Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, May 4, 2009

ராஜேந்தருக்கு ஆதரவாக சிம்பு பிரச்சாரம்!

சென்னை: தன் தந்தை போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் 3 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார் சிலம்பரசன்.

நடிகர்-இயக்குநர் விஜய டி ராஜேந்தர் தனது லதிமுக சார்பில் கள்ளக் குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில்தான் விஜய்காந்தின் மச்சான் சுதீஷும் போட்டியிடுகிறார்.

கடந்த 15 தினங்களாக தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார் ராஜேந்தர். இந்த பிரச்சாரத்தில் ஆங்காங்கே அவருக்கும் விஜய்காந்த் கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தத் தொகுதியில் அப்பா ராஜேந்தரை ஆதரித்து 3 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்கிறார் சிலம்பரசன் என்கிற சிம்பு.

பிரச்சாரத்துக்கு வசதியாக இவருக்கு தனியாக திறந்த வேன் தரப்பட்டுள்ளதாம். நாளை முதல் பிரச்சாரம் தொடங்கும் சிம்பு, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆத்தூர், கெங்கவள்ளி மற்றும் ஏற்காட்டில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று டி ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment