இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லூசி கார்டன். ஸ்பைடர்மேன் 3 படத்தில் ஜெனிபர் டுகான் என்ற பெண் நிருபர் வேடத்தில் நடித்திருந்தார். பாரீஸில் உள்ள தனது வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது 29வது பிறந்த நாள் இன்னும் 2 நாளில் வரவுள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்டு விட்டார் லூசி. தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை.
லூசி 2001ம் ஆண்டு பெர்ப்யூம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். 12 படங்களில் நடித்துள்ளார்.
பிரெஞ்சுப் பாடகர் செர்ஜி கெய்ன்ஸ்பெர்க் குறித்த படம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் லூசி தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
No comments:
Post a Comment