தமிழ் சினிமாவில் இது கல்யாண சீசன் போலும். நடிகை மீனாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. நடிகை அபிதாவுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது.
அவர்கள் எல்லாரும் திருணமத்திற்கு காத்திருக்க, நடிகை கார்த்திகாவோ காதலித்து வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணமும் பண்ணிவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகப்போகிறார். தமிழ் சினிமாவில் இரண்டு கார்த்திகா இருக்கின்றனர், இவர் நம் நாடு படத்தில் சரத்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆன கார்த்திகா. அதன் பின்பு திண்டுக்கல் சாரதியில் சந்தேகப்படும் கணவனுக்கு அழகு மனைவியாக வந்து நடிப்பில் அனைவரின் உள்ளத்தையும் அள்ளிக் கொண்டு போனார். இப்போது பாலைவனச்சோலை எனும் படத்தில் நடித்து வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்த மெரின் மேத்யூ என்பவர் கார்த்திகாவிடம் ரசிகனாக அறிமுகம் ஆனார். அடிக்கடி இருவரும் போனில் பேசுவது வழக்கம். இது பின்னாளில் காதலாக உருவெடுத்தது. இதை அறிந்த இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்து இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டனர்.
கார்த்திகா-மெரின் மேத்யூ திருமணம் கொல்லம் அருகே உள்ள தேவனக்கரை செயிட் மேரீஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு நடிகர் சுரேஷ் கோபி குடும்பத்துடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
கார்த்திகா தற்போது நடித்து வரும் மற்றும் ஒப்பந்தமாகி உள்ள படங்களை முடித்துக் கொடுத்து விட்டு கணவருடன் அமெரிக்கவில் செட்டில் ஆகிவிட இருக்கிறார்.
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா?
No comments:
Post a Comment