கிட்டத்தட்ட முழு நேர டப்பிங் கலைஞராகவே மாறிவிடுவார் போலிருக்கிறது ரஜினியின் மூத்த மகளும் நடிகர் [^] தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா.
செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு குரல் கொடுத்த ஐஸ்வர்யா தனுஷ், இப்போது எந்திரன் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் குரல் கொடுக்கிறார்.
அவரது குரல் ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால் அவரே பேசட்டும் என்று இயக்குநர் [^] ஷங்கர் கூறியுள்ளாராம். ஐஸ்வர்யா தனுஷுடன் சிறிது நேரம் பேசிய பிறகு, தனக்கு அவரே இனி வரும் தமிழ்ப் படங்களிலும் குரல் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் ஐஸ்வர்யா ராய்.
அதன்படி அவர் நடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு மெகா படமான மணிரத்னத்தின் ராவண் படத்திலும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் தருகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.
ஆனால் டப்பிங் குரல் கொடுப்பதை முழு நேரமாகத் தொடர முடியாது என்றும், ஐஸ்வர்யா ராய் விரும்பிக் கேட்டதாலேயே இந்த இரு படங்களுக்கும் குரல் தருவதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.
அடுத்து படம் இயக்கும் முயற்சியிலும் உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ் [^].
No comments:
Post a Comment