Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, May 14, 2009

தமிழன் எப்படி திருப்பி அடிப்பான் என்பதை சோனியா 16ம் தேதி அறிவார்: அமீர்

சென்னை: தமிழன் தன்னை அடிப்பவர்களை எப்படி திருப்பி அடிப்பான் என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் சோனியா காந்திக்கு காட்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

ஜூனியர் விகடன் இதழுக்கு அமீர் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகள்..

இங்கிலாந்து ராணிக்கு இருக்கும் ஈவு இரக்கம், இத்தாலி ராணிக்கு ஏன் இல்லை? இதிலிருந்தே இலங்கையில் போரை நடத்தும் சூத்திரதாரி சோனியாதான் என்பது பச்சைப் பிள்ளைக்கும் புரிந்து விடுமே...




தமிழன் கொத்துக் கொத்தாக செத்துக் கிடக்கும் நேரத்தில், அதைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசாத சோனியா, இழவு வீட்டில் ஆதாயம் தேடும் ஆளாக தமிழகத்துக்குப் பிரசாரத்துக்கு வந்து போயிருக்கிறார்.

காங்கிரசை எதிர்த்துப் பிரசாரத்துக்குப் போன திரைத்துரையினர் மீது உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தின் ஆட்கள் காட்டுமிராண்டி தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் பதிலாக போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் காங்கிரஸ் துடைத்து எறியப்படும். பி.ஜே.பி-யை மதவாதக் கட்சி என்பதுபோல் காங்கிரசை இனவாதக் கட்சியாகத்தான் இனி தமிழ் மக்கள் பார்ப்பார்கள்!

இரட்டை இலைக்கு வாக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனாலும், 'தனி ஈழம் அமைத்தே தீருவேன்' என ஜெயலலிதா முழங்கி இருப்பது உணர்வாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது.

'யோகி' பட வேலைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதால்தான் என்னால் பிரசாரத்துக்குப் போக முடியவில்லை. நான் பிரசாரம் செய்யவில்லை என்றால் என்ன? தமிழன் எப்படித் திருப்பி அடிப்பான் என்பதை இத்தாலி ராணிக்கு (சோனியா) நம் தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக தெரியப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார் அமீர்.

No comments:

Post a Comment