Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, April 15, 2009

என்னை ஒழிக்கப் பார்க்கிறார்கள்!-அசின்

'கஜினி படத்தின் வெற்றி மூலம் முதல்நிலைக்கு வந்துவிட்டதால் பொறாமை கொண்ட இந்தி நடிகைகள் சிலர் என்னை ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறார்கள்', என நடிகை அசின் குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

பாலிவுட்டில் இப்போது என்னைப் பற்றித்தான் அதிகம் கிசுகிசுக்கள் வருவதாகக் கூறுகிறார்கள். அது உண்மைதான். தென்னிந்தியாவில் மூன்று மொழிகளில் முன்னணி நடிகை நான். ஆனால் ஒருபோதும் என்னைப் பற்றி அங்குள்ளவர்கள் தப்பாக எழுதியதே கிடையாது. இப்போதும் என்னைத் தங்களில் ஒருத்தியாகவே பார்க்கிறார்கள்.

ஆனால் இங்கே நிலைமை வேறாக இருக்கிறது. மும்பை, பாலிவுட் பற்றி வெளியில் பேசுவைதை மெய்ப்பிக்கும் வகையில்தான் உள்ள இங்குள்ளவர்களின் அணுகுமுறை.

கஜினி என்ற ஒரே படத்தில் நான் இந்த அளவு புகழ் பெற்றது பலரது கண்ணையும் உறுத்துகிறது.

அதனால்தான் எனக்கும் சல்மானுக்கும் காதல், கத்தரிக்காய் என்று எழுதி புண்படுத்துகிறார்கள். இதற்குப் பின்னணியில் சில நடிகைகளே இருப்பது எனக்கும் தெரியும். சல்மானுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. லண்டன் ட்ரீம்ஸ் முடிந்தால், அவர் யாரோ, நான் யாரோ. ஆனால் என்னால்தான் அவரும் கத்ரீனாவும் பிரிந்ததாகக் கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய். எனக்கு அப்படி ஒரு அவசியமும் நேரவில்லை.

நான் போராடுவேன். என்னை எப்படியாவது வெறுப்பேற்றி பாலிவுட்டிலிருந்து ஒழித்துவிட வேண்டும் என்ற அவர்களது எண்ணம் நிறைவேறாது, என்றார் அசின்.

இதென்ன கலாட்டா!

No comments:

Post a Comment