தமிழில் 'நம்நாடு’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை கார்த்திகா. தற்போது ‘பாலை வனச்சோலை’ படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கும் அமெரிக்காவில் மருந்து கம்பெனி அதிகாரியாக இருக்கும் மெரின் மேத்யூ என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
மெரினுக்கு கொல்லம் அருகே உள்ள மைனாகப் பள்ளி சொந்த ஊர். தற்போது இவர்களது காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.
அடுத்த மாதம் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. 18ம்தேதி தேவலங்கரை செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.
மறுநாள் கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு கையில் உள்ள படங்களை முடித்து விட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற கார்த்திகா திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment