"வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஹோட்டல் வாசம்... முன்பே ஒரு ஹோட்டல்தான் பெயரைக் கெடுத்தது. மீண்டும் அந்த மாதிரி ஆகிவிடக்கூடாது என மிகுந்த எச்சரிக்கையாகவே இருந்தேன்.
பயந்து பயந்து ஹோட்டல் மாறிக் கொண்டிருப்பதை விட இனி சொந்தமாக வீடு வாங்கிக் கொள்வது மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...", என்கிறார் த்ரிஷா.
தமிழில் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா, தனுஷுடன் ஆடுகளம், கவுதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலம் போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் த்ரிஷா தெலுங்கிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால் இவருக்கு ஆந்திராவில் சொந்த வீடு இல்லாததால் ஹோட்டலிலேயே தங்கி வந்தாராம். ஏற்கெனவே இவரைத் தொடர்புபடுத்தி ஒரு நிர்வாண வீடியோ மற்றும் படங்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
ஹோட்டலில் தங்குவதால்தான் இத்தனைப் பிரச்சினை என்பதால் இப்போது சொந்தமாகவே ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்கும் திட்டத்தில் உள்ளாராம் அவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இன்னும் எத்தனை நாளைக்கு சூட்கேஸும் கையுமாக ஹோட்டல் ஹோட்டலாக அலைவது... அதனால் ஹைதராபாத்தில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளேன்", என்றார்.
No comments:
Post a Comment