ராஜாதி ராஜா படத்தில் சிகரெட் பிடித்தது போல பிடியுங்கள் என்று கூறி நடிகை மும்தாஜிடம் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஷக்தி சிதம்பரம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ராஜாதிராஜாவி்ல் ராகவ லாரன்ஸ் நடித்துள்ளார். இப்படத்தில் மும்தாஜ் உள்பட நான்கு பேர் நாயகிகள்.
மும்தாஜ் இப்படத்தில் வில்லத்தனமாக நடித்துள்ளார். படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியிலும் நடித்துள்ளார்.
கஞ்சா அழகியாக இருந்து, விபச்சார அழகியாக மாறி பின்னர் படிப்படியாக 'உயர்ந்து' அரசியல்வாதி ஆகி விடும் கேரக்டரில் நடித்துள்ளார் மும்தாஜ்.
படம் ஹிட் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சென்னையில் உள்ள மினி உதயம் தியேட்டரில் ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்க விரும்பினார் மும்தாஜ். இதற்காக அவரும், இயக்குநர் ஷக்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சென்றனர்.
யாருக்கும் தெரியாத வகையில் அமர்ந்து படம் பார்த்தார் மும்தாஜ். ஆனால் ரசிகர்கள் மும்தாஜ் வந்ததை மோப்பம் பிடித்து விட்டார்கள்.
இதையடுத்து மும்தாஜை சீண்டும் வகையில், படத்தில் மும்தாஜ் வசனம் பேசும்போதெல்லாம் பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்செட் ஆனார் மும்தாஜ்.
இடைவேளையின்போது நிலைமை மோசமானது. மும்தாஜை ரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்தனர். அவர்களை விலக்கி விட ஷக்தி சிதம்பரம் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் முடியவில்லை.
அப்போது குறும்புக்கார ரசிகர் ஒருவர் சிகரெட்டை எடுத்து மும்தாஜிடம் கொடுத்து படத்தில் வருவது போல தம் அடிங்க மேடம் என்று கேட்க கடுப்பான மும்தாஜ், நிஜத்தில் நான் புகை பிடிப்பதில்லை, படத்துக்காகத்தான் அவ்வாறு நடித்தேன் என்றார்.
ரசிகர்களிடம் இருந்து தப்பினால் போதும் என்று நினைத்த மும்தாஜ், அவர்கள் கோரிக்கையின்போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார்.
No comments:
Post a Comment