Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, May 13, 2009

'சௌந்தர்யா'-வார்னர் விலகலா?

சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோவுடனான கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுபவை அனைத்தும் ஆதாரமற்றவை, வதந்திகள் என அறிவித்துள்ளது ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.




சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிக்கு சொந்தமான நிறுவனம், ஆக்கர் ஸ்டூடியோ. இந்த நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இதர தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்கள் தயாரிக்கப் போவதாக வார்னர் பிரதர்ஸ் அறிவித்திருந்தது.

தமிழில் முதல்படமாக 'கோவா'வை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் - தி வாரியர் படத்தை வார்னர் பிரதர்ஸ் உலகம் முழுக்க வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆக்கர் ஸ்டூடியோவில் இருந்து வார்னர் பிரதர்ஸ் விலகிவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. அது உண்மையல்ல என்று வார்னர் பிரதர்ஸ் இப்போது அறிவித்து இருக்கிறது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிர்வாக உதவி தலைவர் ரிச்சர்ட் பாக்ஸ் கூறியதாவது:

"ஆக்கர் ஸ்டூடியோவுடன் நாங்கள் இணைந்து, தொடர்ந்து பணிபுரிகிறோம். எங்கள் 2 நிறுவனங்களும் இணைந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டன.

சரியான நேரத்தில், எங்கள் திட்டங்களை அறிவிப்போம். ஆக்கர் ஸ்டூடியோவில் இருந்து நாங்கள் விலகிவிட்டதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை," என்றார் ரிச்சர்ட் பாக்ஸ்.

இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது:

"ஆக்கர் ஸ்டூடியோவும், வார்னர் பிரதர்சும் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. எங்கள் 2 நிறுவனங்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

எங்களின் புதிய திட்டங்களை மிக விரைவில் அறிவிக்க இருக்கிறோம். எங்களுக்கு எதிராக வதந்திகளும், கற்பனை செய்திகளும் பரப்பப்பட்டுள்ளன. அதை யாரும் நம்ப வேண்டாம். இது குறித்து ஏற்கெனவே பல முறை நான் தெளிவாக அறிவித்துள்ளேன். ஆனால் உண்மையைச் சொல்லும்போது அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். வதந்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். என்னிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கலாம்...", என்றார் சௌந்தர்யா.

No comments:

Post a Comment