sunday, April 26, 2009

ராஜேந்தரை வழிமறித்துத் திட்டிய விஜய்காந்த் கட்சியினர்!

விழுப்புரம்: மனைவி உஷாவை ரயிலில் அனுப்புவதற்காகச் சென்ற லதிமுக தலைவர் டி ராஜேந்தரை வழி மறித்த விஜய்காந்த் கட்சியினர் சரமாரியாகத் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இவர்களில் 6 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர். t-rajendaract_01

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், வேட்புமனு தாக்கல் செய்ய மனைவி உஷாவுடன் கள்ளக்குறிச்சியில் தங்கியிருந்தார். மனுத் தாக்கல் முடிந்துவிட்டதால் உஷாவை சென்னைக்கு ரயிலில் அனுப்பி க்க சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு வந்தார்.

அவர் பிளாட்பாரத்தில் நடந்து போனபோது, திடீரென அங்கு வந்த சின்னசேலம் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, குமார், கோபிநாத், சூரியன், தாமோதரன், அறிவழகன் உள்ளிட்டோர் ராஜேந்தரை வழிமறித்தார்களாம்.

அவரை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சின்னசேலம் போலீஸில் புகார் கொடுத்தார் டி ராஜேந்தர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது, குப்புசாமி மகன் சின்னசாமி, சின்னசேலம் பாண்டியன் மகன் குமார், சின்னப்பன் மகன் கோபிநாத், துரைசாமி மகன் சூரியன், அங்கமுத்து மகன் தாமோதரன், கோவிந்தன் மகன் அறிவழகன் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

“இது என்னய்யா அநியாயமா இருக்கு… யார் யாரைத் திட்டறதுன்னு விவஸ்தை இல்லையா… எதிர்த்துப் போட்டியிடறதைக் கூட அவங்களால தாங்க முடியல. பயம் வந்துருச்சிய்யா… பயம் வந்துருச்சி. நான் விடமாட்டேன்… ரயில்வே பிளாட்பாரம்ல வழிமறிச்சித் திட்டறானுங்க, இதான் வீரமா.. முடிஞ்சா அரசியல் பிளாட்பாரம்ல நின்னு பேசட்டும்…” என்று காவல் நிலைய வாசலில் செய்தியாளர்களிடம் கூறினார் ராஜேந்தர்.

நாகூர் ஹனிபா - ஒரு இசை சரித்திரம்

சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை ‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் - ஒரு சரித்திரம், ஆகையால் 'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன் செய்தேன்.

‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம் இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார் பாணியில் பால்பாயிண்ட் பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி ‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு ‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்” என்றால் மற்றவர் “பித்தளை”தானே?

அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப் பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்" என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில் என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில் அக்கறை செலுத்தியவர். அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.

ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக் கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு இந்தியாவாகத் தெரிந்தது.

நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா அறியாமோ?” “நிங்ஙள் அவரை கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே அறிந்து வைத்திருந்தார்.

வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள். அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்துகின்ற அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும் மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.

‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில் வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?” என்ற கேள்வி எழலாம். “அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.

நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல், நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?

ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப் போன்ற உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன் இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.

“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான் வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர் கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.

"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில் ‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம்.

இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள் மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது. “முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை.

ஹனிபாவின் சில பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.

“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர் பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள் உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர் உண்டு.

“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்

வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”

என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.

“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹே

ஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”

என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும்.

தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர் நாளடைவில்

“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்

இருக்கையில் நமக்கென்ன தயக்கம்

கண்களில் ஏனிந்த கலக்கம்”

என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக் கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த முறை’யையும், ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும் பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.

“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?

மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”

என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன் கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு தெளிவு பிறக்க வைத்து விடும்.

“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர் அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த கனிவான அறிவுரையை காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை

ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”

என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன் தத்ரூபமாக காட்சிதரும்.

“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு

மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”

என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.

“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?

கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”

என்று அவர் ஆரம்பம் செய்கையில் “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும் கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே உணர முடியும்.

தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.

ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத் துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.

இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல ‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர். ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.

இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட, நின்றுக் கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க வைத்த கதை.

இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி, உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள் வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.

மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ ‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி எத்தனை கட்டை என்ற விவரத்தை காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை” என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார். (‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)

ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர் தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த ‘சிச்சுவேஷன் காமெடி’.

“இவரின் இசைக் கச்சேரி

ஒரு யாகம் .. .. ..

மூன்று மணி நேரம் –

மேடையில் சுற்றியுள்ள

வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..

இவர் சுருதியும்

கீழே இறங்காது”

என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.

"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர் ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால் அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

அரசியலும் அல்வாவும்

நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியபோது, நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.

பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம் A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத் நின்றிருந்தாலாவது ஜெயித்திருப்பாரோ என்னவோ.

“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத் இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய நண்பர் அன்வாருல்லா.

கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று எற்பட்ட ஒன்றா?

“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.

தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும் பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச் செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட என்பது அ.மா.சாமியின் கூற்று.

“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து

தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா

தாத்தாவாம் ஈ.வே.ரா”

என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.

“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ

தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க வீறு கொண்டு எழுவார்கள் வீர மறவர்கள்.

“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர் பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு தேவையாக இருக்கிறது” என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.

1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி எழுதிய

“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு

சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்

திராவிட நாட்டின் சேமம் வேண்டி

சிங்கார ஆடைகள் வாங்குவீர்”

என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.

கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம் லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர் துறந்தார். 1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள் பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர நிகழ்வு.

“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும் மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.

இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன் தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.

அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’ கலை அறியாது ‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.

தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல, கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை வேந்தன்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்

ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம் முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில் சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.

“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!

மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே!”

என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்” என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.

“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே

பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே

கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே

கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”

என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல் காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.

நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !

நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள் அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு

தங்க நிலவைத் துரத்துகிறார்

அருமை நபியை ஆருயிரை

அணையா விளக்கை வருத்துகிறார்"

என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.

'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்

"கல்லின் மீது

பூவை எறிபவர்கள்

இப்போது

பூவின் மீது

கல்லை எறிகிறார்கள்" என்பார்

இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்.

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்

கன்மாரி பெய்துவிட்ட

வன்மனத்தார் திருந்துதற்கு

வழிவகுத்த நாயகமே" என்று.

அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று தொடங்கும் இன்னொரு பாடலிலும்

“கல்லடி ஏற்று

கடுமொழி கேட்டு

உள்ளம் துடித்து

உதிரத்தை வடித்து”

என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!” என்ற பாட்டிலும்

“தாயிப் நகரில் கல்லடிகள்

தந்த தழும்பிலே – இமைகள்

தழுவதற்கும் அழுவதற்கும்

கண்ணீர் பொங்குதே..”

என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக

“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்

தாஹா இரசூல் நபி நடக்கையிலே

பாவிகள் செய்த கொடுமையினை - என்ணிப்

பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”

என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக் காட்டியிருப்பார்.

இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம் “நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.

84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும் செய்யும் பிரார்த்தனை.

அருஞ்சொற்பொருள்:

மெளத்து : மரணம்

யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!

தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்

ஈமான் : இறையச்சம்

சின்னத்திரை-2009 அழகி அஞ்சனா!

2009-ஆண்டின் விவெல் மிஸ் சின்னத்திரையாக தொலைக்காட்சித் தொகுப்பாளர் அஞ்சனா தேர்வு செய்யப்பட்டார்.

விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்ட் ஏற்பாட்டில், சின்னத்திரை நடிகர் விஷ்வா உருவாக்கத்தில் மிஸ் சின்னத்திரை விருதுகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

2009-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராமாவரம் லாமிக்காலே கிளப்பில் சனிக்கிழமை மாலை நடந்தது.

பெரி, கவிதா, திவ்யா, நிஷா, ரஞ்சனி, ஐஸ்வர்யா, அஞ்சனா, மாயா ரெட்டி, கவுரி லட்சுமி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய 10 சின்னத்திரை நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நடுவர்களாக உமா ரியாஸ்கான், முருகா, பிடிச்சிருக்கு படங்களில் நடித்த அசோக், பேஷன் டிசைனர் கரிஷ்மா, மிஸ் சவுத் இந்தியா ஷ்ராவ்யா, கடந்த ஆண்டு மிஸ் சின்னத்திரை விருது வென்ற ரியா ஆகியோர் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுக்களாக நடந்த இந்தப் போட்டியில் 2009-ம் ஆண்டின் சின்னத்திரை அழகியாக அஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். எம்.ஏ. படித்துக் கொண்டே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இரண்டாவது இடம் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது. பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு ப்ளஸ் டூ மாணவி.

மூன்றாவது இடம் ரஞ்சனிக்கு கிடைத்தது. நான் கடவுள் படத்தில் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாக நடித்திருப்பவர் இவர்.

மூன்று அழகிகளுக்கும் நடிகர் அசோக் மகுடம் சூட்டி வாழ்த்தினார்.

விழாவில் குறிப்பிடத்தக்க அம்சம் திவ்யதர்ஷினி, ராகவ் மற்றும் ஷில்பாவின் நடனம். நிகழ்ச்சியை விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கிய விதம், பார்வையாளர்களை இரவு 11 மணி தாண்டியும் உட்கார வைத்திருந்தது.

இந்த நிகழ்ச்சி கே டிவியில் தொடர்ந்து நான்கு வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 15

என்ன சிநேகிதிகளே, ஆண்களை ஆன் ஆஃப் செய்யும் சிக்னல் சிஸ்டமான இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை சரியாகக் கையாளப் பழகிக்கொண்டீர்களா? நீங்கள் உறவுக்காக ஊக்குவிக்க விரும்பும் ஆணின் எதிரில் இ.விக்களை அள்ளி விடுவதும், ஒத்து வராது என்று ஒதுக்க முயலும் ஆண்களிடம் இ.விக்களை அடக்கி வாசிப்பதுமாய், போன வார ஹோம் வொர்க்கை சரியாக செய்து பழகி இருந்தீர்கள் என்றால், லெட் அஸ்கோ டு அடுத்த லெசன்.

இந்தப் பாடத்தை கைனெஸ்திக்ஸ் என்போம், அதாவது அசைவுகளின் அறிவியல். போயும் போயும் அசைவுகளில் என்னத்த பெரிய அறிவியல் இருந்துவிட போகிறது என்று நீங்கள் இளக்காரமாகக் கூட நினைக்கலாம், ஆனால் மேட்டர் என்ன தெரியுமா? மனித நடவடிக்கை ஒவ்வொன்றின் பின்னாலும் பெரிய பெரிய அறிவியல் சமாசாரங்கள் ஒளிந்திருக்கின்றன.

மனிதர்களை விலங்கியல் ரீதியாக சோஷியல் மிருகங்கள் என்றுதான் பாகுபடுத்துகிறார்கள். அறிவுக் கூர்மை அதிகமுள்ள பிராணிகளான, யானை, டால்ஃபின், குரங்கு, சிம்பான்சி, கொரிலா, பொனோபோ மாதிரியானவையும் சோஷியல் மிருகங்கள்தான். இந்த வகை மிருகங்களில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? இவற்றுக்கு எல்லைகள் தெரியும். இவைகளுக்கு ``இது என் ஏரியா, இங்கே எனக்கு மட்டும் தான் இடம்'' என்கிற பிரதேச மனப்பான்மை அதாவது டெரிடோரியல் பிகேவியர் உண்டு.

மனிதர்களுக்கும் இந்த பிரதேசக் குணம் உண்டு. எப்படித் தெரியுமா? நம்மை அறியாமலேயே நம்மைச் சுற்றி நான்கு எல்லைக் கோடுகளை வைத்திருக்கிறோம் நாம். அதில் முதலாவது பப்ளிக் இடைவெளி என்கிற Public Distance. முற்றிலும் அன்னியர்களுடன் பேசும் போது நான் விட்டு நிற்கும் இடைவெளி தான் இந்த பப்ளிக் இடைவெளி. இந்த எல்லை நின்று ஆரம்பத்தில் பேசும் மனிதரை நமக்கு பிடித்துப் போனால், அல்லது அவரை நாம் நம்ப ஆரம்பித்தால், அடுத்து நாம் அனுமதிக்கும் நெருக்கம் தான் சோஷியல் இடைவெளி, என்கிற Social Distance. அதாவது, கொஞ்சம் பரிச்சயமான நபர்களுடன் பேசிக் கொள்ள என்று நாம் உபயோகிக்கும் நெருக்கம்.

இதற்கு அடுத்து வருவதுதான் பர்சனல் இடைவெளி என்கிற அருகாமை. இது நமக்கு மிகவும் நன்றாகப் பரிச்சயமான, மிகவும் நம்பகத்திற்கு உண்டான நபர்களை மிக அருகில் வைத்து நாம் உறவாடும் இடைவெளி.

