ஒரு படத்தின் பாடல்களை வெளியிடுவதற்குள் பல தயாரிப்பாளர்களுக்கு நாக்குத் தள்ளிவிடும். நிலைமை அப்படி. ஆனால் ஒரே நேரத்தி்ல 4 படங்களின் பாடல்களை வெளியிட்டு அசத்தியுள்ளார் நாக் ரவி. இந்த நான்கும் பிரபல நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்களல்ல... சின்ன அல்லது புதுமுகக் கலைஞர்கள் நடித்த சிறிய பட்ஜெட் படங்கள். இன்றை தேதிக்கு 'ஆக்ஸிஜன்' வேண்டி நிற்கும் படங்கள்.
அதுமட்டுமல்ல, தமிழ் சினிமா உலகில் முதல்முறையாக 4 திரைப்படங்களின் பாடல்கள் ஒரே மேடையில் வெளியிடப்படுவதும் இதுவே முதல்முறை.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சுவாமி சின்மயா அரங்கில் நடந்த இந்த விழாவில் பிஞ்சு மனசு, உன்னைக் கண் தேடுதே, திருமண அழைப்பிதழ் மற்றும் கலாச்சாரம் ஆகிய நான்கு படங்களின் இசையையும் உலகம் முழுக்க தனது இன்சைட் மீடியா மூலம் வெளியிட்டு சாதனைப் படைத்தார் நாக்ரவி.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன் இந்த ஆடியோக்களை வெளியிட்டார்.
'சிறிய திரைப்படங்களை இன்று சீண்ட ஆளில்லை. ஆனால் அப்படிப்பட்ட படங்களையே வாங்கி பெரிய அளவில் விழா எடுத்து, பெரிய படங்களாக்கி இருக்கிறார். நாக் ரவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்', என்றார் ராம நாராயணன்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், தயாரிப்பாளர்கள் கோவைத் தம்பி, அழகன் தமிழ்மணி, ஏஎல் அழகப்பன், உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிகளை தயாரிப்பாளரும் பிஆர்ஓ சங்கத் தலைவருமான விஜயமுரளி தொகுத்து வழங்கினார். நாக் ரவி அனைவரையும் வரவேற்று தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment