2009-ஆண்டின் விவெல் மிஸ் சின்னத்திரையாக தொலைக்காட்சித் தொகுப்பாளர் அஞ்சனா தேர்வு செய்யப்பட்டார்.
விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்ட் ஏற்பாட்டில், சின்னத்திரை நடிகர் விஷ்வா உருவாக்கத்தில் மிஸ் சின்னத்திரை விருதுகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
2009-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராமாவரம் லாமிக்காலே கிளப்பில் சனிக்கிழமை மாலை நடந்தது.
பெரி, கவிதா, திவ்யா, நிஷா, ரஞ்சனி, ஐஸ்வர்யா, அஞ்சனா, மாயா ரெட்டி, கவுரி லட்சுமி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய 10 சின்னத்திரை நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நடுவர்களாக உமா ரியாஸ்கான், முருகா, பிடிச்சிருக்கு படங்களில் நடித்த அசோக், பேஷன் டிசைனர் கரிஷ்மா, மிஸ் சவுத் இந்தியா ஷ்ராவ்யா, கடந்த ஆண்டு மிஸ் சின்னத்திரை விருது வென்ற ரியா ஆகியோர் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுக்களாக நடந்த இந்தப் போட்டியில் 2009-ம் ஆண்டின் சின்னத்திரை அழகியாக அஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். எம்.ஏ. படித்துக் கொண்டே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இரண்டாவது இடம் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது. பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு ப்ளஸ் டூ மாணவி.
மூன்றாவது இடம் ரஞ்சனிக்கு கிடைத்தது. நான் கடவுள் படத்தில் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாக நடித்திருப்பவர் இவர்.
மூன்று அழகிகளுக்கும் நடிகர் அசோக் மகுடம் சூட்டி வாழ்த்தினார்.
விழாவில் குறிப்பிடத்தக்க அம்சம் திவ்யதர்ஷினி, ராகவ் மற்றும் ஷில்பாவின் நடனம். நிகழ்ச்சியை விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கிய விதம், பார்வையாளர்களை இரவு 11 மணி தாண்டியும் உட்கார வைத்திருந்தது.
இந்த நிகழ்ச்சி கே டிவியில் தொடர்ந்து நான்கு வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது.
No comments:
Post a Comment