சினிமா கைவிட்டாலும் கூட கெளரமாக வாழ படிப்பு அவசியம். எனவேதான் எம்.பி.ஏ படிக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை மதுமிதா.
குடைக்குள் மழை மூலம் தமிழுக்கு வந்தவர் மதுமிதா. அதற்குப் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. அவ்வப்போது வந்து போனார்.
இந்த நிலையில் தற்போது மதுமிதா கைவசம் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை. இதனால் படிப்புப் பக்கம் திரும்பி விட்டார்.
தற்போது அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. படிக்கிறார் மது. நேற்று முதல் பரீட்சை தொடங்கி விட்டதாம்.
இதனால் நடித்துக் கொண்டிருக்கிற ஓரிரு படங்களின் படப்பிடிப்புக்கும் லீவு போட்டு விட்டு தீவிரமாக படிக்கிறார்.
இனிமேல் நடிப்பு அவ்வளவுதானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. கைவசம் படங்கள் உள்ளன. இருந்தாலும் படிப்பும் அவசியம்தானே. நாளையே நடிப்பு இல்லாமல் போனால் படிப்பு கை கொடுக்கும் அல்லவா. கெளரவமாக வாழ படிப்பு அவசியம். அதனால்தான் எம்.பி.ஏ படிக்கிறேன் என்கிறார்.
அது ஏன் எம்.பி.ஏ. என்றால், எனக்கு நிர்வாகவியலில் ஆர்வம் அதிகம். அதனால்தான் இதை தேர்வு செய்தேன் என்கிறார் மது.
கவனம் சிதறாம படிங்க.. கூடவே வாய்ப்பு கிடைத்தால் நடிங்க..
No comments:
Post a Comment