Please Visite here - www.cenimagallary.blogspot.com

Tuesday, May 26, 2009

அக்டோபரில் சாம்பியன்ஸ் லீக்: 12 அணிகள் பங்கேற்பு

இந்தியாவில் வரும் அக்டோபரில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20" தொடர் நடக்க உள்ளது. இதில் ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்ற டெக்கான், பெங்களூரு அணிகள் மற்றும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டில்லி அணி என 3 இந்திய அணிகள் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.

ஐ.பி.எல்., சார்பில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20" தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மும்பை பயங்கரவாத தாக்குதலால் தொடர் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு சாம்பியன் லீக் தொடர் வரும் அக். 8 முதல் 23ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதில் ஐ.பி.எல்.,-2ல் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ், 2 வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் நேரடியாக தேர்வு பெற்றன.

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டில்லி டேர் டெவில்ஸ் என இந்தியாவில் இருந்து மொத்தம் 3 அணிகளும், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் "டாப்-2" "டுவென்டி-20" அணிகள் மற்றும் நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் டுவென்டி-20' சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் என மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன.

பாக்., இல்லை: பாகிஸ்தான் அரசு அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா சென்று விளையாட அனுமதி கொடுக்காது. இதற்கான அணிகளை அனுப்ப வரும் 30ம் தேதி கடைசி நாள். இதுவரை பாகிஸ்தானில் இருந்து அணியை அனுப்புவதில் எந்த தகவலும் இல்லை என்பதால் அந்த அணி, இம்முறை தொடரில் பங்கேற்காது.

மோடி உறுதி: சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறியது: கிரிக்கெட்டை உலக அளவில் கொண்டு செல்ல சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20" போட்டிகள் உதவும். முதல் கட்ட சாம்பியன்ஸ் லீக் தொடரை எதிர்பாராத காரணங்களால் நடத்த முடியவில்லை.

ஆனால் இம்முறை இந்தியாவில் தொடரை வெற்றிகரமாக நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு லலித் மோடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment