Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, May 18, 2009

தமிழ் சினிமாவின் மவுன புரட்சி!

வர்ணம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. பாடல்களை, டைரக்டர் பாலுமகேந்திரா வெளியிட, டைரக்டர் அமீர் பெற்றுக்கொண்டார்.

விழாவில், டைரக்டர் அமீர் பேசும் போது,






``சமீபகாலமாக நான் விழாக்களில் அதிகமாக கலந்துகொள்வது பற்றி சில நண்பர்கள் என்னிடம் கருத்து தெரிவித்தார்கள். ``மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய டைரக்டர்கள் விழாக்களில் கலந்துகொள்வதில்லை. அதுமாதிரி நீங்களும் இருங்கள் என்றார்கள்.

நான், அமீராகவே இருக்கணும். மணிரத்னம், ஷங்கர் மாதிரி வர எனக்கு ஆசை இல்லை.

எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இருவருக்கும் முன்னோடிகள் தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும். ரஜினிகாந்த்-கமலஹாசன் ஆகிய இருவருக்கும் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னோடியாக இருந்தார்கள். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு ரஜினி-கமல் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

எங்களுக்கு பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

இப்போது தமிழ் சினிமாவில் மவுன புரட்சி ஏற்பட்டு இருக்கிறது. சின்ன `பட்ஜெட்'டில் தயாராகும் படங்கள் யாருடைய தயவும் இல்லாமல் வரிசையாக வெற்றிபெற்று வருகின்றன. அதற்கு, `பசங்க' படமே சாட்சி.

அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் இல்லை. நயன்தாரா, அசின் கிடையாது. நல்ல படங்களுக்கு வரவேற்பு எப்போதும் உண்டு.''என்றூ பேசினார்.

No comments:

Post a Comment