இந்த எல்லையைத் தாண்டிய பிறகு வரும் மிக நெருக்கமான டைட் குளோசப் தான் இண்டிமேட் இடைவெளி Intimate Distance, என்கிற அன்னியோன்னியம். இது தாய், சேய், நண்பர்கள், காதலர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆகிய உரிமையானவருக்கு மட்டுமே உள்ள நெருக்கம்.

எல்லா மனிதர்களுக்கும் இந்த நான்கு இடைவெளிகளுமே உண்டு. நம்மை அறியாமலேயே நாம் எல்லோருமே அநிச்சையாக கடைப்பிடிக்கும் சமூக விதி இது. நமக்கு அதிகம் தெரியாதவர் என்றால் இரண்டு அடி தள்ளி நின்று பேசுவோம். கொஞ்சம் தெரிந்தவர் என்றால் ஒரு அடி கிட்டேயும் போய் பேசுவோம். ரொம்பத் தெரிந்தவர் என்றால் முகத்திற்குப் பக்கத்திலேயே போய், நின்று பேசுவோம். மிக மிக நெருக்கமானவர் என்றால் மூச்சுக்காற்று அவர் மீது படும் அளவிற்கு நெருங்கிப் போய் பேசுவோம்.

அதெல்லாம் சரி, இதை வைத்து ஆண்களை எப்படி ஹாண்டில் செய்வதாம் என்று தானே கேட்கிறீர்கள். இந்த கைனெஸ்திக்ஸ் தகவல் உங்களுக்கு இரண்டு விதத்தில் உதவும்.

ஒன்று, ஆண் உங்கள் பிரதேசத்தினில் எப்படி பிரவேசிக்கின்றான் என்பதை வைத்து அவன் உள் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அறிமுகமானதும் பவ்யமாய் உங்கள் எல்லைக் கோடுகளை மதித்து எட்ட நின்று பேசுகிறான் என்றால் ஓ.கே. நீங்கள் அனுமதித்து, அல்லது ஊக்குவித்ததினால் பக்கத்தில் வந்து நின்று பேசினால் என்றாலும் ஓ.கே.
ஆனால் சினிமா ஹீரோ அறிமுக காட்சியிலேயே ஹீரோயினை அப்படியே கட்டிப்பிடித்து ஏதோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும் பாணியில் எவனாவது முதல் சந்திப்பிலேயே உங்கள் இண்டிமேட் இடைவெளிக்குள் பிரவேசித்து, அவன் மூச்சுக்காற்று உங்கள் மேல் படும் அளவிற்கு மிகச் சமீபமாய் வந்து நின்றால், உஷார், நிஜமான ஆபத்திலிருந்து காப்பாற்றதான் அப்படிச் செய்தான் என்றால், இட்ஸ் ஓகே. ஆனால் இதுதான் சாக்கு என்று காய்ந்த மாடு மாதிரி உங்கள் மேல் பாய்கிறான் என்றால், நாட் அட் ஆல் ஓகே!

சில ஆண்கள் அறிமுகமாகும் போது சமர்த்தாய் தங்கள் எல்லை அறிந்து தள்ளி நின்று, ``சே இவன் நல்ல பையன்ப்பா!'' என்ற சர்டிஃபிகேட்டை எல்லாம் வாங்கிக்கொள்வார்கள். பிறகு வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், நைசாக எல்லை தாண்டி வந்து அத்து மீற முயல்வார்கள். ``தெரிந்து செய்கிறானா, தெரியாமல் செய்துவிட்டானா?'' என்று நீங்களே கூட குழம்பிப்போவீர்கள்! ஆனால் விஷயம் இது தான், நீங்கள் அந்த நெருக்கத்தை அனுமதித்திராவிட்டால், அவ்வளவு அருகாமை உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால், நோட் தட் பாயிண்ட், அவன் எல்லை தாண்டிவிட்டான் என்று அர்த்ம். அது தெரிந்தா தெரியாமலா என்பது வேறு விஷயம். அதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க எல்லாம் நேரத்தை வீணடிக்காமல், உடனே விலகிக்கொள்ளுங்கள். ``கொஞ்சம் ஒதுங்குங்க'' என்று தெளிவாக சொல்லுங்கள் ``என்னடா பண்ணுற நீ, முண்டம்?'' என்று ஒருமுறை முறையுங்கள். நீங்கள் அந்த நெருக்கத்தை விரும்பவில்லை என்பதை அந்த ஆசாமி புரிந்துகொள்வான்.

அதையும் மீறி,மீண்டும் மீண்டும் எவனாவது உங்கள் இண்டிமேட் இடைவெளியை நெருங்கிக்கொண்டே இருந்தான் என்றால், இது தான் செக்ஷுவல் ஹராஸ்மெண்ட் எனப்படும் பாலியல் துன்புறுத்தல். Public Distance என்பதை பெரிய குற்றமாய்த்தான் இந்திய குற்றவியல் பிரிவு கருதுகிறது. அதனால் உங்கள் பள்ளியில், கல்லூரியில், வேலை இடத்தில் உள்ள தலைமை அதிகாரியிடம் போய்ப் புகார் கொடுங்கள். இந்த தலைமைப் பொறுப்பு வகிக்கும் நபரே இப்படி எல்லை மீறுகிறாரா, பெண்கள் எல்லோரும் சேர்ந்து போர்க் கொடி தூக்குங்கள்! இது ஆண் எல்லை மீறும் போது எடுக்கும் நடவடிக்கை.

இரண்டு, ஆனால் சில சமயத்தில் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, தங்கள் எல்லைக்கோடுகளை மீறி ஆண்களிடம் பழகிவிடுவது உண்டு. நண்பன், சகா, சகோதரன், மகன், ஊழியன் என்று எந்தவிதமான ஆரோக்கியமான உறவாக இருந்தாலும் சரி, இது போன்ற புற உறவுகள் பர்சனல் இடைவெளி வரை மட்டுமே இருக்க முடியும். இதை மீறி, அபரிமிதமான அன்பின் கொப்பளிப்பில், மிக அருகில் போய், உங்கள் மூச்சு, அந்த ஆணின் மீது படும்படி நீங்கள் இடைவெளியை குறைத்துக் கொண்டால், அது அநாகரிகம் மட்டும் அல்ல, பெரிய ஆபத்தும் கூட.

இதில் என்ன பெரிய அநாகரிகம், நட்பில் இதெல்லாம் சகஜம் தானே. என்றோ, இதில் என்ன ஆபத்து என்றோ நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஷயம் என்ன தெரியுமா? தகுந்த இடைவெளி தாண்டி நீங்கள் நெருங்குவதே, அந்த ஆணைத் தூண்டி, ஊக்குவிப்பதாகும், குழந்தை, காதலன், கணவன் ஆகிய மூன்று நிலைகளைத் தவிர வேறு எந்த நிலையில் உள்ள நபர்களும் இந்த நெருக்கத்தை அனுபவிப்பது ஆபத்தே.
உங்களைப் பொறுத்தவரை, ``சும்மா லேசா சாய்ந்தேன், முகம் கிட்ட வந்துடுச்சு. இதெல்லாம் ஒரு தப்பா?'' என்று நீங்கள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பு என்ன தெரியுமா? ``இத்தனை அருகில் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால், நீ உடனே மோகம் கொள்வாயாக'' என்ற ரீதியில் தான் அவன் நரம்புமுனைகள் இயங்குகின்றன. அதற்கு அவன் பொறுப்பல்ல. இப்படி அவன் நரம்பு வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே நீங்கள் அவனை நெருங்கி ஆசை காட்டுவது அநாகரிகம் தானே.

அதனால் தான் எல்லாக் கலாச்சாரங்களிலும், தாயும் மகனும் என்றாலும் கூட, வயதிற்கு வந்த பையன் தாயை ரொம்ப நெருங்குவதும், அவள் பக்கத்தில் படுப்பதும், அவள் முந்தானையே கதி என்று இருப்பதும் மிக அதிகபட்ச தடைக்குள்ளாகின்றன. அதே போல், வயத்திற்கு வரும் நிலையிலுள்ள மகளைத் தகப்பன் நெருங்குவதும் தவறாக கருதப்படுகிறது.

பெற்றவர்களுக்கும் பிள்ளைக்குமே போதிய இடைவெளி விட்டுப் பழகுவது தான் நாகரிகம் என்கிற போது, மற்ற உறவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ள விரும்பும் ஸ்நேகிதிகள், ஆண் பெண் உறவில் நீங்கள் சரியான எல்லைகளை கடைப்பிடிக்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்களுடன் பரிச்சயம் கொண்ட ஆண்கள் உங்கள் எல்லைகளை மதித்துப் பழகுகிறார்களா என்று பாருங்கள். புற உறவுகளில் இந்த எல்லை நிர்ணயம் ரொம்பவே முக்கியம். ஆனால் அகவுறவில்... எல்லை தாண்டி தீவிரவாதம் செய்வதே சுவாரசியம். அதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!

Friday, April 24, 2009

கமலுடன் மீண்டும் ஆசின்

19 ஸ்டெப்ஸ் படத்தில் கமல்ஹாசனுடன் பசுபதி மற்றும் பிருத்வி ராஜ் இணைந்து நடிக்கின்றனர்.

பரத் பாலாவும், வால்ட் டிஸ்னியும் இணைந்து உருவாக்கும் புதிய படம் 19 ஸ்டெப்ஸ். பரத் பாலா இயக்குகிறார். இப்படத்தில் கமல்ஹாசன், ஆசின் மற்றும் ஜப்பானிய ஹீரோ டடோனபு அசனோ ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் கராத்தே மாஸ்டராக கமல்ஹாசன் வருகிறார். எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.

படத்தின் பெரும் பகுதி கேரளாவில் படமாக்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரளாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பின்னர் சீனாவுக்கு செல்கிறார்கள்.

இப்படத்தில் தற்போது பசுபதியும், பிருத்விராஜும் இணைந்துள்ளனர். பசுபதி கமலுடன் இணைவது இது 3வது முறையாகும். கமல்ஹாசனின் விருமாண்டி பசுபதிக்கு பெரிய பிரேக்காக அமைந்தது. இதையடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடித்தார். தற்போது 3வது முறையாக கமலுடன் இணைகிறார்.

திறமையாளர்களை தட்டிக் கொடுத்து தூக்கி விடும் திறமைசாலியான கமல்ஹாசன், நாசருக்கு அடுத்து பசுபதியை தனது படங்களில் அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கமல்ஹாசனுடன் முதல் முறையாக இணைகிறார் பிருத்விராஜ்.

ஏகப்பட்ட திறமைசாலிகள் இணைந்து கலக்கப் போவதால் 19 ஸ்டெப்ஸ் படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் கூப்பிடறாங்கோ!- நமீதா

எக்குத் தப்பாக கவர்ச்சி காட்டி, சிறுசுகளையும் பெருசுகளையும் தப்புத்தப்பாக கற்பனை பண்ண வைக்கும் கோடம்பாக்கம் ஹாட் நமீதாவை எப்படியாவது தேர்தல் களத்தில் இழுத்துப் போட முயன்று வருகின்றனவாம் தமிழக கட்சிகள் சில.

நமீதா நின்றால், நடந்தால், உட்கார்ந்தால்... என எல்லாமே செய்தியாகிவிடுவதாலும், இவர் ஜவுளிக்கடை திறக்கப் போனாலும் மாநாடு கணக்காக கூட்டம் கூடி விடுவதாலும், அவரது கவர்ச்சி இளைஞர்களின் ஓட்டுக்களை லபக்கென்று பறித்துவிடும் என்று திட்டம் தீட்டிய காங்கிரஸ், நமீதாவிடம் நேரடியாகவே டீலிங்கில் இறங்கியுள்ளது.

ஆனால் டைம் இல்லை என்று நிர்வாகிகளையும் சூட்கேஸ்களையும் திருப்பி அனுப்பிவிட்டாராம்!

இதுகுறித்து நமீதா கூறுகையில், பிரச்சாரத்துக்கு என்னை காங்கிரஸ் கட்சி அழைத்தது உண்மைதான். ஆனால் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திட்டேன். அதனால நேரமில்லேன்னு சொல்லிட்டேன். பணத்தைவிட கமிட்மெண்ட்தான் எனக்கு முக்கியம், என்றாராம் பக்கா டிப்ளமாட்டிக்காக.

நமீதா இப்போது தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளத்திலும் 'செம ஹாட் மச்சி' என்று கலக்கி வருவதால், அவரை பிரச்சாரத்துக்கு கட்சி தலைமை அழைத்திருக்கும். அவர் வந்திருந்தால் மக்களை கூடுதலாக கவர்ந்திழுத்திருக்க முடியும், என்கிறார் காங்கிரஸ் நிர்வாகி.

நடிகை கார்த்திகாவுக்கு காதல் திருமணம்


தமிழில் 'நம்நாடு’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை கார்த்திகா. தற்போது ‘பாலை வனச்சோலை’ படத்தில் நடித்து வருகிறார்.


இவருக்கும் அமெரிக்காவில் மருந்து கம்பெனி அதிகாரியாக இருக்கும் மெரின் மேத்யூ என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.


மெரினுக்கு கொல்லம் அருகே உள்ள மைனாகப் பள்ளி சொந்த ஊர். தற்போது இவர்களது காதலுக்கு பெற்றோர்
பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.


அடுத்த மாதம் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. 18ம்தேதி தேவலங்கரை செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில்
திருமணம் நடக்கிறது.


மறுநாள் கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு கையில் உள்ள படங்களை முடித்து விட்டு
கணவருடன் அமெரிக்காவில் குடியேற கார்த்திகா திட்டமிட்டுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அபார வெற்றி


ஐ.பி.எல்., டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் 11வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் பேட்டிங்தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்தது. அந்த அணியின் காலிஸ் 62 ரன் எடுத்தார். பஞ்சாப் அணி வீரர்கள் அப்துல்லா 4 விக்கெட்டுகளும் பதான் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

வெற்றி இலக்கு 169 ரன் என்ற அடிப்படையில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்து ‌‌7விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போப்ரா மற்றும் யுவராஜ்சிங் சிறப்பான ஆட்டத்தினால் அந்த அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது.

பெண் ரசிகைகள் ரொம்ப முக்கியம்-சூர்யா

வாரணம் ஆயிரம் என்ற சின்ன சறுக்கலுக்குப் பின் வெளிவந்த அயன் படம் சூப்பர் டூப்பராகிவிட்டதில் ஏக சந்தோஷத்திலிருக்கிறார் சூர்யா.

இந்தப் படம் வீடொக்கடே என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகிறது. சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தை தாங்களே நேரடியாக வெளியிடுகிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர்.

அதுமட்டுமல்ல, தான் நல்ல படங்கள் என்று நம்புவதை இனி தெலுங்கிலும் சேர்த்தே ரிலீஸ் செய்யப் போகிறாராம் சூர்யா.

"படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதைத்தான் நான் விரும்புகிறேன். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைகளில் நடிப்பதை விரும்பவில்லை..." எனும் சூர்யாவுக்கு, இப்போது முன்பை விட அதிகமாக ரசிகர்கள் பெருகியிருக்கிறார்களாம்.

"ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். பதிலுக்கு அவர்களுக்கு நல்ல படங்கள் தர விரும்புகிறேன். எனக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தொடர்பு இவ்வளவுதான். வேறு எந்த நோக்கமும் எனக்கில்லை. எனக்குப் பெண் ரசிகைகள் முக்கியம். என்னை அவர்கள் வீட்டில் ஒருவனாக நினைக்கத் துவங்கியதால்தான் இத்தனை ஆதரவு கிடைத்துள்ளது. பெண்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிலைப்பது கஷ்டம்" என்கிறார் சூர்யா.

ஒரு டிவி கூட உண்ணாவிரதத்தை காட்டவில்லையே-தங்கர் குமுறல்

சென்னை: தமிழகத்தில் 24 தொலைக்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு டிவி கூட, திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதம், பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் சரியாகக் காட்டவில்லையே என்று இயக்குநர் தங்கர் பச்சான் குமுறியுள்ளார்.

சென்னை மதிமுக அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களை தங்கர் பச்சான் சந்தித்து ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி›, முல்லைப் பெரியாறு நதி சிக்கல்கள், கச்சத்தீவு மீட்பு போன்றவை தமிழ் உணர்வை தூண்டக்கூடியவை.

இதேபோல ஈழத் தமிழர் பிரச்சினையும் தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடியதாக உள்ளது.

நான்கைந்து மாதங்களாக பல்வேறு அமைப்புகள் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்களில் அதிக நாள் தொடர்ந்து நடைபெற்ற போராட்டமாக பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் அமைந்துள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வு அலைகள் கிராமப்புறங்களிலும் உருவாக வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியா நமது ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, சிங்கள படையோடு சேர்ந்து தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. இது போதாதென்று, மறுவாழ்வுப் பணிகளுக்கு பணம் கேட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சேவும் டெல்லி வருகிறார். நம்முடைய பணத்தை வாங்கிக் கொண்டு நமது இனத்தையே அங்கு அழித்து வருகின்றனர்.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் குரல் உலக நாடுகளின் காதுகளில் சரியாக விழவில்லை. போரை நிறுத்த சோனியா காந்தி நினைத்தால் முடியும். ஆனால் அவர் அதற்கான முயற்சிகளை செய்யவில்லை.

காங்கிரஸைப் பொறுத்தவரை இப்போது என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறதோ, அதைத்தான் தேர்தலுக்குப் பிறகும் அக்கட்சி எடுக்கும்.

தேர்தல் களத்தில் சிலர் தமிழ் உணர்வைத் தொலைத்துவிட்டனர். இலங்கைத் தமிழர்களுக்காக, உண்ணாவிரதம் இருந்தவர்கள் கூட இப்போது காங்கிரஸுடன் சேர்ந்துவிட்டனர்.

கலைஞர் நினைத்தால், ஒரே நொடியில் போரை நிறுத்தச் செய்து தமிழினத்தைக் காப்பாற்ற முடியும். நாம் எல்லாம் தமிழர்களை ஒன்றிணைக்க தவறிவிட்டோம். அரசியல் வாழ்வில் உண்மை உணர்வு விலை போய்விட்டது.

இலங்கைத் தமிழர்களுக்காக, பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக தொலைக்காட்சிகள் 24 இருந்தும் இந்த செய்தி அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படவில்லை.

இலங்கைச் சிக்கல் குறித்து நல்ல திரைப்படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டோம் என்றார் தங்கர்பச்சான்.

Thursday, April 23, 2009

'தாய்மார்களை பட்டினியாகப் பார்க்கும் கொடுமை!'-விவேக் நெகிழ்ச்சி

இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் கோரி சென்னை தாயகத்தில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் பெண்களை நடிகர் விவேக் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அவர்களின் நிலையைப் பார்த்து, 'உயிர் கொடுத்த தாயையும் சகோதரிகளையும் இப்படி பட்டினியாய் பார்ப்பதைவிட வேறு கொடுமை ஏதுமில்லை.


ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இது அவமானம்' என்று கண் கலங்கினார். அவர் மேலும் கூறியதாவது:தமிழர்கள் ஈழ மண்ணில் படும் கஷ்டத்துக்காக நீங்கள் நடத்தும் போராட்டம் ஈடு இணை இல்லாதது. இந்தியாவில் மட்டுமல்ல... உலிகிலேயே இப்படிப்பட்ட உயர்வான பெண்களைப் பார்க்க முடியாது. பொதுவாக பெண்மை வணங்கத்தக்கது. குழந்தைகள் பட்டினி கிடந்தால் கூட பெண்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். தங்கள் குழந்தைகளையும் நினைக்காமல் இலங்கை தமிழர்களுக்காக பட்டினி போராட்டம் நடத்துவது என்னை ஒரு நிலையில் இருக்க விடவில்லை. இந்த தாய்களுக்கு தமிழ்ச் சமூகமே நன்றிக்கடன் பட்டுள்ளது.




நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஒவ்வொரு தமிழர்களின் உணர்வையும் செயலாக்கி இருக்கிறீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் தியாக உணர்வோடு போராட்டம் நடத்துகிறீர்கள். எந்த கட்சி சார்பும் இல்லாமல் தமிழர் என்ற முறையில் நான் முழுமையாக ஆதரிக்கிறேன், என்றார். பின்னர் உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு ஒரு அட்டைப்பெட்டி நிறைய தண்ணீர் பாட்டில்கள் வாங்கி கொடுத்தார்.
விஜயகாந்த் வேண்டுகோள்:இந் நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அந்தப் பெண்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார்.தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் விஜயகாந்த் செல்போனில் பெண்களிடம் பேசுகையில், போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆனால் அந்தப் பெண்கள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உத்தரவாதம் அளித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்வோம் என்று கூறிவிட்டனர்.




அதே போல தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் ஆகியவை இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.கருணாலயா உள்ளிட்ட மகளிர் சமூக சேவை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மாணவர்கள் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர் திடீரென கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாந்தியன் சாலையில் ஊர்வலமாக சென்றனர். பாந்தியன் சாலை சந்திப்பில் அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். பின்னர், எழும்பூர் ரயில் நிலையம் வழியாக ஊர்வலகமாக சென்றுவிட்டு மீண்டும் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே வந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி இரண்டாவது வெற்றி...!


பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டுவென்டி-20 லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.நேற்று நடந்த லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கில்கிறிஸ்ட் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் கில்கிறிஸ்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரராக கிப்ஸ் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். லட்சுமண் 5 ஓட்டங்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா ஒத்துழைப்பு கொடுக்க கில்கிறிஸ்ட் சிறப்பாக விளையாடினார். அவர் 5 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 45 பந்தில் 71 ஓட்டங்களை எடுத்து அவுட்டானார். ரோகித் 30 பந்தில் 52ஓட்டங்களை பெற்றார்.





டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை எடுத்தது.டிராவிட் 48 ஓட்டங்களை எடுத்து அணியின் ஸ்கோர் 100 ஓட்டங்களை தாண்ட உதவினார். விராத் கோஹ்லி (50) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்தது. டெக்கான் சார்ஜர்ஸ் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெக்கான் சார்ஜர்ஸ் அணி இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது

கோலிவுட்டின் 'ஏஞ்செலீனா ஜூலி'!

தனிஷ்கா படு குஷியாக இருக்கிறார். பேராண்மை படத்தின் நாயகிகளில் ஒருவரான இவரது குஷிக்குக் காரணம், உன்னைப் பார்த்தால் ஏஞ்செலீனா ஜூலி மாதிரியே இருக்கு என்று இயக்குநர் ஜனநாதன் கூறியதுதானாம்.ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படம்தான் பேராண்மை. இதில் தனிஷ்காவும் ஒரு நாயகி.



இவர் தவிர சரண்யா, வர்ஷா, வசுந்தரா, லியாஸ்ரீ என்று ஒரு ஹீரோயின் பட்டாளமே உண்டு.பார்க்க மாடல் அழகி போல படு க்யூட்டாக இருக்கும் தனிஷ்கா, இப்படத்தில் நிறைய சண்டைக் காட்சிகளிலும் அசத்தியுள்ளாராம்.என்.சி.சி. வீராங்கனையாக படத்தில் வரும் தனிஷ்கா, பேராண்மை அனுபவம் குறித்துக் கூறுகையில், ஒரு கண்காட்சியில் வைத்து என்னைப் பார்த்தார் இயக்குநர் ஜனநாதன்.




பேராண்மை படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார். எனக்கோ சினிமா என்றால் கொள்ளை ஆசை. கிடைத்த வாய்ப்பை விடாமல் பற்றிக் கொண்டேன்.படத்தில் எனக்கு நிறைய சண்டைக் காட்சிகள் வைத்துள்ளனர். இதற்காக பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம், ஷிஹான் ஹூசேனியிடம் வில்வித்தை, மைக்கேல் மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சிகள் குறித்த நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.பேராண்மை படத்தில் ஐந்து நாயகியர்களில் ஒருவராக நான் வருகிறேன். அடர்த்தியான காடுகளில்தான் படப்பிடிப்பு நடந்தது. அட்டைத் தொல்லை, கொசுத் தொல்லை உள்பட பல தொல்லைகள். ஒரு முறை காட்டெருமை கூட குறுக்கிட்டது. அத்தனையையும் சமாளித்துக் கொண்டு நடித்தோம்.இத்தனை கஷ்டத்துக்கு மத்தியிலும் எனக்கு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் என்னைப் பார்த்தால் ஏஞ்செலீனா ஜூலி போலவே இருக்கிறது என்று இயக்குநர் பாராட்டியதுதான்.





எனது மேனரிசங்களைப் பார்த்தால் டாம்ப் ரைடர் படத்தில் வரும் ஜூலி மாதிரியே இருக்கிறது என்றும் பாராட்டினார் இயக்குநர். இதை மறக்கவே மாட்டேன்.இயல்பிலேயே நான் ஜூலியின் ரசிகை. அவரது ஒரு படத்தையும் நான் விட்டு வைத்ததில்லை. இப்போது என்னைப் போய் ஜூலியுடன் ஒப்பிட்டுக் கூறி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார் இயக்குநர் ஜனநாதன் என்று அடுக்கிக் கொண்டே போகிறார் ஜூலி..

Monday, April 20, 2009

'ஐபோனை' விட நோக்கியாவின் 5800 xpressmusic பல வசதிகளில் சிறந்தது எப்படி..?

செல்வந்தர்களுக்காகவே மின்னணு சாதனங்களை தயாரித்து தரும் நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம்.ஆமாம் இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்கள் எல்லாமே பணக்காரர்களால் மட்டுமே வாங்கமுடியும். அந்த அளவுக்கு விலை அதிகமாக இருக்கும் . பணக்காரர்களும் தங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாக காட்டிக்கொள்ள பணத்தை தண்ணியாக செலவு செய்து இந்நிறுவன பொருள்களை வாங்கி உபயோகிப்பார்கள். இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்களில் அதிகமான வசதிகள் இருக்கிறதோ இல்லையோ? கண்டிப்பாக வடிவமைப்பு அபாரமாக இருக்கும். அதில்தான் எல்லோரும் மயங்கி விடுவார்கள். அந்த மயக்கத்தில் இல்லாத சிலவசதிகள் வாங்குவோருக்கு பெரிதாக தெரியாது.அது தான் இந்த நிறுவன வெற்றியின் ரகசியம். பொதுவாக நாம் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதனங்களில் கொடுக்கின்ற பணத்திற்கு உள்ள வசதிகள் உள்ளனவா? என்று பார்த்து வாங்க வேண்டும்.ஆனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை.





வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையை ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. கம்ப்யூட்டர், ஐபாட் போன்ற சாதனங்களை தயாரித்து வழங்கிவரும் ஆப்பிள் நிறுவனம் செல்போன் சந்தையிலும் இறங்க 'ஐபோன்' என்ற தனது தயாரிப்பை களம் இறக்கியது. 16GB நினைவகம் கொண்ட போனின் விலை 39,000 விலைக்கும், 8GB நினைவகம் கொண்ட போன் 37,000 என்ற விலைக்கும் அறிமுகப்படுத்தியது.ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் பல வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள், சிலபேர் ஷோரூம்களுக்கு முன்னாள் இரவுமுழுவதும் காத்துக்கிடந்து வாங்கினார்கள். தனது தயாரிப்புக்கு உள்ள அமோக ஆதரவை பார்த்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க இன்னொரு தந்திரம் செய்தது. அதாவது உலகம் முழுக்க ஒரு நேரத்தில் சாதனத்தை விற்பனைக்கு விடாமல் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் விற்பனை செய்தது.இதனால் அறிமுகப்படுத்தப்படாத மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்த போனை எப்படியாவது வாங்கி பயன்படுத்தி பார்த்து விடவேண்டும் என்ற பேராசையை வளர்த்துவிட்டது. இதனால் ஆப்பிள் ஐ போனின் விற்பனை சூடுபிடித்தது. ஆனால் அவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய போன் உண்மையிலேயே கொடுத்த பணத்திற்கு உரிய வசதிகளை இருக்கின்றனவா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

'ஐபோன்' ஒரு கையால் தொட்டு இயக்கப்படும் (touch screen) போன் என்பதால் அந்த நிறுவனத்தோடு போட்டிபோட மற்ற நிறுவனங்களும் தங்கள் சார்பில் தொட்டு இயக்கும் போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய 5800xpressmusic என்ற மாடலுக்கும், ஐபோனுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. செல்போன் விற்பனையில் தாத்தாவான நோக்கியா நிறுவனம் தனது மாடலில் ஆப்பிள் ஐபோனால் தரமுடியாத பலவசதிகளை உட்புகுத்தி அறிமுகப்படுத்தியது.அதில்முக்கியமானது போனின் விலை, ஆமாம் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகளுடன் நோக்கியாவின் 5800 xpressmusic வெறும் 18,850 க்கே விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் ஐபோனில் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக இல்லை என்று சொல்லமுடியும். இங்கே ஐபோனுக்கும் நோக்கியா 5800xpressmusic போனுக்கும் உள்ள வசதிகளின் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளேன். படித்துவிட்டு நீங்களே எந்த போனை வாங்கலாம் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.

ஐபோனுக்கும், நோக்கியா 5800 xpressmusic போனுக்கும்
உள்ள வசதி வித்தியாசங்கள் :
1. 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற போன்களில் கூட F.M வசதி உள்ளது.ஆனால் ஐபோனில் இல்லை.நோக்கியா 5800 மாடலில் RDS வசதியுடன் F.M RADIO உள்ளது.
2. ஐபோனில் BLUTOOTH வசதி உள்ளது ஆனால்அதன்மூலம் பாடல்கள்,வீடியோ, ரிங்டோன் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.ஆனால் நோக்கியாவில் இது தண்ணி பட்டபாடு .
3. ஐபோனில் கேமரா வசதி உள்ளது.ஆனால் அதில் VIDEO RECORDING செய்ய முடியாது .(மூன்றாம் தரப்பு நிறுவனம் வழங்கும் அப்ளிகேஷனை பயன்படுத்திதான் இந்த வசதியை பெறமுடியும். நோக்கியாவில் இந்த வசதி இயற்கையாகவே உள்ளது.
4.நோக்கியாவில் எம்.பி 3 பாடல்களை,வீடியோ காட்சிகளை ரிங்டோனாக பயன்படுத்த முடியும், ஆனால் ஐபோனில் முன்பே பதியப்பட்ட ரிங்டோன்களை மட்டுமே பயன்படுத்தமுடியும்.

5.நோக்கியாவில் நீங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் பேசலாம், அதன் STANDBY நேரம் 406 மணிநேரம், பாட்டரியை கழற்றி மாட்ட முடியும், ஆனால் ஐபோனில் தொடர்ந்து 5 மணிநேரம் மட்டுமே பேசமுடியும், அதன் STANDBY நேரம் 300 மணி நேரம் மட்டுமே, பாட்டரியை கழற்ற முடியாது.

6. நோக்கியாவில் ஸ்பீக்கர் ஒலி அளவு மிகச்சிறப்பாக உள்ளது. ஆனால் ஐபோனில் குறைந்த அளவே கேட்கிறது.எம்.பி 3 பாடல்களை ஹெட் போன் இணைத்தால் மட்டுமே நல்ல ஒலி அளவில் கேட்க முடியும்.
7. நோக்கியாவில் DUAL LED FLASH' உள்ளது , ஆனால் ஆப்பிள் ஐபோனில் FLASH கிடையாது.

8.ஐபோனின் எடை 133 கிராம், நோக்கியாவின் எடை 109 கிராம்

10. நோக்கியாவில் 3.2 MEGAPIXELS கேமரா உள்ளது. ஐபோனில் 2MEGAPIXELS மட்டுமே.

11.ஐபோனின் திரை அளவு 3.5" INCH, நோக்கியாவின் திரை அளவு 3.2" INCH நோக்கியாவின் SCREEN RESOLUTION 640*360 என்ற அளவில் உள்ளது, ஆனால் ஐபோனில் SCREE RESOLUTION 480*320 மட்டுமே

12.நோக்கியாவில் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளது,ஐபோனில் இந்த வசதி இல்லை , 3G வசதி இரண்டு போன்களிலும் உள்ளது.நோக்கியாவை நம் வீட்டு 'டிவி' யுடன் இணைக்கமுடியும், ஐபோனில் அந்தவசதி இல்லை,அதே போல் ஐபோனில் VOICE DIALING வசதியும் இல்லை.
13. ஆப்பிள் ஐபோனில் பாடல்களை பணம் கொடுத்து மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும், ஆனால் நோக்கியாவில் ஒரு வருடத்திற்கு இலவசமாக பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

14.நோக்கியா சிம்பியன் O.S வகையை சார்ந்தது, இதன் மூலம் ஏராளமான மேம்படுத்தப்பட்ட வசதிகளை தொடர்ந்து பெறமுடியும், ஆனால் ஐபோன் அதன் தனிப்பட்ட MAC O.S வகையை சார்ந்தது,இதில் பெரிய அளவில் வசதிகளைப் பெற முடியாது.
15. எல்லா வற்றுக்கும் மேலாக நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் விலை இந்தியாவில் 18,850 மட்டுமே, ஆனால் ஐபோனின் விலை இந்தியாவில் 30,000 ரூபாய்

இப்போது நீங்களே சொல்லுங்கள் கொடுக்கிற பணத்திற்கு எந்த போன் சிறந்தது ?

சிறந்த நடிகை - ஆசினுக்கு சிங்கப்பூர் விருது

THEசாவதாரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆசினுக்கு சிங்கப்பூரில் விருது கிடைத்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருது அமைப்பு இந்த விருதினை வழங்கியுள்ளது.

தசாவதாரம் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஆசின். இரண்டு வேடங்களிலும் சிறப்பாக நடித்தமைக்காக ஆசினுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

மே 16ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் விழாவில் ஆசினுக்கு விருது வழங்கப்படும்.

தசாவதாரம் தற்போது இந்தியிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியில் பிசியாகி விட்ட ஆசின், சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ், 19 ஸ்டெப்ஸ் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 19 ஸ்டெப்ஸ் படத்தில் ஆசினுக்கு கராத்தே கற்றுக் கொடுப்பவராக கமல்ஹாசன் நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

இவர்கள் இருவரும் விலகிவிட்டால் கிரிக்கெட் உலகில் அதைவிட சோகம் வேறெதுவும் இருக்காது ..



"கிரிக்கெட்" ஒரு சிறந்த விளையாட்டு. ஆரம்பத்தில் ஒரு சில நாடுகளில் மட்டும் விளையாடப்பட்ட இது பிற்காலத்தில் உலகில் பல நாடுகளில் பரவியது.

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் மக்கள் மனதில் நிறைந்து இருப்பார்கள். அவர்கள் ஓய்வு பெற்றால் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பார்கள். அன்றைய "பிரட்மன்" இல் இருந்து இன்றைய "கங்குலி" வரை அது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

என்னதான் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலுவாக இருந்தாலும், நம்ம ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பவுமே கிராக்கி அதிகம்தான்.
மியாண்டட், இம்ரான் கான், கபில் தேவ், கவாஸ்கர், ரணதுங்க, அரவிந்த, கங்குலி, ரவி சாஸ்த்ரி, கும்ப்ளே, வாசிம் அக்ரம் என பல வீரர்கள் ஆசிய சரித்திர நாயகர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் ஓய்வால் நிச்சயம் இவர்களது ரசிகர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது திண்ணம்.

எங்கள் ஹீரோக்களை பார்த்து (ஆசியர்) மற்றைய கண்ட வீரர்கள் பொறாமைப்பட்டதும் உண்டு.

தற்போது விளையாடும் வீரர்களில் நீண்ட காலமாக விளையாடி வரும் வீரர்கள் என்றால் அது இலங்கையின் ஜெயசூரிய மற்றும் இந்தியாவின் டெண்டுல்கர் என கூறலாம். (இவர்களுக்குப்பின்தான் முரளி, டிராவிட் ஆகியோர் வந்தனர் எனலாம்)

கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் சம அளவிலான சாதனைகளை வைத்துள்ளனர் எனலாம். மற்றும் விளையாட்டுக்கு அப்பால் இவர்கள் இருவரும் உயிர் நண்பர்களாக இருந்து வருகின்றனர் எனலாம். (ஐ பி எல் மும்பை இந்திய அணியில் ஜயசூரியவை சச்சின்தான் இணைத்தார் என்று பல தகவல்கள் வெளியாகின. சந்தோசம்தான். இரண்டு சிங்கங்கள் ஒரே அணியில் விளையாடுவது பெருமையே..)

ஒரு காலத்தில் பலவீனமான அணிகளில் ஒன்றாக இலங்கை அணி கருதப்பட்டது. ஆனால் 1996 உலக கிண்ணத்தை கைப்பற்றி பலரின் வாயை அடைக்கச் செய்தது. அதை வென்றமைக்கு மிக முக்கியமானவர்களுள் ஜெயசூரியவும் ஒருவர். மற்றும் அத்தொடரின் சிறந்த நாயகன் விருதையும் வென்றார்.அதிரடி ஆட்டம் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ஜெயசூரியவே.

மற்றும் பல போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசும் செய்து இருக்கிறார்.
இவருடைய சிக்ஸர்கள் பலரால் பேசப்பட்டவை. அந்நாட்களில் (1996-2000 போன்ற காலப்பகுதிகளில்) டெண்டுல்கர் 4 ஓட்டங்களுக்கும் ஜெயசூரிய 6 ஓட்டங்களுக்கும் பிரபலமாகவிருந்தனர். ஏன் இப்போதும் கூட இவர்கள்தான் ஞாபகத்தில் இருப்பர்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்பவர் டெண்டுல்கர். இவர் அளவிற்கு இந்தியாவில் வேறெந்த கிரிக்கெட் வீரருக்கும் ரசிகர் இருக்கவில்லை. (தற்போது தோனி அதை மிஞ்சுவார் என்று தெரிகிறது.)

1997 - 1998 காலப்பகுதிகளில் ஆஸ்திரேலியாவுடன் வெற்றி பெறுவது கஷ்டமான விடயம் என்ற ரசிகர்களின் எண்ணங்களை மாற்றி அமைத்தவர் என சச்சினை கூறலாம். குறிப்பாக 1998 ஷார்ஜா கிண்ணத்தை தனது செஞ்சுரிகள் மூலம் பெற்றுக்கொடுத்தார். மற்றும் இவருடைய கவர்ச்சியான "ஷாட்"கள் பல ரசிகர்களை கவர்ந்தன. அணி நிலைமைக்கேற்ப இவருடைய ஆட்டம் இருக்கும்.

தற்போது "மும்பை இந்தியன்ஸ்" அணியில் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடி வருகின்றனர். மற்றும் ஐ பி எல் தொடரின் "சிறந்த ஆரம்ப ஜோடி" என்றால் நிச்சயம் இவர்கள் இருவரும்தான் (சேவாக் மற்றும் காம்பிர் இருவரும் புது ஜோடிதானே..ஆக இப்போதைக்கு இது வேண்டாம்)

இவர்கள் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார்கள். இவர்களுடைய ஓய்வு நிச்சயம் கிரிக்கெட் உலகில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு கிரிக்கெட் உலகில் மட்டும் அல்ல ரசிகர்களின் மனதிலும்தான்.